சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அகால மரணங்கள்... சூரிய கிரகண பாதிப்பு... அண்டை நாடுகளின் வம்புச்சண்டை - பஞ்சாங்கம் கணிப்பு

அண்டை நாடான சீனா, பாகிஸ்தான், போன்றவை வலுக்கட்டாயமாக சண்டைக்கு வர நேரும் என பஞ்சாங்கம் எச்சரித்தது போலவே எல்லைப்பகுதியில் தாக்குதலைத் தொடங்கி பதிலடி வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: மழை, புயல், வெள்ளம் பற்றி கணித்த பஞ்சாங்கம் இந்தியா சீனா எல்லைப்பகுதியில் போர் பதற்றம் ஏற்படும் என்றும் அண்டை நாடுகள் வம்புச்சண்டைக்கு வரும் என்றும் கணித்திருந்தது. கடந்த சில வாரங்களாகவே எல்லைப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது ராணுவ வீரர்கள் உயிர்பலியாகும் அளவிற்கு சண்டை நடந்துள்ளது. லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

Recommended Video

    Mayan Calendar Prediction : வரும் 21ம் தேதியோடு உலகம் அழிகிறதா? மாயன் காலண்டர் சொல்வது உண்மைதானா?

    இந்திய படைகள்தான் எல்லைதாண்டி வந்து சீன படைகள் மீது தாக்குதல் நடத்தியதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது இந்த தகவலை சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. எல்லையில் பதற்றம் தணிந்து அமைதி நிலவுவதாக தெரிவித்த நிலையில் தற்போது மீண்டும் மோதல் ஏற்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    India China border tension Tamil Panchangam prediction

    இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் இந்திய ராணுவத்தினர் சாலை பணிகளை மேற்கொண்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. லடாக் எல்லையில் கடந்த மே மாதம் பாங்கோ லேக் பகுதியில் இரு தரப்பினரும் மோதி கொண்டனர். இதில் இரு தரப்பினரும் காயமடைந்தனர். இந்த நிலையில் உயிர்பலிகள் ஏற்படும் அளவிற்கு மோதல் நிகழ்ந்துள்ளது எல்லைப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளளது.

    இந்த போர் பதற்றம் எல்லைகளில் நடைபெறும் சண்டை பற்றி வாக்கிய சர்வமுகூர்த்த பஞ்சாங்கம் ஏற்கனவே கணித்திருந்தது. அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் போன்றவை வலுக்கட்டாயமாக சண்டைக்கு வரும். உலக நாடுகளில் இந்தியாவின் பெயரை கெடுக்கும் முயற்சி தோல்வியில் முடியும் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நேபாளம் - பாக். - சீனா.. ஒரே சமயத்தில் இந்தியாவை எதிர்க்கும் 3 நாடுகள்.. எப்படி ஒன்றாக திரண்டது? நேபாளம் - பாக். - சீனா.. ஒரே சமயத்தில் இந்தியாவை எதிர்க்கும் 3 நாடுகள்.. எப்படி ஒன்றாக திரண்டது?

    போர் பதற்றம் மட்டுமல்லாது நிகழப்போகும் சூரிய கிரகணம் பற்றியும் அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது பற்றியும் பஞ்சாங்கம் கணித்திருக்கிறது. சூரிய கிரகணத்தால் சூறாவளி காற்று பயம், ஆலங்கட்டி மழை, புழுதிக்காற்றால் கடும் பாதிப்பு ஏற்படும். இயற்கை சீற்றம் பாதிப்பு ஏற்படும் தானியங்களின் விலை உயரும் எனவும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

    English summary
    India China border tension Tamil Panchangam prediction
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X