இப்படி ஒரு பிரதமரா? அமெரிக்காவில் பொய்.. சாதி, மத மோதலை தடுக்காத மோடி! லிஸ்டு போட்டு சாடிய வன்னியரசு
சென்னை: இந்தியாவில் நடக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்லி இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "இந்தியாவின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த 21.6.2023 அன்று ஐ.நா சபை வளாகத்தில் யோகா தின விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அமெரிக்க பெண் ஊடகவியலாளர் ஒருவர்,
இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு திரு.மோடி கண்களை விரித்து,"நீங்கள் கேட்ட கேள்வி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா சனநாயக நாடு. ஜனநாயகம் எங்கள் ரத்தத்தில் உள்ளது. நாங்கள் ஜனநாயகத்தை சுவாசித்துக் கொண்டே வாழ்கிறோம். இது எங்கள் அரசியலமைப்பிலேயே உள்ளது. மனித உரிமைகள் இல்லாவிட்டால் ஜனநாயகம் இல்லை. ஜனநாயகமாக வாழும்போது அங்கு பாகுபாடு என்ற பிரச்சினைக்கே இடமில்லை. சாதி, மதம், பாலினம் ஆகிய பாகுபாடுகளுக்கு இந்தியாவில் முற்றிலும் இடமில்லை" என்றார்.
திரு.மோடியின் இந்த பதிலை கேட்ட அமெரிக்க ஊடகவியலாளரே சிரித்து போயிருப்பார். ஏனென்றால், இந்தியாவில் நடக்கும் மத மோதல்களையும் சாதி மோதல்களையும் ஊக்கப்படுத்துபவராகவே மோடி இருந்துள்ளார் என்பதை பிபிஐ ஆவணப்படம் அம்பலப்படுத்தியது. இதை மையப்படுத்தியே அமெரிக்க ஊடகவியலாளர் அந்த கேள்வியை எழுப்பி இருக்கக்கூடும்.
ஆனால், திரு.மோடியோ எது குறித்தும் கவலை கொள்ளாமல் ஐநா வளாகத்தில் பொய்யை சொல்லி உள்ளார். அதுவும் மணிப்பூரில் கிறித்தவ குக்கிகளுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கும் போதே அப்பட்டமான பொய்யை துணிந்து சொல்லியிருப்பது பிரதமருக்கே அழகா? இதுவரை 100க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கள்ளமவுனம் காப்பது ஞாயமா?அதை விட இந்திய நாடாளுமன்றத்தில் மத மோதல்கள் குறித்த கேள்விக்கு கடந்த 5 ஆண்டுகளாக நடைப்பெற்ற மத மோதல்களை பட்டியலிட்டுள்ளது உள்துறை அமைச்சகம். கடந்த மார்ச்29,2022 அன்று உள்துறை அமைச்சர் அமிதஷாவே மத மோதல்கள் நடப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
அது மட்டுமல்ல, ஜெய்ஶ்ரீராம் முழக்கமிடச்சொல்லி சங்பரிவாரக் கும்பலால் நடத்தப்படும் கும்பல் படுகொலைகளை மறைக்க முடியுமா?மாட்டுக்கறி வைத்திருந்ததாக வீட்டுக்குள் புகுந்து கடந்த செப்டம்பர் 28 ,2015 அன்று முகமது அக்லாக் சைபியை படுகொலை செய்ததை மறைக்க முடியுமா?
அமெரிக்காவில் போய்
— வன்னி அரசு (@VanniKural) June 24, 2023
பொய் சொல்லலாமா
மோடி?
…………….:…..,……
இந்தியாவின் தலைமை அமைச்சர் @narendramodi அவர்கள் கடந்த 21.6.2023 அன்று ஐ.நா.சபை வளாகத்தில் யோகா தின விழாவில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அமெரிக்க பெண் ஊடகவியலாளர் ஒருவர்,
இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான… pic.twitter.com/ayaraR56GM
இப்படியான மத பயங்கரவாத படுகொலைகளுக்கு ஊடாக, சாதியின் பெயரால் இந்தியா முழுக்க நடக்கும் ஆணவப் படுகொலைகளை பட்டியலிட்டால் திரு.மோடி பதில் சொல்ல முடியுமா? மோடியின் அமெரிக்க பேச்சு என்பது பொய்களால் தயாரிக்கப்பட்ட ஏமாற்று உரை. இந்தியாவின் அவமானங்களாக இருக்கும் சாதி, மத மோதல்களை தடுக்க முடியாத பிரதமர் இந்தியாவில் மோடியாக மட்டுமே இருக்க முடியும். மோடி பிரதமராக தொடருவது இந்தியாவின் சாபக்கேடு!" என்று தெரிவித்து உள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications