சென்னை: மெர்சிலாவாதீங்க… வலி மாமே வலி... சளி மாமே சளி.. பட்டையை கிளப்பும் கொரோனா வீடியோ!
சென்னை: கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள வலி மாமே வலி என்ற வீடியோ சக்கை போடு போடுகிறது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை செல்கிறது.
அந்தந்த மாநில அரசுகள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவைகள் அறிவுறுத்தப்படுகின்றன.

2 லட்சம்
கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சம் பேருக்கு இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும்.

சென்னை
சமூக இடைவெளி அவசியம் என்று பலரும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை மண்டலத்தைச் சேர்ந்த தென்னிந்திய ரயில்வே படையினர் வெளியிட்டு உள்ள வலி மாமே வலி என்ற பாடல் பட்டையை கிளப்புகிறது.

சென்னை தமிழ்
பக்கா சென்னை தமிழில் துள்ளல் பாடல் வரிகளுக்கு ஏற்ப அவர்கள் ஆடிய ஆட்டம் இணையத்தில் மாஸ் காட்டுகிறது. இந்த கானா பாடல் மற்றும் நடனத்தை அவர்கள் தங்கள் யூடியூபில் வெளியிட்டு அசத்தி உள்ளனர். கிட்டத்தட்ட 2 நிமிடம் 24 வினாடிகள் ஓடும் இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

ரசித்தல்
பாரீஸ் ஜெயராஜ் படத்திற்காக சந்தோஷ் நாராயணன், கானா முத்து ஆகியோர் பாடிய பாடல்தான் புளி மாங்க புளிப் பாடல். இந்த பாடல் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமடைந்துள்ளது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிப்பதால் இந்த பாடல் மெட்டில் கொரோனா பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications