பிரதமர் மோடியை பின்லேடனுடன் ஒப்பிட்டு விமர்சிப்பதா? பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்டு பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவால் பூட்டோவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தீவிரவாத நாடு என முத்திரை குத்தப்பட்டு விட்டதாலும், பழைய காலத்தை போல தீவிரவாத தாக்குதல்களை நடத்த முடியாத விரக்தியிலும் பாகிஸ்தான் இவ்வாறு பேசி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும், தீவிரவாதத்தால் பாகிஸ்தான் திவாலானதை போல, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவால் பூட்டோவின் தலையும் திவாலாகிவிட்டதாக இந்தியா விமர்சி்ததுள்ளது.

முற்றும் இந்தியா - பாக். மோதல்
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இந்தியாவுக்கு தலைமை பதவி கிடைத்ததை பாகிஸ்தானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் இந்தக் கூட்டம் தொடங்கிய நாள் முதலே, இந்தியாவை பாகிஸ்தான் கடுமையாக விமர்சித்து வருகிறது. காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடப்பதாகவும் அந்நாடு குற்றம்சாட்டியது. இதற்கு இந்தியாவும் கடுமையாக பதிலடி கொடுத்தது. "பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் எல்லாம் ஐநா சபையில் பேசவே கூடாது" என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காட்டமாக பதிலளித்தார். மேலும், தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக பாகிஸ்தான் விளங்குவதாகவும் அவர் கூறினார்.

மோடியை பின்லேடனுடன் ஒப்பிட்ட பாக்.,
இந்தியாவின் இந்த பதிலடி பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்தியது. இதனால் விரக்தி அடைந்துள்ள பாகிஸ்தான், இந்தியா மீது நேற்று தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைத்தது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவால் பூட்டோ நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், "ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு பாகிஸ்தான்" என இந்தியா கூறியது பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர் இன்னும் உயிருடன் இருக்கிறார். அவர்தான் இந்தியாவின் பிரதமர்" என பிலாவால் பூட்டோ கூறினார்.

"விரக்தியில் பாகிஸ்தான்"
இந்நிலையில், பாகிஸ்தானின் இந்த விமர்சனம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தானின் இந்த விமர்சனம் மிகவும் தரம் தாழ்ந்தது. தன் மீது தீவிரவாத நாடு என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டதாலும், பழைய காலங்களை போல தீவிரவாதத்தை பயன்படுத்த முடியவில்லையே என்ற விரக்தியிலும் பாகிஸ்தான் உள்ளது. அந்த விரக்தியின் வெளிப்பாடாகவே பாகிஸ்தானின் இந்த விமர்சனத்தை கருத வேண்டியுள்ளது. மும்பை, நியூயார்க், புல்வாமா, பதான்கோட், லண்டன் போன்ற நகரங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறு உலகம் முழுக்க தீவிரவாத தடங்களை பதித்த பாகிஸ்தானை தீவிரவாத நாடு என்றுதான் சொல்ல முடியும். அந்த வார்த்தை பிடிக்கவில்லை என்றால் தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.

"மூளையும் திவாலாகி விட்டது"
உலகில் எந்த நாட்டுக்கும் இல்லாத பெருமை பாகிஸ்தானுக்கு இருக்கிறது. அந்த நாட்டில் தான் ஐநாவால் தடைவிதிக்கப்பட்ட 126 தீவிரவாதிகளும், 26 தீவிரவாத இயக்கங்களும் உள்ளன. தீவிரவாதத்தை பயன்படுத்தி திவாலானதுதான் பாகிஸ்தானுக்கு மிச்சம். திவாலான நாட்டின் அமைச்சராக இருக்கும் பிலாவால் பூட்டோவுக்கு தற்போது மூளையும் திவாலாகிவிட்டது. அதனால்தான் இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகளை அவர் பேசி வருகிறார். அது சரி.. தீவிரவாத எண்ணம் கொண்டவர்களிடம் தரம் தாழ்த்த பேச்சுகளை தவிர வேறு எதை நம்மால் எதிர்பார்க்க முடியும்? என இந்தியாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம்












Click it and Unblock the Notifications