33 பந்துகள்! அந்த 3 பேர்! கதிகலங்கி போன சிஎஸ்கே! தோல்விக்கு என்ன காரணம்? மைதானத்தில் நடந்தது இதுதான்
சென்னை: 2022 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. வரிசையாக சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
சிஎஸ்கே அணியின் கேப்டனாக இந்த தொடருக்கு முன்புதான் ஜடேஜா நியமனம் செய்யப்பட்டார். தோனி ஜடேஜாவிற்கு ஆலோசனை வழங்குவார், சிஎஸ்கே எப்போதும் போல இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிஎஸ்கே வரிசையாக தோல்விகளை சந்தித்து வருகிறது.
கொல்கத்தாவிற்கு எதிரான முதல் போட்டி, லக்னோவிற்கு எதிரான இரண்டாவது போட்டி, பஞ்சாப்பிற்கு எதிரான மூன்றாவது போட்டி என்று வரிசையாக மூன்று போட்டிகளில் சிஎஸ்கே படுதோல்வி அடைந்துள்ளது.

சிஎஸ்கே பவுலிங்
சிஎஸ்கே அணியின் தோல்விக்கு சொல்லப்படும் முக்கியமான காரணங்களில் ஒன்று அணியின் பவுலிங். சிஎஸ்கேவில் சாகர் இல்லை. இவர்தான் அணியின் தோல்விக்கு காரணமாக இருக்கும் முக்கியமான நபர். சாகர் இல்லாததால் பவர் பிளேவில் விக்கெட் எடுக்கவும், ஸ்விங் போடவும் முடியாமல் சிஎஸ்கே திணறி வருகிறது. சாகர் ஆடிய கடந்த 14 போட்டிகளில் அவர் எடுத்த 14 விக்கெட்டுகளில் 10 விக்கெட் பவர் பிளேவில் எடுத்தது ஆகும். ஆனால் இப்போது அவர் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

வருவாரா?
அவருக்கு காயம் குணமடைந்துவிட்டதாலும் காயத்திற்கு பின்பான பயிற்சிக்காக அவர் பெங்களூரில் இருக்கிறார். இன்னும் இரண்டு வாரம் கழித்துதான் அவர் வெளியே வருவார். அதன்பின் மும்பை வரும் அவரை சிஎஸ்கே அணியில் இணைவார். இதனால் ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்கு பின்பாகவே அவர் சிஎஸ்கே அணியில் ஆட முடியும். இதனால் இவர் இல்லாமல் சிஎஸ்கே அணி ஒரு பக்கம் திணறி வருகிறது. இன்னொரு பக்கம் பேட்டிங்கில் ருத்துராஜ் இன்னும் பார்மிற்கு வரவில்லை.

பேட்டிங் - இரண்டாவது நபர்
எப்போதும் முதல் 3 போட்டிகளில் ருத்துராஜ் சரியாக ஆடியது இல்லை. கடந்த முறை முதல் 3 போட்டிகளில் மோசமாக ஆடிய பின்பும் கூட கடைசியில் 635 ரன்கள் எடுத்தார். இதுதான் சிஎஸ்கே அணிக்கு அந்த தொடரில் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் இந்த தொடரில் இதுவரை ருத்துராஜ் பார்மிற்கு வரவில்லை. இவர் சரியான தொடக்கம் கொடுக்காதது அணிக்கு பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.

பீல்டிங்
இதெல்லாம் போக ரன்னிங், பீல்டிங்கிலும் சிஎஸ்கே அணி சொதப்பி வருகிறது. லக்னோவிற்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே இரண்டு கேட்ச்களை விட்டது. நேற்று சிஎஸ்கே அணி 1 கேட்சை விட்டது முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் முதல் போட்டியில் இருந்தே அவ்வப்போது தேவையின்றி ரன் அவுட் ஆவது சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டர் சட்டென சரிய முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

கேப்டன்சி பிரச்சனை இல்லை
சிஎஸ்கே அணியின் கேப்டன்சியில் பிரச்சனை இல்லை. ஜடேஜா மட்டும் தனித்து முடிவுகளை எடுப்பது இல்லை. ஆனால் ஜடேஜாவின் பேட்டிங் மோசமாகிவிட்டது. அவர் கடந்த இரண்டு சீசன்களில் ஆடியது போல பேட்டிங் ஆடவில்லை. இவர்தான் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த மூன்றாவது வீரர் ஆவார். ஜடேஜா கேப்டன்சி பிரஷர் காரணமாக இப்படி மோசமாக பேட்டிங் செய்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

பவர்பிளே - 33 பந்துகள்
நேற்றைய போட்டியில் முதலில் இறங்கிய பஞ்சாப் 180-8 ரன்கள் எடுத்தது. அதன்பி இறங்கிய சிஎஸ்கே அணியில், பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தும் 33 பந்தில் 4 விக்கெட்டுகளை அணி இழந்தது. இதில் சிஎஸ்கே எடுத்த ரன்கள் வெறும் 23 மட்டுமே. அதன்பின் 36 ரன்கள் இருக்கும் போதே 5வது விக்கெட்டை இழந்தது. நேற்று ஜடேஜா, மொயின், பிராவோ டக் அவுட். ராயுடு, உத்தப்பா ஆகியோர் தலா வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்தனர்... இந்த மோசமான பேட்டிங் சொதப்பல் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications