சி.ஆர்.பி.எப் வீரர்களுடன் கரூர் வந்த ஐடி அதிகாரிகள்.. 2-வது நாளாக நீடிக்கும் சோதனை
சென்னை: வருமான வரி சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் திமுகவினர் முற்றுகையிட்டதால் நேற்று பாதியிலேயே வருமான வரித்துறை சோதனை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்று சிஆர்.பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை, கரூர், கோவை என அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக், மற்றும் அவரது நண்பர் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

முதலில் செந்தில் பாலாஜி வீட்டிலும் இந்த சோதனை நடப்பதாக தகவல் வெளியானது. ஆனாலும் இந்த தகவலை மறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, எனது சகோதரர், உறவினர்கள், நண்பர்களின் வீடு மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்களின் இடங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எனது வீட்டில் சோதனை எதுவும் நடக்கவில்லை. சோதனை நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்" என்றார்.
இன்று காலை 2-வது நாளாக பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. விடிய விடிய நடைபெற்ற ஐடி சோதனை இன்றும் தொடர்ந்து வருகிறது. வருமான வரித்துறை சோதனைக்கு சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்டு சில இடங்களில் திமுகவினர் வாக்கு வாதம் செய்ததோடு காரையும் தாக்கினர். இதனால், நேற்று சில இடங்களில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
போலீசாருக்கு உரிய தகவல் தெரிவிக்காமலேயே ஐடி அதிகாரிகள் சோதனை நடத்த சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சிஆர்.பி.எப் அதிகாரிகள் பாதுகாப்புடன் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் இந்த சோதனைக்கு பாதுகாப்பாக சி.ஆர்.பி.எப் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வருமான வரித்துறை சோதனைக்காக சுமார் 100 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கரூரில் முகாமிட்டுள்ளனர். வருமான வரி சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் திமுகவினர் முற்றுகையிட்டதால் நேற்று பாதியிலேயே வருமான வரித்துறை சோதனை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்று சிஆர்.பிஎப் அதிகாரிகள் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications