வக்பு சட்டத்துக்கு இடைக்கால தடை- முஸ்லிம்கள் வயிற்றில் பால் வார்த்த உச்சநீதிமன்றம்- விஜய் வரவேற்பு!
சென்னை: வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் விஜய் கூறியிருப்பதாவது:வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய திரு. அபிஷேக் சிங்வி அவர்களுக்கும் அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதேபோல தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனமார வரவேற்கிறது. ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு தொடர்ந்து சிறுபான்மை மக்களை வஞ்சித்து வரும் சூழ்நிலையில் தங்கள் அதிகார மமதையால் இஸ்லாமிய மக்களை பழிவாங்கும் ஒற்றை நோக்கத்தோடு வக்பு திருத்த சட்ட மசோதாவை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றியது அதற்கு உடனே குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தார்.
இன்று வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு இடைக்கால தடையும் ஒரு வாரத்திற்குள் ஒன்றிய, மாநில
இந்திய ஜனநாயக நாட்டில் எப்பேர்ப்பட்ட சர்வாதிகாரிகள் வந்தாலும் இறுதியாக ஜனநாயகமே வெல்லும் என்பதற்கு இந்த தீர்ப்பு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மனமார வரவேற்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications