சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எம்எல்ஏக்கள் விடுதி ஐடி ரெய்டு பற்றி தகவல் இல்லை: சத்யபிரதா சாஹு! அப்போ ரெய்டு நடத்தியது யார்?

Google Oneindia Tamil News

சென்னை: எம்எல்ஏக்கள் விடுதியில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து அறிக்கை வரவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு கூறியுள்ளார்.

சென்னையில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அளித்த பேட்டியில் கூறியதாவது: தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.132.91 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டதையடுத்து ரூ.65.01 கோடி திருப்பி கொடுக்கப்பட்டது.

Income tax officials didnt given report on raids in MLAs hostel

வருமான வரித்துறை மூலம் ரூ.55.02 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தபோது, சென்னை எம்எல்ஏக்கள் விடுதியில், நேற்று நடத்தப்பட்ட வருமான வரி சோதனை தொடர்பாக, சத்யபிரதா சாஹுவிடம் நிருபர்களிடம் கேட்டனர். ஆனால், அதுபோன்ற சோதனை குறித்து வருமான வரித்துறை, எந்த விதமான அறிக்கையையும் அளிக்கவில்லை என்று சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், தற்போது நடத்தப்படும் நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு, வருமான வரித்துறை தகவல் அளிக்க வேண்டும். ஆனால், அமைச்சர் உதயகுமார் அறை உட்பட 3 அறைகளில் நேற்று இரவு வருமான வரித்துறை ரெய்டு நடத்தியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு அப்படியான தகவல் அளிக்கப்படவில்லை.

திருவனந்தபுரம் கோயிலில் துலாபாரத்தின் போது விபத்து.. காங். வேட்பாளர் சசிதரூர் காயம் திருவனந்தபுரம் கோயிலில் துலாபாரத்தின் போது விபத்து.. காங். வேட்பாளர் சசிதரூர் காயம்

இதன்மூலம், அமைச்சர் உள்ளிட்டோரின் எம்எல்ஏக்கள் விடுதியில் சோதனை நடத்தியது வருமான வரித்துறைதானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

English summary
Tamilnadu chief election officer Satyabrata Sahoo says, income tax officials didn't given report on raids in MLAs hostel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X