அந்த தமிழ்நாடு வீரரிடம் ஜாக்கிரதை.. பாக். வீரர்களை எச்சரிக்கும் முன்னாள் ஜாம்பவான்.. செம பின்னணி!
சென்னை: பாகிஸ்தானுக்கு எதிரான டி 20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இன்று தமிழ்நாடு வீரர் வருண் சக்ரவர்த்தி மிகப்பெரிய கேம் சேஞ்சராக இருப்பார் என்று கணிக்கப்படுகிறது. பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் சிலர் இதே கருத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி 20 உலகக் கோப்பை ஆட்டம் இன்று நடக்க உள்ளது. இந்தியாவின் முதல் லீக் ஆட்டம் இது என்பதால் வெற்றியோடு தொடரை தொடங்கும் திட்டத்தில் உள்ளது. தோனி ஆலோசகர், பல புதிய வீரர்களின் வருகை என்று இந்திய அணி மிக வலிமையான அணியாக இருக்கிறது.
பாகிஸ்தானும் பாபர், ரிஸ்வான், சாமான் என்று பல அதிரடி வீரர்களை கொண்டு இருக்கிறது. இதனால் எப்போதும் போல பாகிஸ்தானை இந்தியா அவ்வளவு எளிதாக இன்று வீழ்த்திவிட முடியாது.

வருண்
டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி மிக முக்கியமான வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஒவ்வொரு போட்டியிலும் மிக சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். கொல்கத்தா அணியில் தற்போது வருண்தான் கேம் சேஞ்சராக திகழ்ந்து வருகிறார். இந்திய டி 20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேம் சேஞ்சர்
தமிழ்நாடு வீரரான இவரை பார்த்து பாகிஸ்தான் படை கொஞ்சம் நடுக்கத்தில் உள்ளது. இவரை அவ்வளவு எளிதாக ரீட் செய்ய முடியாது. கடைசி நேரத்தில் எந்த பக்கம் பந்து ஸ்விங் ஆகிறது என்பதே தெரியாத அளவிற்கு மிஸ்ட்ரி ஸ்பின் பவுலரான வருண் பவுலிங் செய்வார். இவரின் பவுலிங்கை ரீட் செய்ய முடியாது என்று ஐபிஎல்லில் ஆடிய பல வெளிநாட்டு வீரர்களே குறிப்பிட்டுள்ளனர்.

வருண் ஆட்டம்
இந்த நிலையில்தான் வருண் சக்ரவர்த்தி குறித்து பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் பாகிஸ்தான் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், பாகிஸ்தானும் இந்தியாவும் அதிக போட்டிகளை நேருக்கு நேர் ஆடவில்லை. இரண்டு அணியிலும் பல இளம் வீரர்கள் இருக்கிறார்கள். பல புதிய வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் இரண்டு அணிக்கும் இந்த மேட்ச் சவாலானதாக இருக்கும். இரண்டு அணியும் கிட்டத்தட்ட சம பலத்துடன்தான் இருக்கிறது.

சவால்
ஆனால் பாகிஸ்தான் அணிக்கு பெரிய சவால் என்றால் அது ஆப் ஸ்பின் பவுலர் வருண் சக்ரவர்த்திதான். வருண் சக்ரவர்த்தியின் பவுலிங் மிகவும் வித்தியாசமாக உள்ளது. அவரின் பவுலிங்கை அவ்வளவு எளிதாக ரீட் செய்ய முடியாது. அவர் மிஸ்ட்ரி ஸ்பின் பவுலிங் செய்கிறார்.

பாகிஸ்தான் வீரர்கள்
அவரின் பவுலிங்கை இதுவரை பாகிஸ்தான் வீரர்கள் எதிர்கொண்டது இல்லை. அதோடு வருண் சக்ரவர்த்தி துபாயில் ஆடிய அனுபவம் கொண்ட வீரராக இருக்கிறார். இதனால் அவரை பாகிஸ்தான் வீரர்கள் கவனமாக ஆட வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி ஆடிய போட்டிகளை பார்த்து அவரின் பவுலிங்கை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

சிக்கல்
அவர் பவுலிங் செய்தால் பாகிஸ்தான் அணிக்கு சிக்கலாக இருக்கும். முக்கியமாக மிடில் ஆர்டர் வீரர்களுக்கு அது பெரிய சிக்கலாக இருக்கும். இந்த தொடரில் இந்திய அணிதான் நம்பர் 1 அணி. இரண்டாவது இடத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணிதான் இருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் செமி பைனல் செல்லும் வாய்ப்புகள் உள்ளன என்று வாசிம் அக்ரம் தெரிவித்து உள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications