எனக்கு அதெல்லாம் தெரியாது.. இன்னிங்ஸ் முடித்துவிட்டு பேசிய ருத்துராஜ்.. ப்பா என்ன மனுசன்யா
சென்னை: கொல்கத்தா அணிக்கு எதிராக இன்று சிறப்பாக ஆடிய ருத்துராஜ் இன்று வெறும் 27 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்.
கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் இன்று சிஎஸ்கே மிக சிறப்பாக பேட்டிங் செய்துள்ளது. டாஸ் தோல்வி அடைந்து முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டியது.
கொல்கத்தாவிற்கு அதிக ரன்களை இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்பதால் தொடக்கத்தில் இருந்தே சிஎஸ்கே வீரர்கள் அதிரடி காட்டினார்கள். யார் இறங்கினாலும் அதிரடியாக கேமியோ ஆட்டம் ஆடி சிஎஸ்கேவின் ரன் ரேட்டை உயர்த்தினார்கள்.

ருத்துராஜ்
பொதுவாக பவர் பிளேவில் மெதுவாக ஆடிவிட்டு அதன்பின் வேகம் எடுப்பதுதான் ருத்துராஜ் வேலை. ஆனால் இன்று ருத்துராஜ்தான் தொடக்கத்திலேயே வேகம் காட்டினார். ஷாகிப் ஹஸன் போன்ற ஸ்பின் பவுலர்களை நன்றாக ஆடுவார் என்பதால் ருத்துராஜ் தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டினார். டு பிளசிஸ் பெரிதாக ஸ்டிரைக் எடுக்கவில்லை.

ஆட்டம் எப்படி
இன்று ஆட்டம் தொடங்கிய போது கே. எல் ராகுல்தான் ஆரஞ்சு கேப் வைத்து இருந்தார். 626 ரன்கள் எடுத்து கே. எல் ராகுல் ஆரஞ்ச் கேப் வைத்து இருந்தார். ஆனால் அதிரடியாக ஆடி ருத்துராஜ் இன்று வெறும் 27 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 635 ரன்கள் எடுத்து ருத்துராஜ் ஆரஞ்சு கேப் வாங்கினார். ஆனால் இவர் அவுட்டான பின் டு பிளசிஸ் அதிரடி காட்டினார்.

டு பிளசிஸ்
ருத்து அவுட்டான பின் அதிரடி காட்டிய டு பிளசிஸ் சிக்ஸ் பவுண்டரி என்று அடித்து 59 பந்தில் 86 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸ், 7 பவுண்டரி அடக்கம். கடைசி பந்தில் டு பிளசிஸ் வெறும் 2 ரன்கள் எடுத்தால் ஆரஞ்சு கேப் வென்று இருப்பார். ஆனால் அவர் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன் மூலம் 634 ரன்களை மொத்த டு பிளசிஸ் எடுத்தார். இதனால் 635 ரன்கள் எடுத்து ருத்துராஜ் ஆரஞ்சு கேப் வாங்கினார்.
Recommended Video

எப்படி
இந்த நிலையில் முதல் இன்னிங்க்ஸுக்கு பிறகு ஆரஞ்சு கேப் குறித்து ருத்துவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதில், நான் ஆடிய போது பந்து கொஞ்சம் ஸ்டாப் ஆகி வந்தது. இதை நாங்கள் எதிர்பார்க்கக்கவில்லை. எனக்கு டு பிளசிஸ் ஆரஞ்ச் கேப் அடிக்க போகிறார் என்றெல்லாம் தெரியாது. எனக்கு அது தெரியாது. அவருக்கும் எனக்கும் இடையில் இருந்த ரன் வித்தியாசம் குறித்து தெரியாது. நான் கடைசி பந்தில் டு பிளசிஸ் சிக்ஸ் அடிக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். அந்த 6 முக்கியமான ரன்களை அவர் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன், என்று ருத்து கூறினார்.

முக்கியம்
அதாவது தன்னுடைய ஆரஞ்சு கேப் தேவையில்லை. அணியின் அதிக இலக்குதான் முக்கியம் என்று ருத்துராஜ் பேசியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இளம் வயதிலேயே ருத்துராஜ் இப்படி முதிர்ச்சியாக பேசுவது வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன் ராஜஸ்தான் அணிக்கு எதிராக கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து ருத்துராஜ் செஞ்சுரி அடித்தார்.

ருத்துராஜ் பேட்டி
அப்போது பேட்டி அளித்த ருத்துராஜ் எனக்கு 90 ரன்களை கடந்த பின் 100 அடிப்பேனா என்ற டென்சன் இல்லை. ஏனென்றால் எனக்கு அணி ரன்கள்தான் முக்கியம். தனிப்பட்ட ரன்கள் முக்கியம் இல்லை. 160 எதிர்பார்த்தோம், பின்னர் 180 எதிர்பார்த்தோம், 190 வரை எடுத்தது மகிழ்ச்சி என்று ருத்துராஜ் பெருந்தன்மையாக சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications