தமிமுன் அன்சாரி எந்த விதத்தில் குறைந்துவிட்டார்? திமுக மீது கடுகடுக்கும் மஜக! என்ன பின்னணி?
சென்னை: மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியின் தாயார் அண்மையில் மறைந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை தவிர மற்ற எல்லா தலைவர்களும் இரங்கல் தெரிவித்த நிகழ்வை சுட்டிக்காட்டி மஜகவினர் திமுகவுக்கு கேள்விக்கணைகளை வீசியுள்ளனர்.
இத்தனைக்கும் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி தோழமை பாராட்டினார் தமிமுன் அன்சாரி. இப்போதும் அதிமுக அழைப்பு மேல் அழைப்பு விடுக்கும் நிலையிலும் எந்த முடிவும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார்.

இந்தச் சூழலில் தமிமுன் அன்சாரி தாயார் உம்மு சல்மா கடந்த வாரம் காலமானார். அவரது மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், சீமான், நெல்லை முபாரக், தனியரசு, கருணாஸ், நாராயணசாமி, ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், டி.ராஜா, கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், அன்புமணி ராமதாஸ், துரை வைகோ, வேல்முருகன், ஜவாஹிருல்லா, ஜான் பாண்டியன், என ஏறத்தாழ தமிழக அரசியல் களத்தில் உள்ள அனைத்து முக்கிய பிரமுகர்களும் அலைபேசி மூலமும், சமூக வலைதளங்கள் மூலமும் தங்கள் இரங்கலை தெரியப்படுத்தினர்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் மட்டும் இரங்கலோ, ஆறுதலோ தெரிவிக்காதது மனிதநேய ஜனநாயக கட்சியினர் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. முதல்வர் குறைந்தபட்சம் சமூக வலைதளப் பக்கத்தில் 2 வரியாவது இரங்கலை பதிவு செய்திருக்கலாம் என ஆதங்கப்படும் மனிதநேய ஜனநாயக கட்சியினர், ரங்கராஜ் பாண்டே தந்தை மறைந்த போது அவரது வீடு தேடிச் சென்று முதல்வர் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறிய நிகழ்வை சுட்டிக்காட்டி அவரை விட தமிமுன் அன்சாரி எந்த விதத்தில் குறைந்துவிட்டார் என சமூக வலைதளப் பக்கங்களில் கமெண்ட்கள் மூலம் விமர்சித்துள்ளனர்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications