மூத்த வீரர் இப்படி பண்ணலாமா? ருத்துராஜை சீண்டி மாட்டிக்கொண்ட அஸ்வின்.. அதிர்ச்சி தந்த சம்பவம்!
சென்னை: சிஎஸ்கே வீரர் ருத்துராஜிடம் டெல்லி மூத்த வீரர் அஸ்வின் நேற்று நடந்து கொண்ட விதம் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
நேற்று சிஎஸ்கே அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையிலான குவாலிபயர் ஃப்ளே ஆப் சுற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் தோனி பினிஷிங் செய்து சிஎஸ்கேவை வெற்றிபெற செய்தார்.
நேற்று முதலில் ஆடிய டெல்லி 172 ரன்கள் எடுத்தது. இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே எளிதாக 173 ரன்கள் எடுத்து வென்றது. இதன் மூலம் சிஎஸ்கே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

அஸ்வின்
இந்த நிலையில் டெல்லி அணியில் ஆடி வரும் அஸ்வின் நேற்று நடந்துகொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. அஸ்வின் பொதுவாக மைதானத்தில் பவுலிங் போட வரும் போது திடீரென கிரீஸ் லைன் வரை வந்துவிட்டு பின்னர் பவுலிங் போடாமல் திரும்பி செல்வது வழக்கம். இது பொதுவாக பேட்ஸ்மேன்களை கடுமையாக வெறுப்பேற்றும். பேட்டிங் செய்ய எதிர்பார்த்து இருக்கும் பேட்ஸ்மேன்களை இது கடுப்பேற்றும்.

மன்கட்
அதேபோல் இன்னொரு பக்கம் அஸ்வின் நான் ஸ்டிரைக்கர் பேட்ஸ்மேன் கிரீஸை தாண்டி இருக்கிறாரா என்றும் சோதனை செய்வது வழக்கம். மன்கட் செய்ய முடியுமா என்று பார்ப்பதற்காக அஸ்வின் இப்படி பவுலிங் போடாமல் கடைசி நொடியில் நிறுத்துவது வழக்கம். இந்த நிலையில்தான் அஸ்வின் நேற்று ருத்துராஜ் பேட்டிங் செய்த போதும் இதேபோல் நடந்து கொண்டார்.

ருத்துராஜ்
ருத்துராஜ் பேட்டிங் செய்த போது அஸ்வின் பவுலிங் போட வந்துவிட்டு கடைசி நொடியில் பவுலிங் செய்யாமல் திரும்பி சென்றார். இதனால் பொதுவாக முகத்தில் டென்ஷனை காட்டாத ருத்துராஜ் கூட நேற்று கொஞ்சம் கடுப்பானார். அடுத்த பந்திலேயே இதற்கு ருத்துராஜ் பதிலடியும் கொடுத்தார்.
Recommended Video

அஸ்வின் ருத்துராஜ்
அஸ்வின் அடுத்த பந்தை வீச வந்த போது ருத்துராஜ் கடைசி நொடியில் பேட்டிங் செய்யாமல் விலகினார். ருத்துராஜிடம் இப்படி ஒரு பதிலடி வரும் என்று அஸ்வின் எதிர்பார்த்து இருக்க மாட்டார். மூத்த வீரர் ஒருவர் இளம் வீரரான ருத்துராஜிடம் இப்படி களத்தில் நடந்து கொண்டதும், அதற்கு ருத்துராஜ் பதிலடி கொடுத்ததும் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

பதிலடி
அஸ்வினின் இந்த நடவடிக்கையை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். களத்தில் இப்படி சிறுவர் போல நடந்து கொள்வதை அஸ்வின் நிறுத்த வேண்டும். தேவையில்லாத சர்ச்சையில் அஸ்வின் ஈடுபட கூடாது. அவர் ஏற்கனவே லெஜண்ட் ஆகிவிட்டார். அதற்கு ஏற்றபடி தன்மையாக அவர் நடக்க வேண்டும் என்று பலர் இணையத்தில் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.
-
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications