ஈரானால் பெட்ரூம் வரை வந்தாச்சு சிக்கல்! காண்டம் தட்டுப்பாடு ஏற்பட போகுதாம்.. எதனால் தெரியுமா?
சென்னை: ஈரான் - அமெரிக்கா போரால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வீடுகளின் கிச்சன் வரையிலும் இந்த போரின் தாக்கம் எதிரொலித்துள்ளது. அதே நேரத்தில் ஈரான் போரால் காண்டம் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாம். காண்டம் உற்பத்திக்கும் ஈரான் போருக்கும் என்ன தொடர்பு என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
ஈரான் - அமெரிக்கா போரால் சர்வதேச அளவில் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜல்சந்தியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த வழியாக கச்சா எண்ணெய் ஏற்றி செல்லும் கப்பல்களால் கடக்க முடியாத நிலை உள்ளது.

வீட்டு கிச்சன் வரை ஈரான் போர் தாக்கம்
நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று கூறி ஈரான் ஹார்மூஸ் ஜல்சந்தியை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இதனால், சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகளும் எரிபொருளுக்கு திண்டாடி வருகின்றன. இந்தியாவிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் புக்கிங்கில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
வணிக சிலிண்டர் கிடைப்பதில் கடும் சிரமம் நீடிப்பதால் பல்வேறு ஹோட்டல்களில் உணவு பண்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. எங்கேயோ ஈரானில் நடக்கும் போரால் நமக்கு என்ன பாதிப்பு வரப்போகிறது என நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக வீட்டு கிச்சன் வரை ஈரான் - அமெரிக்கா போரின் தாக்கம் எதிரொலிக்க தொடங்கியது.
காண்டம் உற்பத்தி பாதிப்பு
கிச்சனில் பிரச்சனைதான் என்று நினைத்து விடாதீர்கள்.. பெட்ரூம் வரை இதன் தாக்கம் எதிரொலிக்க கூடும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அதாவது, ஈரான் - அமெரிக்கா போரால் காண்டம் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 860 மில்லியன் டாலர் புழங்கும் துறையாக காண்டம் உற்பத்தி தொழில்கள் உள்ளன.
ஈரான் போர் காரணமாக பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் லூப்ரிகண்ட்ஸ் விநியோகம் பாதிப்பட்டுள்ளது. இது காண்டம் தயாரிக்க பயன்படும் முக்கியமான மூலக்கூறுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு 400 கோடி காண்டம்கள் தயாரிக்கும் துறையாக இது உள்ள நிலையில் மூலப்பொருள் பற்றாக்குறையால் உற்பத்தி செலவு அதிகரிக்க உள்ளது.
முக்கிய நிறுவனங்களான, ஆண்டுக்கு சுமார் 221 கோடி காண்டம் உற்பத்தி செய்யும் அரசு நிறுவனம் HLL Lifecare Ltd, Mankind Pharma Ltd மற்றும் Cupid Ltd உள்ளிட்டவை தற்போது விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால் காண்டம் தயாரிப்பில் தடுமாறி வருகின்றன. காண்டம் உற்பத்தி இரண்டு முக்கிய மூலப்பொருட்களான சிலிகான் எண்ணெய் மற்றும் அமோனியாவை அதிகமாக சார்ந்துள்ளது.
பின்விளைவுகளை ஏற்படுத்தும்
சிலிகான் எண்ணெய் ஒரு முக்கியமான மெழுகுப்பொருளாகும். தற்போது அதில் "பெரிய பற்றாக்குறை" நிலவி வருவதால் சந்தையில் பெரும் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. லேட்டக்ஸை நிலைப்படுத்துவதற்கு அமோனியா அவசியமானது. அதன் விலை 40-50 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பேக்கேஜிங் பொருட்களின் விலை உயர்வும் இந்த நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.
காண்டம் உற்பத்தி பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்தால் வெறும் தொழில் துறையில் மட்டும் தாக்கம் ஏற்படாது. சமூக ஆபத்தை விளைவிக்க கூடியது. கட்டாயமாக விலை ஏற்றினால் வருவாய் அதிகரிக்கும். அதேநேரத்தில் விற்பனை குறையும். குடும்ப கட்டுப்பாடு மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாடுடன் நேரடி தொடர்பு காண்டமுக்கு இருப்பதால் நீண்ட கால அடிப்படையில் சமூகத்தில் பின்விளைவுகளை இது ஏற்படுத்தும் என்று உற்பத்தியாளர்கள் கூறினர்.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications