எத்தனை கேலி.. கிண்டல்கள்! இரண்டே ஐபிஎல் மேட்ச்தான்.. மூத்த வீரர் ஸ்மார்ட் பதிலடி.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் 2022 ஏலத்தில் பல்வேறு அணிகளால் ஓரம்கட்டப்பட்ட வீரர் ஒருவர் இந்த தொடரில் மிக சிறப்பாக ஆடி ஆச்சர்யம் அளித்து வருகிறார்.

2022 ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போட்டிகள் பல கடைசி நேரத்தில் மாறி விறுவிறுப்பான முடிவுகளை கொடுத்துள்ளன.

அதிலும் சில போட்டிகள் 200+ ரன்கள் கொண்ட போட்டிகள் என்பதால் கடைசி வரை ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. நேற்று நடைபெற்ற கொல்கத்தா - பெங்களூர் போட்டி லோ ஸ்கோரிங் ஆட்டம் என்றாலும் கடைசி ஓவர் வரை மேட்ச் விறுவிறுப்பாக இருந்தது.

 உமேஷ் யாதவ்

உமேஷ் யாதவ்

இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆடி வருகிறார் உமேஷ் யாதவ். டெஸ்ட் பவுலிங்கில் சிறப்பாக செயல்படும் உமேஷ் யாதவ் டி 20 போட்டிகளில் சரியாக பவுலிங் செய்தது இல்லை. அதிக ரன் கொடுக்கிறார் என்ற விமர்சனம் இவர் மீது அடிக்கடி வைக்கப்படுவது வழக்கம். பெங்களூர் அணியில் இருந்த சமயத்தில் இவர் கடுமையாக ரன் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு போட்டிகளில் பெங்களூர் அணியின் தோல்விக்கு இவர் காரணமாக இருந்தார்.

 வெற்றி

வெற்றி

இதனால் கடந்த முறை பெங்களூர் அணியால் இவர் நீக்கப்பட்டார். அதோடு சமூக வலைத்தளங்களில் இவர் கடுமையாக கிண்டல் அடிக்கப்பட்டார்.. கலாய்க்கப்பட்டார்! அதேபோல் ஏலத்தில் இவரை எந்த அணியும் சீண்டவில்லை. முதல்முறை ஏலம் விட்ட போது இவரை யாருமே எடுக்கவில்லை. அவ்வளவுதான் கதை முடிந்தது என்றுதான் பலரும் நினைத்தனர். பின்னர் மீண்டும் விடப்பட்ட ஏலத்தில் இவரின் அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி இவரை வாங்கியது. அப்போதும் கூட இவரை வாங்க யாரும் போட்டியிடவில்லை.

 சூப்பர்

சூப்பர்


ஆனால் இந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக உமேஷ் யாதவ் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். முதல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக பவுலிங் செய்தார். சிஎஸ்கே அணிக்கு எதிராக வெறும் 20 ரன்கள் கொடுத்து உமேஷ் யாதவ் 2 விக்கெட் எடுத்தார். ருத்துராஜ், தேவன் கான்வாய் ஆகிய இரண்டு ஒப்பனர்கள் விக்கெட்டையும் இவர்தான் எடுத்தார். அதேபோல் நேற்று போட்டியிலும் இவர் சிறப்பாக பவுலிங் செய்தார்.

உமேஷ் யாதவ்

உமேஷ் யாதவ்

நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக கொல்கத்தா தோல்வி அடைந்தது. இருப்பினும் உமேஷ் யாதவ் வெறும் 16 ரன்கள் மட்டுமே 4 ஓவரில் கொடுத்தார். அதோடு இரண்டு விக்கெட் எடுத்தார். அனுஜ் ராவத், கோலி ஆகியோர் விக்கெட்டை எடுத்தார். முக்கியமாக பவர் பிளேவில் உமேஷ் யாதவ் சிறப்பாக பந்து வீசுகிறார். பெங்களூர் அணியில் இவர் அதிகம் ரன் கொடுக்கிறார் என்ற புகார் இருந்தது. அதை இந்த முறை மாற்றி உள்ளார்.

பவுன்சர்

பவுன்சர்

முன்னர் பவுன்சர்களை மட்டுமே வீசி வந்த உமேஷ் யாதவ் தற்போது சரியான லென்த் மற்றும் லைனில் வீசி போல்ட் எடுக்கிறார். அதோடு இவரின் பவுலிங் வேகமும் கொஞ்சம் கூடி உள்ளது. ஐபிஎல் அணிகள் பல இவரை ரைட் ஆப் செய்த நிலையில், கொல்கத்தா அணியில் எதிர்பார்க்காமல் கலக்கி வருகிறார். உமேஷ் யாதவ் பிட்டாக இருக்கிறார். எங்கள் அணிக்காக அவர் சிறப்பாக செயல்படுகிறார் என்று அணியின் பயிற்சியாளர் மெக்கல்லமே பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+