3 மேட்சில் அடிவாங்கும் ருத்துராஜ்.. இன்று முதல் மேட்சியிலேயே பார்ம் வந்தது எப்படி? இதுதான் "ரகசியம்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போதும் முதல் மூன்று போட்டிகளில் அடிவாங்கும் ருத்துராஜ் இன்று முதல் மேட்சிலேயே 90+ ரன்களை அசத்தி உள்ளார். முதல் போட்டியிலேயே அவர் பார்மிற்கு வர முக்கிய காரணம் உள்ளது.

சிஎஸ்கே குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஐபிஎல் 2023 தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. முதல் ஆட்டமே சுவாரசியமாக விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

கடந்த முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற குஜராத் அணி 9வது இடம் பிடித்த சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது.

 சிஎஸ்கே மேட்ச்

சிஎஸ்கே மேட்ச்

இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணி முதலில் சில போட்டிகளை ஜடேஜா கேப்டன்சியில் ஆடியது. மொத்த சீசனில் வெறும் 4 போட்டிகளை மட்டுமே சிஎஸ்கே வென்ற நிலையில் மோசமாக ஆடி வெளியேறியது. இந்த நிலையில்தான் இன்று நடக்கும் போட்டியை வெற்றியோடு தொடங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. சிஎஸ்கே அணியில் சிஎஸ்கே அணியில் டெவோன் கான்வாய் , ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(w/c), மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இதில் முதல் இன்னிங்சில் சிஎஸ்கே அணி 20 இவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்துள்ளது.

ருத்துராஜ்

ருத்துராஜ்

எப்போதும் முதல் மூன்று போட்டிகளில் அடிவாங்கும் ருத்துராஜ் இன்று முதல் மேட்சிலேயே 90+ ரன்களை அசத்தி உள்ளார். முதல் போட்டியிலேயே அவர் பார்மிற்கு வர முக்கிய காரணம் உள்ளது. இன்று மேட்ச் தொடங்கி இரண்டாவது ஓவரில் இருந்தே ருத்துராஜ் அதிரடியாக ஆடினார். ஹர்திக் பாண்டியா ஓவரில் பவுண்டரி அடிக்க தொடங்கியவர் அதன்பின் லிட்டில், அல்சாரி, ஷமி என்று எல்லோரின் ஓவரிலும் அதிரடி காட்டினார். முக்கியமாக லிட்டில் ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி என்று மாஸ் காட்டினார்.

பவுண்டரி

பவுண்டரி

இன்று ருத்துராஜ் பவுண்டரிகளை விட சிக்ஸர்களைத்தான் அதிகம் அடித்தார். 4 பவுண்டரி, 9 சிக்ஸர்களை அவர் அடித்தார். இன்று மொத்தம் 50 பந்துகளை பிடித்த அவர் 92 ரன்கள் எடுத்தார். தேவையின்றி சுற்றி கடைசி கட்டத்தில் செஞ்சுரியை இழந்தார். பொதுவாக இவர் ஐபிஎல் போட்டிகளில் முதல் 3 மேட்சுகள் அடிக்க மாட்டார். டக் அவுட் கூட ஆகி இருக்கிறார். அதன்பின் காம்பேக் கொடுத்து அதிரடியாக ஆட கூடியவர் ருத்துராஜ். கடந்த 3 சீசன்களில் அப்படித்தான் ஆடி இருக்கிறார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

சர்வதேச போட்டிகளில் கூட ருத்துராஜ் அப்படித்தான் ஆடி இருக்கிறார். ஆனால் இன்று அவர் முதல் போட்டியிலேயே பார்மிற்கு வந்துள்ளார். அவர் பார்மிற்கு வருவதற்கு முக்கியமான காரணம் அவர் பயிற்சி எடுத்த விதம்தான் என்கிறார்கள். கடந்த 1 மாதமாக அவர் இந்த தொடருக்காக சிறப்பு பயிற்சியை சென்னையிலும், டெல்லியிலும் மேற்கொண்டு உள்ளார். அதேபோல் பெங்களூரிலும் சிறப்பு பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

அவரின் பயிற்சியை நேரில் பார்த்த கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் முன்னரே ருத்துராஜ் ஆட்டம் இந்த முறை சிறப்பாக இருக்கும் என்று கணித்து இருந்தனர். அதை போலவே இந்த முறை ருத்துராஜ் ஆட்டம் சிறப்பாக அமைந்து இருந்தது. அவர் முதல் போட்டிகளில் இப்படி சொதப்புவதால் சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இந்த நிலையில் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற இந்த தொடர் ருத்துராஜூக்கு மிகவும் முக்கியம் ஆகும். அதை மனதில் வைத்து இன்று முதல் போட்டியிலேயே அதிரடி காட்டி இருக்கிறார் ருத்துராஜ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+