6 பேரா? அதிகாலை 5 மணிக்கே பறந்த அதிகாரிகள்.. நடராஜனுக்கு கொரோனா வந்தது எப்படி? என்ன நடந்தது?
சென்னை: ஹைதராபாத் அணியில் ஆடும் தமிழ்நாடு வீரர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியாக உள்ளன.
2021 ஐபிஎல் தொடருக்கு மீண்டும் கொரோனா காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் பாதியில் வருண் சக்ரவர்த்தி உள்ளிட்ட வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஹைதராபாத்தில் பல வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டது.
அதன்பின் கொல்கத்தா அணியிலும் சில வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டது. இதை தொடர்ந்து மொத்தமாக இந்தியாவில் நடைபெற்ற தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் வரிசையாக பல வீரர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டதால் மொத்தமாக தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.

பாதியில் நிறுத்தப்பட்டது
பின்னர் தேதி அறிவிக்கப்படாமல் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் பிசிசிஐ அமைப்பிற்கும் பல கோடி இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் தொடரை மேலும் நடத்த முடியாது என்று பிசிசிஐ உணர்ந்து கொண்டது. இதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஐபிஎல் தொடர்கள் மாற்றப்பட்டது.

இரண்டு போட்டிகள்
அமீரகத்தில் மிகுந்த பாதுகாப்பான ஏற்பாடுகளோடு போட்டிகள் நடந்து வருகின்றன. ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. முதல் மூன்று போட்டியும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் இன்று ஹைதராபாத் டெல்லி அணிகளுக்கு இடையில் போட்டி நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத்
ஹைதராபாத் அணியில் ஆடும் தமிழ்நாடு வீரர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் வெளியே எங்கேயும் செல்லவில்லை. உள்ளே ஹோட்டல் நிர்வாகிகள் அல்லது பயிற்சியின் போது இருந்து வேறு சப்போர்ட் ஸ்டாப் மூலம் இவருக்கு கொரோனா வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஹோட்டலுக்குள் இவர் சக வீரர் ஒருவருக்கு பிறந்த நாள் மட்டுமே கொண்டாடி உள்ளார். பயோ பபுள் விதிகள் எதையும் இவர் மீறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6 பேர்
இவருக்கு நேற்று இரவே டெஸ்ட் எடுக்கப்பட்டுவிட்டது. இன்று அதிகாலை 4 மணிக்கு ரிசல்ட் வந்துள்ளது. பாசிட்டிவ் என்பதால் உடனடியாக இவர் நெருக்கமாக இருந்த 6 பேருக்கு டெஸ்ட் எடுக்க வேண்டும். இன்றுதான் மேட்ச் என்பதால் ஒரு நொடி கூட தாமதிக்காமல் அதிகாலை 5 மணிக்கு நடராஜனை தனிமைப்படுத்தி உள்ளனர். 5 மணிக்கு அதிகாரிகள் எல்லோரும் விரைந்து உள்ளனர்.

டெஸ்ட்
அதிகாலை 5 மணிக்கு பின் வரும் வீரர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.
1. விஜய் சங்கர்- வீரர்
2. விஜய் குமார் - மேனேஜர்
3. ஷியாம் சுந்தர் - பிசியோ
4. அஞ்சனா வண்ணன் - மருத்துவர்
5. தூஷகர் கெதர்- மேனேஜர்
6. பெரியசாமி கணேசன்- நெட் பவுலர்

நெகட்டிவ்
6 பேருடன் தொடர்பு என்பதால் பதறிப்போய் அதிகாலையில் டெஸ்ட் செய்துள்ளனர். இந்த 6 பேருக்கும் நெகட்டிவ் என்று டெஸ்ட் ரிசல்ட் வந்துள்ளது. இதனால் இன்று நடக்கும் போட்டிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications