ஏன் இப்படி செய்தார்? உடனே விசாரியுங்கள்.. வெளியான போட்டோ- பிசிசிஐ ரேடாரில் மாட்டிய இளம் ஐபிஎல் வீரர்
சென்னை: ஐபிஎல் 2021 தொடரில் பஞ்சாப் வீரர் தீபக் ஹூடா செய்த காரியம் ஒன்றால் அவர் மீது பிசிசிஐ அமைப்பு கொதிப்பில் உள்ளது.
2021 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் பாதி ஆட்டம் இந்தியாவில் நடந்து முடிந்தது. கொரோனா காரணமாக முதல் பாதி ஆட்டம் பாதிக்கப்பட்டது. இப்போது இரண்டாம் பாதி ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இன்றுதான் ஹைதராபாத் வீரர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மற்ற வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நடராஜன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது ஐபிஎல் அணிகளுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிசிசிஐ
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இன்னொரு சம்பவமும் நடைபெற்று உள்ளது. இன்னொரு வீரரும் இன்று சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார். ஐபிஎல் வீரர் தீபக் ஹூடா பஞ்சாப் அணிக்காக ஆடி வருகிறார். ஏற்கனவே சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் இவர் ஆடவில்லை. குர்ணால் பாண்டியாவுடன் இருந்த மோதல் காரணமாக அந்த தொடரில் இவரால் ஆட முடியவில்லை. ஆனால் இந்த தொடரில் ஹூடா சிறப்பாக ஆடி வருகிறார்.

ஹெல்மெட்
இந்த நிலையில்தான் அவர் நேற்று ஆட்டத்திற்கு முன்பாக தான் ஹெல்மெட் அணியும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருந்தார். பிசிசிஐ விதியின்படி ஐபிஎல் வீரரோ அல்லது வேறு இந்திய அணி வீரரோ எந்த போட்டிக்கும் முன்பாக ஆட்டம் தொடர்பாக போஸ்ட் செய்ய கூடாது. முக்கியமாக பிளேயிங் லெவன் குறித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ போஸ்ட் செய்ய கூடாது. அது விதிகளுக்கு எதிரானது.

பிளேயிங் லெவன்
பிளேயிங் 11ல் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரிவிப்பது மறைமுகமாக புக்கிகளுக்கு கொடுக்கும் சிக்னல் ஆகும். அல்லது இதை தெரிந்து கொண்டு புக்கிகள் சூதாட்டத்தில் ஈடுபட முடியும். இதனால் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகும் முன் எந்த வீரரும் தங்களின் சமூக வலைத்தளங்களில் போட்டியில் ஆட போவதை நேரடியாகவோ மறைமுகமாகவோ தெரிவிக்க கூடாது.

தவறு
ஆனால் நேற்று தீபக் ஹூடா தான் பிளேயிங் 11ல் ஆட போவதை ஹெல்மெட் அணிந்து வெளிக்காட்டினார். அதோடு ஹியர் வீ கோ என்று போஸ்ட் செய்து தனக்கும் அணியில் இடம் உண்டு என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தினார். இதனால் அவர் மீது பிசிசிஐ அதிருப்தியில் உள்ளது. ஆடும் 11 பேர் கொண்ட அணி குறித்து இவர் வெளியிட்ட இந்த தகவல் பிசிசிஐ அமைப்பை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

விசாரணை
சூதாட்டத்திற்கு எதிரான ஏசியூ விதிகளை இதன் மூலம் அவர் மீறி உள்ளார். இதனால் அவருக்கு எதிராக விசாரணை நடக்க உள்ளது. ஏன் இப்படி போஸ்ட் செய்தார் என்று கேட்க உள்ளனர். சில வீரர்களின் சமூக வலைத்தளங்களை பிஆர்ஓ நபர்கள் பயன்படுத்துகிறார்கள். அப்படி இவரின் கணக்கை பிஆர்ஓ மேனேஜர் யாராவது பயன்படுத்தினார்களா என்றும் விசாரிக்க உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications