தட்கல் டிக்கெட் எடுக்கனும்னா உடனே ஆதாரை இணைச்சிடுங்க.. ஜூலை 1 முதல் அமலாகும் அதிரடி மாற்றம்
சென்னை: ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும். ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, இனி பயனர்கள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம் ஆகிறது.
இந்தியாவில் போக்குவரத்து அமைப்பின் உயிர் நாடியாக இருப்பது ரயில்வேதான். நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களை பல கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள். தொலை தூர பயணம் என்றால் பயணிகள் முதலில் தேர்வு செய்வது ரயில்களைத்தான்.

தட்கெல் டிக்கெட் புக்கிங்
ரயில்களை பொறுத்தவரை தற்போது 60 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதனால் முன்கூட்டியே திட்டமிடும் பயணிகள், 2 மாதத்திற்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்துவிடுவது வழக்கம். முக்கியமான வழித்தடங்களில் முன்பதிவு தொடங்கிய சில நட்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும்.
அதாவது சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் கன்னியாகுமரி அதிவிரைவு ரயில், நெல்லை சூப்பர் பாஸ்ட், அனந்தபுரி, வந்தே பாரத், செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் எல்லாம் டிக்கெட் கிடைப்பது பெரிய பாக்கியம்தான் என சொல்லும் அளவுக்கு டிக்கெட்டுகள் மின்னல் வேகத்தில் காலியாகிவிடும். கடைசி நேரத்தில் டிக்கெட் எடுக்க பிளான் போடுபவர்கள் தட்கல் டிக்கெட்டை முயற்சிக்கிறார்கள். ஒரு ரயிலில் உள்ள 20 சதவீத டிக்கெட்டுகள் தட்கலுக்கு ஒதுக்கப்படுகிறது.
ஜூலை 1 ஆம் தேதி முதல்
இந்த தட்கல் டிக்கெட் பெரும்பாலும் இடைத்தரகர்களுக்கே கிடைத்துவிடுவதாகவும், தேவைப்படும் பயணிகளுக்கு கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. இதனால் தட்கல் புக்கிங்கில் அதிரடி மாற்றங்களை இந்திய ரயில்வே எடுத்து வருகிறது. இதன்படி வரும் ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆதார் அங்கீகாரம் உள்ள யூசர் ஐடிக்ககள் வழியாக மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ஜூலை 15 ஆம் தேதி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆதார் வெரிபிகேஷன் செய்யப்படும். அதாவது, ஆதார் எண் அடிப்படையில் வெரிபிகேஷன் முடிந்த பிறகே தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய முடியும்.
சாதாரண பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்க
* ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முதல் அரை மணி நேரம் அனுமதி கிடையது. அதாவது, ஏசி வகுப்புகள் என்றால் காலை 10 மணி முதல் 10.30 மணி வரை ஏஜெண்டுகள் முன்பதிவு செய்ய முடியாது. சாதாரண வகுப்பு டிக்கெட்டுகளுக்கு 11 மணிக்கு தட்கல் டிக்கெட் ஓபன் ஆகும் நிலையில், 11.30 மணி வரை புக்கிங் செய்ய முடியாது.
* ரயில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் சாதாரண பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக இந்த அதிரடி மாற்றங்களை ரயில்வே கொண்டு வந்துள்ளது.
மேற்கு ரயில்வே மண்டலத்தில்
* அதேபோல ரயில் புறப்படுவதற்கு முன்பாக தற்போது சார்ட் லிஸ்ட்கள் 4 மணி நேரத்திற்கு முன்பாக வெளியிடப்படுகிறது. கடைசி நேரத்தில் சார்ட் லிஸ்ட் வெளியாவதால், டிக்கெட் கன்பார்ம் ஆவாத பயணிகள் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக மாற்று வழியை தேடும் நிலை உள்ளது. கடைசி நேரத்தில் பேருந்துகளிலும் டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளதால், இதை சரி செய்யும் விதமாக திட்டத்தை ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியலை அவர்கள் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்னரே தெரிந்து கொள்ளும் வகையில் புதிய திட்டத்தினை ரயில்வே எடுத்துள்ளது. சோதனை அடிப்படையில் மேற்கு ரயில்வே மண்டலத்தில் பிகானோர் பகுதியில் இந்த திட்டம் சோதனை கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications