டேஞ்சர் MKIII.. பவர்புல் ஆயுதத்தை சோதனை செய்ய போகும் இந்தியா.. வாயடைத்து நிற்கும் சீனா, பாகிஸ்தான்
சென்னை: இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) மூலம் உருவாக்கப்பட்ட Pinaka MkIII என்ற ராக்கெட் சிஸ்டம் விரைவில் சோதனை செய்யப்பட உள்ளது. முழுமையாக உருவாக்கப்பட்டு உள்ள இந்த சிஸ்டம் விரைவில் சோதனை செய்யப்பட உள்ளது.
இந்த ராக்கெட் சிஸ்டம் 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் ராக்கெட்டுகளை ஏவக்கூடிய லாஞ்சர் ஆகும். இந்திய ராணுவத்தில் அது இணைக்கப்பட்ட பின் அதிக ஆற்றல் கொண்டதாக இருக்கும். இந்திய ராணுவத்திற்கு புதிய பலத்தை தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக சீனா, பாகிஸ்தானில் எல்லையில் உள்ள ராணுவ தளவாடங்களை இதனால் தாக்க முடியும்.
Pinaka MkIII என்றால் என்ன ?
பினாகா எம்கேIII என்பது பல பேரல்களை கொண்ட ராக்கெட் லாஞ்சர் (எம்பிஆர்எல்) அமைப்பாகும். இது புனேவில் உள்ள டிஆர்டிஓவின் ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (ARDE) மற்ற சில ஆராய்ச்சி ஆய்வகங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. இது பினாகா குடும்பத்தில் மிகவும் மேம்பட்ட பதிப்பாகும், இது முந்தைய வகைகளான எம்கேஐ (40 கிமீ வரம்பு), எம்கேஐஐ (60-90 கிமீ) மற்றும் வழிகாட்டப்பட்ட பினாகா (75-90 கிமீ) ஆகியவற்றை விட கணிசமாக மேம்பட்டது.

பலன்கள்
பினாகா எம்கேIII 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ராக்கெட்டுகளை ஏவக்கூடியது. இது 250 கிலோ எடையுள்ள ராக்கெட்டுகளை சுமந்து தாக்கும் திறன் கொண்டது. எதிரி நாட்டு கட்டளை மையங்கள், பதுங்கு குழிகள் மற்றும் விநியோக மையங்களை அழிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.
300 மிமீ விட்டம் கொண்ட ராக்கெட்டுகளை பயன்படுத்த முடியும். இது பழைய 214 மிமீ பதிப்பை விட பெரியது. இது அதிக எரிபொருள் மற்றும் மேம்பட்ட வழிகாட்டுதல் அமைப்புகளை கொண்டது.
இதில் லேசர்-கைரோ அமைப்பு உள்ளது. இதனால் துல்லியமாக தாக்க முடியும். மற்றும் மைக்ரோஸ்ட்ரிப் ஆண்டெனாக்கள் உள்ளன என்பதால் எந்த டார்கெட்டும் மிஸ் ஆகாது. இது 10 மீட்டருக்கும் குறைவான உயர் துல்லியத்தை அளிக்கிறது. பழைய எம்கேஐ சுமார் 500 மீட்டர் வரை மிஸ் ஆக கூடியது. அதாவது இலக்கை விட 500மீக்கு முன்போ, பின்போ தாக்கும். ஆனால் இந்த 10 மீட்டருக்கும் குறைவான பிழையை மட்டுமே கொண்டு இருக்கும் என்பதால் இலக்கை கண்டிப்பாக தாக்கும்.
ஏற்கனவே உள்ள பினாகா ஏவுகணைகளை பினாகா எம்கேIIIவை பயன்படுத்தி சுட முடியும், இது கூடுதல் செலவுகளைக் குறைக்க உதவுகிறது. ஒவ்வொரு ஏவுகணையும் 8 வழிகாட்டப்பட்ட ராக்கெட்டுகளை சுமந்து செல்ல முடியும், அவை 700×500 மீட்டர் பரப்பளவை வெறும் 44 வினாடிகளில் அழிக்கும் திறன் கொண்டவை.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) சார்பாக Pinaka MkIII என்ற ராக்கெட் சிஸ்டம் சோதனை செய்யப்பட உள்ளது. முழுமையாக உருவாக்கப்பட்டு உள்ள இந்த சிஸ்டம் விரைவில் சோதனை செய்யப்பட உள்ளது. இது இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலத்தை, புதிய பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications