உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை.. இந்திய வானிலை மையம்
Recommended Video
சென்னை: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்துபோய்விட்டது. கடந்த 2 ஆண்டுகளாக மழையில்லாமல் சென்னை உள்ளிட்ட இடங்கள் தவித்து போயுள்ளன. போதாக்குறைக்கு வாட்டி எடுக்கும் வெப்பம் வேறு.
கோடை தொடங்கியவுடன் ஃபனி புயல் போக்கு காட்டி விட்டு ஒடிஸா பக்கம் அழையா விருந்தாளியாக சென்றுவிட்டது. இதனால் கோடை வெப்பம், புயல் திசை மாறியதால் ஏற்பட்ட அனல்காற்று, கத்தரி வெயில் ஆகிய அனைத்தும் ஒரு சேர வந்து மக்களை வாட்டி வதைத்து வந்தது.

வானிலை மையம்
இதில் கத்தரி வெயில் முடிந்துவிட்டது. எனினும் வெயில் தொடர்ந்து சென்ட்சுரியை தாண்டி வருகிறது. இதனால் மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே வர வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

அரை நாள்
இந்த நிலையில் 196 நாட்களாக சென்னையில் மழை இல்லாததால் தண்ணீர் பஞ்சம் கோர தாண்டவம் ஆடி வருகிறது. தண்ணீர் பஞ்சத்தால் ஹோட்டல்கள், மேன்ஷன்கள் மூடப்பட்டு வருகின்றன. அது போல் சில பள்ளிகளுக்கும் அரை நாள் விடுப்பு விடப்பட்டுள்ளது.

பரவலாக மழை
இந்த நிலையில் இன்றைய தினம் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி இன்று சென்னையில் தாம்பரம், பல்லாவரம், போரூர், நசரத்பேட்டை, குரோம்பேட்டை, தரமணி, கோவிலம்பாக்கம், குன்றத்தூர், திருமழிசை, பெருங்குடி, மேடவாக்கம், காஞ்சிபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

வங்கக் கடல்
வெப்பச்சலனத்தால் பெய்த இந்தமழை இன்னும் 6 நாட்களுக்கு விட்டு விட்டு பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்தது.

வடக்கு வங்கக் கடல்
இந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில் தென்மேற்கு பருவமழை காரணமாக வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இரு நாட்களுக்கு மழை
இது மேற்கு திசை நோக்கி நகரும். அப்போது கடல் காற்று தமிழகத்திற்குள் வரும். இதனால் ஓரளவு மழை பெய்யும், வெப்பமும் தணியும். இதனால் தமிழகத்தில் சென்னை, வடமாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications