பரந்தூர் விமான நிலையம்.. 2 வாரத்தில் சிறப்புக்கூட்டம் நடத்தி முக்கிய முடிவு - மத்திய அமைச்சர் தகவல்!
சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்தது மாநில அரசு தான் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை அடுத்த பரந்தூரில் அமைக்கப்படும் விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு தமிழக அரசு கோரிய 'கொள்கையளவில் ஒப்புதல்' குறித்து விவாதிக்க டெல்லியில் விரைவில் ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் 'உதான் யாத்ரி கஃபே' திட்டத்தின் கீழ் மலிவு விலை உணவகத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேற்று தொடங்கி வைத்தார். உணவகத்தை தொடங்கி வைத்த பின்னர் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் நான்காவது பெரிய விமான நிலையமாக சென்னை விளங்குகிறது. சென்னை விமான நிலைய விரிவாக்க பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அப்பணிகள் ஃபேஸ் 1, பேஸ் 2 என்று இரு பணிகளாக நடந்து வருகின்றன. அதில் கட்டம் 1 நிறைவடைந்து செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. 2வது கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகளான இடங்கள் தேர்வு செய்வது முடிவடைந்துள்ளன. இரண்டாம் கட்ட பணிகளாக டெல்லியில் தனி ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரத்தில் டெல்லியில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு இடத்தை தேர்வு செய்து முடிவு செய்தது மாநில அரசு தான். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால், அது குறித்து மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும். எங்கள் வேலை சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்வதும், செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை மதிப்பிடுவதும் தான். மாநில அரசு எங்கெல்லாம் நிலத்தைக் காட்டுகிறார்களோ, அங்கெல்லாம் சாத்தியக்கூறு ஆய்வை நடத்தி, விமான நிலையத்தைக் கட்டுவதற்கு ஏற்றதா என ஆலோசனை கூறுவோம்.
நாடு முழுவதும் விமான நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு திட்ட மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. சென்னை விமான நிலையத்தை மேம்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம்." எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "தமிழ்நாட்டில் உதான் திட்டத்தில் நெய்வேலி, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் இருந்து விமான சேவைகள் இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளன. இதில் சேலம், சென்னை இடையே ஏற்கனவே விமான சேவைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்ததாக வேலூர், சென்னை இடையே விமான சேவைகள் தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் நடக்கின்றன. விரைவில் வேலூர், சென்னை இடையே உதான் திட்டத்தில் விமான சேவைகள் செயல்பாட்டிற்கு வரும். அதே போல, நெய்வேலியில் இருந்தும் விமான சேவைகள் தொடங்க இருக்கின்றன." என்றார்.
பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்தத் திட்டத்தால் அவர்கள் தங்கள் விவசாய நிலங்களையும் வீடுகளையும் இழக்க நேரிடும் என்று அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் மத்திய அமைச்சரின் கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications