இந்தியாவில் வேலையின்மையின் அடுத்த அலை.. 2 கோடி பேர் வேலையிழக்கும் அபாயம்! உஷார்
சென்னை: உலகம் முழுவதும் வேலையின்மை பிரச்சனை பூதாகரமாக வெடித்திருக்கிறது. கொத்து கொத்தாக எந்த காரணமும் அறிவிக்கப்படாமல் டெக் ஊழியர்கள் வேலையை விட்டு தூக்கப்படுகிறார்கள். இந்தியாவிலும் ஆயிரக்கணக்கான டெக் ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், வேலையின்மையின் அடுத்த அலை தாக்கும் என்றும், இதனால் நாடு முழுவதும் சுமார் 2 கோடி பேர் வேலையை இழப்பார்கள் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த முறை டெக் ஊழியர்கள், அலுவலக ஊழியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். மாறாக, ஸ்விக்கி, ஸொமாட்டோ போன்ற நிறுவனங்களில் டெலிவரி வேலை செய்யும் கிக் (gig) தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

5,400 கி.மீ வரை பயணிக்கும் கிக் தொழிலாளர்கள்
உணவு, மளிகை பொருள், மருந்துகள் ஆகியவற்றை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்ப்பதுதான் இவர்களின் வேலை. 10 நிமிடத்தில் டெலிவரி, 5 நிமிடத்தில் டெலிவரி என பரபரப்பான நகர சாலைகளில் சிட்டாய் இந்த ஊழியர்கள் பறந்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 12-15 மணி நேரம் என வாரத்திற்கு 6 நாட்கள் வேலை செய்கிறார்கள். ஒரு மாதத்திற்கு தோராயமாக 3,000 - 5,400 கி.மீ வரை பயணிக்கிறார்கள்.
வேலையை காலி செய்யும் 'ஆட்டோமேஷன்'
முதல் ஒரு கி.மீ ரூ.15 எனவும், அடுத்தடுத்து ஒவ்வொரு கி.மீக்கும் ரூ.10-14 வரையும் இவர்களுக்கு கிடைக்கிறது. எப்படி பார்த்தாலும் ஒரு மாதத்திற்கு ரூ.30,000-32,000 வரைதான் இந்த தொழிலாளர்களால் சம்பாதிக்க முடியும். கோவிட் காலத்தில் 1 கி.மீக்கு ரூ.20 என கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது இந்த தொகையை நிறுவனங்கள் ரூ.15 ஆக குறைத்திருக்கின்றன. இந்த நெருக்கடி ஒருபுறம் எனில், மறுபுறம் 'ஆட்டோமேஷன்' இவர்களின் வேலையை காலி செய்ய ரெடியாக இருக்கிறது.
களத்தில் இறக்கப்படும் ட்ரோன்கள்
அதாவது, ட்ரோன்களை பயன்படுத்தி டெலிவரி செய்வதைத்தான் 'ஆட்டோமேஷன்' என்று சொல்லப்படுகிறது. டெல்லி போன்ற நகரங்களில் வெறும் 4 ரூபாய்க்கு இந்த ட்ரோன்கள் 1 கி.மீ தொலைவுக்கு மருந்துகளை டெலிவரி செய்து வருகின்றன. ட்ரோன்களை பயன்படுத்துவதால் நேரமும் மிச்சமாகிறது. ஒரு பொருளை 5-8 கி.மீ தொலைவுக்கு எடுத்து செல்ல வேண்டும் எனில், டெலிவரி ஊழியர்கள் எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட, ட்ரோன்கள் மிக குறைவான நேரத்தையே எடுத்துக்கொள்கின்றன.
டெலிவரி துறையின் வர்த்தக சந்தை மதிப்பு
எல்லாம் சரிதான், என்ன இருந்தாலும் ட்ரோன்களின் விலை அதிகம். டெலிவரி நிறுவனங்களால் எத்தனை ட்ரோன்களை வாங்க முடியும்? என்று கேள்வி எழலாம். இந்த இடத்தில்தான் சமீபத்திய பட்ஜெட்டை நீங்கள் கவனிக்க வேண்டும். பட்ஜெட்டில் ட்ரோன்களுக்கான ஜிஎஸ்டி வரி 18-28 சதவிகிதத்திலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. எனவே டெலிவரி நிறுவனங்கள் ட்ரோன்களை வாங்கி குவிக்க வாய்ப்புகள் உள்ளன. டெலிவரி துறையின் வர்த்தக சந்தை மதிப்பு 2030ல் ரூ.4,042 கோடியை எட்ட இருக்கிறது. அதாவது இந்த துறை வளரும், ஆனால் தொழிலாளர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது.
கிக் தொழிலாளர்களுக்கான உரிமைகள்
தற்போது டெலிவரி பணியாற்றுபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமோ, காப்பீடோ, விடுப்போ கிடைப்பதில்லை. அவ்வளவு ஏன்? அவர்கள் 'ஊழியர்களாக கூட கருதப்படுவதில்லை. மத்திய அரசு இவர்களை e-Shram போர்ட்டலில் பதிவு செய்ய சொல்கிறது. கிக் தொழிலாளர்களுக்கு என இருக்கும் உரிமைகள், சலுகைகள், வாய்ப்பு குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. திடீரென நிறுவனம் அவர்களை வேலையை விட்டு தூக்கிவிட்டால் கூட, இவர்களால் இழப்பீடு கோர முடியாது.
தற்போது நாடு முழுவதும் 1.2 கிக் தொழிலாளர்கள் இருப்பதாக நிதி ஆயோக் கூறுகிறது. இது அடுத்த 5 ஆண்டுகளில் 2.35 கோடியாக அதிகரிக்கக்கூடும். இந்தியாவில் வேலையின்மையின் விகிதம் அதிகமாக இருப்பதால், ஏராளமான இளைஞர்கள் கிக் வேலை நோக்கி இழுக்கப்படுகிறார்கள். இப்படி இருக்கையில் டெலிவரி துறை, 'ஆட்டோமேஷன்' என்கிற அமைப்புக்குள் சென்றால், நாட்டின் வளர்ச்சியில் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
-
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 12ம் வகுப்பு தகுதிதான்.. ஆரம்பமே 21,500 சம்பளம்.. மதுரையில் பணியிடம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications