ரயிலில் டிக்கெட் புக் பண்ணுறது ஈசியாகுது.. ஒரு மாதத்தில் சூப்பர் ஆப்.. பயணிகளுக்கு குட் நியூஸ்
சென்னை: ரயில்வேயில் டிக்கெட் புக்கிங், டிராக்கிங், முன்பதிவு இல்லாத டிக்கெட் புக்கிங் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு செயலி உள்ள நிலையில், இவை அனைத்தையும் ஒரே குடையின் கீழ் வந்து சூப்பர் ஆப் அறிமுகம் செய்ய ரயில்வே முடிவு செய்தது. இந்த ஆப் டெவலப் செய்யும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அடுத்த மாதம் இறுதியில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிபார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பயணிகளின் பயண தேவையை பெரிதும் தீர்த்து வைப்பது ரயில்வேதான். தினமும் லட்சக்கணக்கான பயணிகளில் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்கிறார்கள். ரயில்வே டிக்கெட் கவுண்டருக்கு சென்று டிக்கெட் புக்கிங் செய்வதை விட ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஆப் வழியாகவே பெரும்பாலான பயணிகள் டிக்கெட் புக்கிங் செய்கிறார்கள்.

தற்போது அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டதால், பெரும்பாலானோர் ஐஆர்சிடிசி செயலி மூலமாகவே டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள். அதுபோக முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டை புக்கிங் செய்ய யுடிஎஸ் செயலி, பி.என்.ஆர் ஸ்டேட்டஸ் செக் செய்ய தனியாக ஒரு செயலி என ரயில்வேயின் சேவைகள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக செயலியை டவுன்லோடு செய்து பயணிகள் பயணித்து வருகிறார்கள்.
ரயில்வே செயலிகளுக்க்கு தனித்தனியாக செயலியை டவுன்லோடு செய்து பார்க்க வேண்டியிருப்பதால், பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, இவை அனைத்திற்கும் ஒரே செயலியாக சூப்பர் ஆப் - பை உருவாக்கும் முயற்சியில் ரயில்வே ஈடுபட்டது. இந்த சூப்பர் ஆப் செயலி அடுத்த மாதம் இறுதியில் பயன்பாடுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயலியை CRIS டெவலப் செய்துள்ளது.
பிளாட்பார்ம் டிக்கெட் முதல் ரயில்வே பிஎன்.ஆர். செக்கிங் வரை அனைத்தையும் ரயில்வேயின் ஒரே சேவையில் பெற்றுக்கொள்ளலாம் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது டிக்கெட் புக்கிங் செய்யும் போது சில நேரங்களில் பணம் பிடித்துக் கொண்டு டிக்கெட் புக்கிங் ஆகாமல் போகிறது. இத்தகைய பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணும் விதமாக சூப்பர் ஆப் செயலி இருக்கும் என்பதால், இனி டிக்கெட் புக்கிங் எளிதாகும் என்று பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சூப்பர் ஆப் செயலியில், ஐஆர்சிடிசி டிக்கெட் புக்கிங் ஆப், உணவு டெலிவரி ஆப், ரயில் மடாட் (புகார்களுக்கான செயலி) யிடிஎஸ் (முன்பதிவு இல்லாத டிக்கெட்டிற்கான ஆப் ), டிரெயின் ஸ்டேடஸ் செக் செய்யும் ஆகியவை அனைத்தும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஐஆர்சிடிசி ரயில்வே செயலியை 1 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். ஐஆர்சிடிசிக்கு 1,116 கோடி ரூபாய் கடந்த நிதி ஆண்டில் வருவாய் ஈட்டியது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications