ஐ.டி ரெய்டில் சிக்கிய ரூ.2.85 கோடி.. அதிமுக நிர்வாகிக்கு சொந்தமான நிறுவனத்தில் பறிமுதல்.. பரபர!
சென்னை: சென்னை பள்ளிக்கரணை அருகே அதிமுக நிர்வாகிக்கு சொந்தமான ஜல்லி, மணல் விற்பனை நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் ரூபாய் 2.85 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் உள்ள பி.எல்.ஆர் புளு மெட்டல்ஸ் ரெடிமிக்ஸ் மற்றும் ஜல்லி, மணல் விற்பனை நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2.85 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை சோதனை நடத்திய இந்த ரெடிமிக்ஸ் நிறுவனம், பல்லாவரம் லிங்கராஜ் என்பவருக்கு சொந்தமானது. இவர் அதிமுகவில் பொறுப்பில் இருப்பவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நாளை லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வருமான வரித்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டு கோடிக் கணக்கில் பணம் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நகை அடகு கடை உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
தீராம்பட்டியை சேர்ந்த அருள்பிரகாசம், மணப்பாறை மலையாண்டி தெருவில் அடகு கடை வைத்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி அருள்பிரகாசம் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த ரகசிய தகவலின்படி வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications