இந்த டிசைன்ல "சேர்" வாங்கியிருக்கீங்களா.. அப்போ ரொம்ப உஷாரா இருக்கனும்ங்க.. இந்த "சம்பவத்தை" பாருங்க
சென்னை: குறிப்பிட்ட மாடல்களில் நாற்காலிகளை வாங்கி அதை வெட்டவெளியில் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள் மக்களே!
ஆபத்து எந்த வடிவத்தில் வரும் என முன்கூட்டியே கணிப்பது கடினம். ஆனால் நாம் உஷாராக இருந்தால் எந்த ஆபத்தும் நம்மை நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியதுதான் முக்கியமானதாகும். வீடுகளில் சுற்றி புதர் போல் செடிகள் வளர்ந்திருக்கும். அதை நம்மால் வெட்ட முடியாவிட்டாலும் காசு கொடுத்து ஆள் வைத்து வெட்டுவதற்கும் மனமில்லை.

புதர்களுக்குள் பாம்பு
இதனால் அந்த புதர்களுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் இருக்கும். இதை அறியாமல் நாம் அந்த பக்கம் சென்றால் அது தற்காத்துக் கொள்ள நினைத்து நம்மை கடித்துவிடும். அது போல் வீடுகளை தண்ணீர் விட்டு கழுவி தள்ளும் போது அந்த தண்ணீர் வெளியேறுவதற்காக வீட்டின் ஒரு முனையில் ஓட்டை இருக்கும்.

ஓட்டை
அந்த ஓட்டையை பயன்படுத்தும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அதில் துணி வைத்து அடைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேள், பூரான், பாம்பு உள்ளிட்ட ஜந்துகள் உள்ளே நுழைய வாய்ப்பிருக்கிறது. ஒரு வேளை மொசைக், டைல்ஸ் தரையாக இருந்தால் அந்த ஓட்டை இருந்தாலும் சிமென்ட் போட்டு அடைத்துவிடுவது நல்லது.

ஆபத்து
இது போன்று ஆபத்துகளை நாமாக தேடி செல்வதைவிட அதுவாகவே நம்மை தேடி வரும். இதுகுறித்து டாக்டர் ஸ்டாலின் ஐபிஎஸ் அதிகாரி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு நாற்காலியின் இரு பக்கங்களிலும் மூடப்பட்ட ஓட்டைகள் உள்ளன. அந்த ஓட்டையில் ஒரு பகுதியில் டார்ச் அடித்து பார்க்கும் போது ஒரு பாம்பு இருந்தது.

நாற்காலி
அனேமகமாக இந்த நாற்காலியை அதன் உரிமையாளர்கள் வெட்டவெளியிலோ அல்லது தோட்டத்திலோ போட்டு உட்கார்ந்திருக்கக் கூடும். அப்போது அந்த பாம்பு அந்த ஓட்டையில் நுழைந்திருக்கும். எனவே இது போன்ற மாடலான சேர் வாங்கியவர்கள் வீட்டுக்கு வெளியே பயன்படுத்தும் போது சற்று கூடுதல் கவனம் தேவை என அந்த ஐபிஎஸ் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications