இப்படியா சொல்லுவீங்க.. வேண்டுமென்றே தமிழரை ஓரம்கட்டி.. வாங்கி கட்டிக்கொண்ட கும்ப்ளே.. இது தேவையா?
சென்னை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்த நிலையில் பயிற்சியாளர் கும்ப்ளே மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. அவரின் அணித்தேர்வு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.
நேற்று பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி திரில் வெற்றிபெற்றது. வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் கடைசி இரண்டு ஓவர்களில் மிக மோசமாக சொதப்பி பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது. நேற்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 10 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. நாங்கள் கடைசி கட்டத்தில் நூலிழையில் தோல்வி அடைவது வழக்கம் ஆகிவிட்டது என்று கும்ப்ளே அணியின் தோல்வி குறித்து மழுப்பலாக காரணம் சொல்லி இருக்கிறார். கும்ப்ளேவின் இந்த காரணமும், அவரின் அணி தேர்வும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

அணி தேர்வு
இந்த போட்டியில் பஞ்சாப் தோல்வி அடைய நிறைய காரணங்கள் சொல்லப்பட்டாலும் கும்ப்ளேவின் மிக மோசமான அணி தேர்வும் முக்கிய காரணமாக அமைந்தது. கும்ப்ளே பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக தேர்வான சமயத்தில் இருந்தே அணி தேர்வில் சொதப்பி வருகிறார். கடந்த ஐபிஎல் போட்டியில் கிருஷ்ணப்பா கவுதம் போன்ற கர்நாடக வீரர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் தருகிறார் என்று விமர்சனம் வைக்கப்பட்டது. இதனால் அணி தேர்வில் கும்ப்ளே இந்த முறை சில மாற்றங்களை செய்தார்.

கவுதம்
கவுதம் போன்றவர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். ஆனால் இந்த வருடமும் தொடர்ந்து அணி தேர்வில் சில சொதப்பல்களை செய்து வருகிறார். முக்கியமாக தமிழ்நாடு ஸ்பின் பவுலர் முருகன் அஸ்வினை கடந்த வருடம் முழுக்கவே கும்ப்ளே கடுமையாக புறக்கணித்தார். வாய்ப்பு கிடைத்த போட்டிகளில் எல்லாம் முருகன் அஸ்வின் நன்றாக ஆடி இருந்தாலும் கூட தொடர்ந்து வாய்ப்பு கொடுக்காமல் அவரை புறக்கணித்து வந்தார்.

வாய்ப்பு
இந்த நிலையில் தற்போது இன்னொரு அதிரடி தமிழ்நாடு வீரரான ஷாருக்கானை கும்ப்ளே புறக்கணிக்க தொடங்கி உள்ளார். இந்த சீஸனின் முதல் பாதியில் பஞ்சாப் அணிக்காக பல போட்டியில் ஷாருக்கான் சிறப்பாக ஆடினார். அவரின் பேட்டிங்தான் பஞ்சாப் அணியை மிக மோசமான தோல்விகளில் இருந்து காப்பாற்றியது. அதிலும் சிஎஸ்கே அணிக்கு எதிராக பஞ்சாப் போட்டியில் ஷாருக்கான் கவனிக்கதக்க வகையில் ஆடினார். கடைசியில் இறங்கி ஆட்டத்தை மாற்ற கூடிய பினிஷர் இவர்.

ஷாருக்கான்
நேற்று பஞ்சாப் அணியில் இவர் ஆடி இருந்தால் 2 ஓவருக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் இரண்டே பந்தில் ஆட்டத்தை முடித்து இருப்பார். இக்கட்டான நேரத்தில் அதிரடியாக ஆடி இதற்கு முந்தைய லீக் ஆட்டங்களிலும், சையது முஷ்டாக் அலி, டிஎன்பிஎல் போன்ற ஆட்டங்களிலும் ஷாருக்கான் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். இந்த நிலையில் நேற்று அவரை உட்கார வைத்ததே பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

ஏன் இப்படி
கடைசி இரண்டு ஓவரில் 9 ரன்கள் கூட அடிக்க முடியாமல் அந்த அணி பரிதாபமாக தோல்வியை தழுவி உள்ளது.
பஞ்சாப் அணியின் மோசமான தோல்வியை முன்னிட்டு கும்ப்ளேவை பலர் விமர்சனம் செய்துள்ளனர். நேற்று அவர் ஸ்பின் பவுலர் ரவி பிஸ்னோயையும் தேர்வு செய்யவில்லை. கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் பலரும் பிசிசிஐக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். கும்ப்ளே வந்தால் பிரவீன் குமாரை அணியில் எடுத்துவிட்டு பும்ராவை உட்கார வைப்பார்.

கடும் விமர்சனம்
கும்ப்ளே வேண்டாம். அவருக்கு கோச்சிங் தெரியவில்லை. ஷாருக்கானை எல்லாம் எப்படி அவர் உட்கார வைக்கலாம் என்று கடுமையான விமர்சனம் வைத்து வருகிறார்கள். அவரை பயிற்சியாளராக நியமிக்கும் ஆசை இருந்தால் உடனே பிசிசிஐ அதை மறந்துவிட வேண்டும் என்று நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications