சென்னையில் கடைசி நேரத்தில் ரத்தான இண்டிகோவின் 22 விமான சேவை.. போராட்டத்தில் இறங்கிய 154 பயணிகள்!
சென்னை: சென்னையில் கடைசி நேரத்தில் இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், 154 பயணிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இண்டிகோ விமான ஊழியர்களின் போராட்டம் காரணமாக 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயணிகளுடன், விமான நிலைய ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ, விமானிகள் பற்றாக்குறை காரணமாக கடந்த 2 நாட்களாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களாக தினமும் சுமார் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சில விமானங்கள் 10 மணி நேரம் வரை தாமதமாகியது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விமான போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. இதனிடையே கடந்த இரு நாட்களாக இண்டிகோ விமான நிலைய நெட்வொர்க் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டிருக்கிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் இண்டிகோ ரத்து செய்த 1,232 விமானங்களில் மட்டும் கிட்டத்தட்ட 62% விமான ஊழியர் பற்றாக்குறையே காரணமாக அமைந்தது. இந்த நிலையில் டிசம்பர் மாதத்திலும் இண்டிகோ விமான சேவை பிரச்சனைகள் தொடர்ந்து வருகிறது. இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 22 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்தது.
இண்டிகோ நிறுவனத்தின் விமானிகள், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நேரம் தொடர்பான விதிகள் கடுமையாக இருப்பதாக கூறி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடைசி நிமிடத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் கடைசி நிமிடத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியதால், பயணிகள் கொந்தளித்தனர்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்திலேயே பாதிக்கப்பட்ட 154 பயணிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விமான நிலைய ஊழியர்கள் பயணிகளுக்கு தண்ணீர் கொடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சென்னை மட்டுமல்லாமல் திருச்சியில் இருந்து துபாய், சிங்கப்பூர் செல்லும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications