தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் திட்ட ஒப்பந்ததாரர் A1 சுந்தரவதனம் வீட்டில் வருமான வரி சோதனை
சென்னை: ஏ1 சைக்கிள் உரிமையாளர் சுந்தர பரிபூரணம் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். A1 சைக்கிள் உரிமையாளர் சுந்தர பரிபூரணம் தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றிருந்தார். தமிழ்நாடு முழுவதும் கெமிக்கல், மெட்டல் நிறுவனங்களிலும் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசு இலவச சைக்கிள் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், அரசு பள்ளிகள் அல்லது தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்கள் வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், வாகனம் இல்லாமல் பள்ளிக்கு வருவதற்கு சிரமப்படும் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் கிடைக்கும். இலவச சைக்கிள்களால் ஏராளமான மாணவ, மாணவியர் உரிய நேரத்தில் பள்ளிக்கு வந்து சேர முடியும்.

இலவச சைக்கிள் திட்டம் முதன்முதலில் பெண் மாணவர்கள் கல்வியைத் தொடர ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்டது. 2001-02 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. இருப்பினும், இந்தத் திட்டம் முன்பு உயர்நிலைக் கல்வி படிக்கும் SC / ST பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே இருந்தது.
முந்தைய திட்டம் அரசாங்கத்திற்கு வெற்றிகரமாக இருந்ததால், தற்போது தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாலினம் மற்றும் சாதி வேறுபாடின்றி இத்திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மற்றும் ஐடிஐ மாணவர்கள் - அரசுப் பள்ளிகளில் படிக்கும் விண்ணப்பதாரர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள். பள்ளிகளைத் தவிர, மாநிலத்தில் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் அல்லது ஐடிஐகளில் படிக்கும் தேர்வர்கள் விண்ணப்பித்து இந்த இலவச சைக்கிளை தமிழக அரசிடமிருந்து பெறலாம்.
11.78 லட்சம் விண்ணப்பதாரர்கள் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம் என்று தோராயமான மதிப்பீடுகள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கையில் பள்ளிகளைச் சேர்ந்த 5.06 லட்சம் மாணவர்களும் 6.49 லட்சம் பெண் மாணவர்களும் உள்ளனர். ஐடிஐகளில் இருந்து சுமார் 18,506 விண்ணப்பதாரர்கள் இந்த இலவச சைக்கிளைப் பெற முடியும்.

இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கான டெண்டர்கள் A1 சைக்கிள் நிறுவனமான சுந்தர பரிபூரணம் என்பவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, சைக்கிள் சப்ளைக்கான டெண்டர்களை பெற்றவர் இந்த சுந்தர பரிபூரணம். தற்போது திமுக ஆட்சி காலத்திலும் இலவச சைக்கிள் வழங்க சுந்தர பரிபூரணத்திற்கே டெண்டர்கள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சுந்தர பரிபூரணத்தின் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இலவச சைக்கிள் வழங்கும் ஒப்பந்தத்தை மொத்தமாக சுந்தர பரிபூரணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
இதே போல நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் சாலையில் உள்ள POEL கெமிக்கல் நிறுவனத்திலும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. POES கெமிக்கல் நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது ஐடி ரெய்டு வாரம் என்பது போல அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தற்போது இலவச சைக்கிள் ஒப்பந்ததாரர் வீட்டில், அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications