தண்ணீரில் மிதக்கும் தனி உலகம்! சென்னையில் சொகுசு கப்பல் சுற்றுலா! ஜஸ்ட் இவ்வளவு தாங்க கட்டணம்!
சென்னை: சென்னையில் இருந்து புதுச்சேரி சென்று திரும்பும் வகையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.35,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இரண்டு நாள் பயணத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.35,000 என்றால் அதிகபட்ச கட்டணம் ரூ.1.50 லட்சம் வரை பல்வேறு பேக்கேஜ்களில் சேவை வழங்கப்படுகிறது.
நீங்கள் எந்தக் கட்டணப் பிரிவை தேர்வு செய்கிறீர்களோ, அதற்கேற்ப உங்களுக்கு கப்பலில் கவனிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொகுசு கப்பல்
சென்னையில் இருந்து 2 நாள் பயணமாக ஆழ்கடல் பகுதிக்கும், புதுச்சேரிக்கும் சென்று திரும்பும் வகையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. கார்டிலியா குரூஸ் என்ற அந்தக் கப்பல் 700 அடி நீளத்தில் பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. தண்ணீரில் தனி உலகமாக திகழும் அந்தக் கப்பலில் மொத்தம் 796 அறைகள் உள்ளன. 1950 பயணிகள் முதல் 2500 பயணிகள் வரை ஒரே நேரத்தில் அந்த சொகுசு கப்பலில் பயணிக்க முடியும்.

எல்லா வசதிகள்
உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள், திடையரங்குகள், 4 பெரிய உணவகங்கள், மதுபானக் கூடங்கள், ஸ்பா மற்றும் மசாஜ் நிலையங்கள், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, திருமணம் உள்ளிட்ட விஷேசங்களை நடுக்கடலில் கப்பலில் நடத்தும் வகையில் கலையரங்கங்கள் உள்ளிட்ட சகலவிதமான வசதிகளும் கார்டிலியா குரூஸ் சொகுசு கப்பலில் இடம்பெற்றுள்ளன. 600-க்கும் அதிகமான ஊழியர்கள் இதற்காக சொகுசு கப்பலில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அலுவல் மீட்டிங்
இதேபோல் அலுவலக மீட்டிங்குகள், விருந்து கேளிக்கை கொண்டாட்டங்கள் நடத்தவும் கப்பலில் அனுமதி தரப்படுகிறது. இதற்கு தனிக்கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிகிறது. முதற்கட்டமாக சென்னை புதுச்சேரி இடையே இயக்கப்படும் இந்தக் கப்பலுக்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. மனதை புத்துணர்ச்சி பெற வைக்கும் வகையில் கடல் வழி கப்பல் சுற்றுலாவுக்கு இளசுகள் முதல் பெரிசுகள் வரை ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

முன் பதிவு தொடக்கம்
சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சென்று திரும்பும் 2 நாள் சொகுசு கப்பல் சுற்றுலாவுக்கு இப்போது முன் பதிவுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அவசர சிகிச்சைக்கு தேவையான வசதிகளை செய்துள்ள கப்பல் நிறுவனம் பயணிகளின் நலன் கருதி மருத்துவர்களையும் அங்கு பணியமர்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications