Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தமிழர்களின் சுதந்திர போராட்டம் முறையாக ஆவணப்படுத்தப்படும்".. முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டு தியாகிகளின் மூச்சு காற்று மூலமே இந்தியாவின் சுதந்திரம் கட்டி எழுப்பப்பட்டது, இந்திய சுதந்திர போராட்டத்திற்கு பாடுபட்ட தமிழர்களின் பங்களிப்பு குறித்த ஆவணம் உருவாக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    75th Independence Day 2021 | CM Stalin hoisted Flag | Highlights | Oneindia Tamil

    நாடு முழுக்க இன்று இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று தேசிய கொடி ஏற்றி சிறப்பு உரை நிகழ்த்தினார். நாடு முழுக்க மாநில தலைநகர்களில் மாநில முதல்வர்கள் தேசிய கொடி ஏற்றி சிறப்பு உரையாற்றினார்கள். தமிழ்நாட்டில் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார்.

    ஆட்சி பொறுப்பேற்று சரியாக 101வது நாளில் காவல் துறையின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்று, முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக சுதந்திர உரையை நிகழ்த்தினார். சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு தொடங்கி கொரோனா பரவல் வரை பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.

    ஸ்டாலின் பேச்சு

    ஸ்டாலின் பேச்சு

    முதல்வர் ஸ்டாலின் இதில் தனது உரையின் போது, மேம்பட்ட தமிழ்நாட்டை உருவாக்க நினைக்கும் தமிழ்நாடு அரசுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். தமிழ்ச் சமூகமானது சிந்தனையால், பண்பாட்டால், நாகரீகத்தால், பழக்கவழக்கத்தால் உயர்வடைய வேண்டும். ஏற்றதாழ்வு அற்ற, உயர்வு தாழ்வு அற்ற ஒருமனித உரிமைச் சமூகமாக மாற்றவேண்டும். அனைவருக்கும் சமமான உரிமை அளிக்கும் சமூக நீதி கொண்டாட மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும்.

    ஆட்சி

    ஆட்சி

    நமது அரசு 6வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. அரை நூற்றாண்டு காலமாக நான் பொது வாழ்வில் இருக்கிறேன். இப்படிப்பட்ட நேரத்தில் எனக்கு கோட்டையில் கொடி ஏற்ற வாய்ப்பு கொடுத்த மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். என்னுடைய உழைப்பிற்கு சான்றிதழ் அளித்த மக்களுக்கு நன்றி. எல்லோருக்கும் முன் முதல் முதலாக விடுதலைக்காக போராடி மண்தான் தமிழ்நாடு. விடுதலை போராட்டத்திற்கான விதை தமிழ்நாட்டில் போடப்பட்டது. பூலித்தேவன் தொடங்கி பெரியார் வரை தமிழ்நாட்டில் பல தலைவர்கள் சுதந்திரத்திற்காக போராடினார்கள்.

    ஓய்வூதியம்

    ஓய்வூதியம்

    தமிழ்நாட்டு தியாகிகளின் மூச்சு காற்று மூலமே இந்தியாவின் சுதந்திரம் கட்டி எழுப்பப்பட்டது. அவர்களின் போராட்டம்தான் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு தூணாக இருந்தது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு குறித்த ஆவணம் உருவாக்கப்படும். இதற்கான முறையான ஆவணத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு வெளியிடும். விடுதலை போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 17 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

    கொண்டாட்டம்

    கொண்டாட்டம்

    விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினரின் ஓய்வூதியம் ரூ 9 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது. தொடக்க காலத்தில் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றுவதில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக வா.உ சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளை அரசு சார்பில் எழுச்சியோடு கொண்டாடுவோம். அவரின் பெருமைகளை மக்களிடம் கொண்டு செல்வோம். வெள்ளையனுக்கு எதிராக கப்பல் விட்டவர் வா.உ சிதம்பரனார். சுதேசி என்பது ஏட்டளவில் மட்டும் இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

    கொரோனா

    கொரோனா

    கொரோனா என்ற பெருந்தொற்று காலம் நமக்கு ஏகப்பட்ட படிப்பினைகளை கொடுத்துள்ளது. மருத்துவ நெருக்கடி, மனநல நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, சூழல் நெருக்கடி என பல நெருக்கடிகளை கொரோனா மக்களுக்கு கொடுத்துவிட்டது. இதில் இருந்து மக்களை மீட்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆட்சி பொறுப்புக்கு வந்த முதல் நாளில் இருந்தே கொரோனாவை கட்டுப்படுத்தும் பொறுப்பை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. அரசின் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகள், முன்கள பணியாளர்கள், மக்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆகிசிஜன்

    ஆகிசிஜன்

    தமிழ்நாட்டின் முதல்வராக நான் பதவி ஏற்று 101 நாட்கள் ஆகிவிட்டது. தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை, வெள்ளை அறிக்கை, பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது. மக்களை பாதுகாக்க கடந்த 101 நாட்களில் பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. ரேஷன் அட்டைகளுக்கு 4000 ரூபாய், 14 அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் அட்டைகளுக்கு கொடுக்கப்பட்டது, பெட்ரோல் விலை குறைப்பு, ஆவின் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு, திருநங்கைகளுக்கு, மாற்று திறனாளிகளுக்கு நகர பேருந்துகளில் கட்டமின்றி பயணம், உங்கள் தொகுதியில் முதல்வர் மூலம் மனுக்களுக்கு தீர்வு, கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை, அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் என்று பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது.

    நலத்திட்டங்கள்

    நலத்திட்டங்கள்

    3 கோடி பேருக்கு நாங்கள் தடுப்பூசி செலுத்தி இருக்கிறோம். ஆக்சிஜன் படுக்கைகளை உயர்த்தி இருக்கிறோம். வேக்சின் வீணடிக்கும் மாநிலம் என்பதை மாற்றி கொடுக்கப்பட்ட வேக்சினை விட கூடுதலாக மக்களுக்கு செலுத்தி மற்ற மாநிலங்களுக்கு எடுத்துகாட்டாக மாறி இருக்கிறோம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னுதாரணமாக மாறியுள்ளது. வளமான, சமமான தமிழ்நாட்டை உருவாக்க அரசு முயன்று வருகிறது. தமிழர்களுக்கும் மகாத்மா காந்திக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. அவருக்கு தமிழர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தார்.

    தமிழ் மொழி

    தமிழ் மொழி

    ஐரோப்பாவிற்கு இத்தாலி மொழி எப்படியோ அப்படித்தான் தமிழும் இந்தியாவிற்கு என்றார். தமிழின் மீது அவர் நெருங்கிய அன்பு கொண்டு இருந்தார். காந்தியின் மேலாடை துறப்பிற்கு தமிழ்நாடுதான் காரணமாக இருந்தது. சாதி, மதம், இனம் குறித்த சவால்களை எதிர்கொண்டு இருக்கும் இந்தியாவிற்கு காந்தி என்ற ஆயுதம்தான் ஒரே வழி. காந்தியின் பண்புகளை இளைஞர்களிடம் கொண்டு செல்வோம். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள், என்று முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+