அதுக்குன்னு இப்படியா?.. இருளர் தம்பதியின் காலை கழுவி.. பாலாபிஷேகம் செய்து.. வரவேற்ற பஸ் கண்டக்டர்..!
இருளர் தம்பதிக்கு பாலாபிஷேகம் செய்துள்ளார் அரசு பஸ் கண்டக்டர்
சென்னை: பஸ் ஏற வந்த, இருளர் இன தம்பதிக்கு, அரசு பஸ் கண்டக்டர் பாலாபிஷேகம் செய்து, மாலை போட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார்.. இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் ஏராளமான நரிக்குறவர்கள் வசித்து வருகிறார்கள்.. இவர்கள் பஸ் ஏறி தினமும், நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டிற்கு குழுக்களாக வருவது வழக்கம்..
Recommended Video
இந்த பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றுவட்டார நகர்ப்புற பகுதிகளில், இவர்கள் ஊசி பாசி விற்பனை செய்வார்கள்.. பகல் முழுக்க வியாபாரம் செய்துவிட்டு, சாயங்காலம் மறுபடியும் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் பஸ்ஸில் வள்ளியூர் செல்வது வழக்கம்..

சமாதானம்
எப்போதும் இவர்கள் குழுக்களாகவே வந்து குழுக்களாகவே திரும்பி செல்வார்கள்.. மாலை நேரங்களில் பஸ்ஸில் ஏறினால் இவர்களுக்குள் சத்தமாக பேசி கொள்வதும், சில சமயம் தகராறு செய்து கொள்வதும், கொஞ்ச நேரத்தில் சமாதானமாகிவிடுவதும் வழக்கம்.. இந்நிலையில், 2 நாளைக்கு முன்பு, 3 குழுக்களாக பிரிந்து இவர்கள் பஸ்ஸில் ஏறியுள்ளனர்..

வடசேரி
அந்தவகையில், கணவன், மனைவி மற்றும் 7 வயதுடைய குழந்தை என 3 பேர் வடசேரி பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறினர்.. பஸ் வடசேரி பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்றதுமே, பஸ்சில் தம்பதிக்குள் வழக்கம்போல் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது... இதனால் பஸ்ஸில் இருந்தவர்கள் முகம் சுளித்துள்ளனர்.. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பயணிகள், அவர்களை கீழே இறக்கிவிடும்படி கண்டக்டரிடம் சொல்லி உள்ளனர்..

உடைமைகள்
அதனால், பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வந்த நிலையில் அவர்களை கண்டக்டரும் கீழே இறக்கி விட்டுள்ளார். அத்துடன், நரிக்குறவர் குடும்பத்தின் உடைமைகளையும் பஸ்சில் இருந்து வெளியே தூக்கி வீசியுள்ளார்... அதை பார்த்ததும் அவர்களின் குழந்தை, பயந்து போய் கதறி அழுதது.. இந்த சம்பவம் அத்தனையையும், அங்கிருந்தவர் ஒருவர் வீடியோவாக எடுத்து, சோஷியல் மீடியாவில் பதிவிட்டார்.. இந்த வீடியோவை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.. இறுதியில் சம்பந்தப்பட்ட பஸ் கண்டக்டர், டிரைவர் இருவருமே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ட்வீட்
இந்த சம்பவத்திற்கு திமுக எம்பி கனிமொழியும் கண்டனம் தெரிவித்திருந்தார்.. "சமூக பின்புலத்தை காரணமாக வைத்து பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள் அதிரவைக்கிறது. அனைவரும் சமம் என்ற கொள்கை உடைய ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறும் போது, அரசு அலுவலர்களே இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது. சுயமரியாதை, சமத்துவம் ஆகிய சமூக நீதிக் கொள்கைகளை அனைவருமே நெஞ்சில் ஏந்த வேண்டும்'' என்று பதிவிட்டிருந்தார்.

இருளர்
இந்நிலையில், பஸ்ஸில் பயணிக்க வந்த, வேறொரு இருளர் குடும்பத்தினரை, அந்த பஸ்ஸின் கண்டக்டர் பால் அபிஷேகம் செய்து வரவேற்றுள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.. இது சம்பந்தமான ஒரு வீடியோவும் வைரலாகி வருகிறது.. பெரம்பூர் பஸ் ஸ்டாண்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இருளர் தம்பதியினர் 2 பேர் பஸ்ஸில் ஏறுவதற்காக அங்கே வந்துள்ளனர்.. 242 -ம் நம்பர் பஸ்ஸில் ஏற சென்ற அவர்களை, டிரைவரும், கண்டக்டரும் தடுத்து நிறுத்தி உள்ளனர். டிரைவர் பெயர் அப்துல்மன்னா, கண்டக்டர் பெயர் பூமணி..

பாலாபிஷேகம்
தம்பதியை பஸ் படிக்கட்டுக்கு அருகிலேயே நிற்கவைத்து, பால் அபிஷேகம் செய்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.. கையில் ஒரு பால்பாக்கெட்டுடன் வந்த கண்டக்டர், அந்த இருளர் தம்பதியின் காலில் பாலை பீய்ச்சி அடிக்கிறார்.. அருகிலேயே டிரைவர், கையில் ஆரத்தி, குங்குமம், மஞ்சள் தட்டுடன் நின்று கொண்டிருக்கிறார்.. பாலாபிஷேகம் முடிந்த பிறகு, தம்பதிக்கு காலில் மஞ்சள், குங்குமம் தடவி விடுகிறார் கண்டக்டர்.. பிறகு, தம்பதிக்கு ஆளுக்கொரு மாலையை எடுத்து அணிவிக்கிறார்.. இறுதியில், தட்டில் கற்பூரம் ஏற்றி அவர்களுக்கு சுற்றி போட்டு, பஸ்ஸில் ஏற சொல்கிறார். இதுதான் அந்த வீடியோ.

சர்ச்சை
தாங்கள் அனைவரையும் மதிக்கிறோம், யாரையும் அவமானப்படுத்தவில்லை என்பதை விளக்குவதற்காகவே கண்டக்டரும், டிரைவரும் இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளதாகவே தெரிகிறது.. அதேசமயம், இந்த வீடியோ சர்ச்சையையும் கிளப்பி விட்டுள்ளது.. 'சக மனிதர்களை மதிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. அதற்காக ரொம்ப கேவலமான விஷயம் இது... இதுக்கு அந்த வடசேரி கண்டக்டர் செய்ததே பரவாயில்லை போல.. தேவையற்ற விளம்பரம் இது" என்ற கருத்துக்கள் இது சம்பந்தமாக எழுந்து வருகின்றன..

வைரல் வீடியோ
அதுமட்டுமல்ல, பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் இப்படியெல்லாம் செய்யலாமா? மனிதனை மனிதனாக மட்டுமே நடத்தினால் போதும், ஏற்றவும் வேண்டாம், இறக்கவும் வேண்டாம் என்றும் பொதுமக்கள் கருத்து கூறி வருகின்றனர்.. இதையெல்லாம் பார்த்தால், எம்பி கனிமொழி சொன்னதுபோல, "சுயமரியாதை, சமத்துவம் ஆகிய சமூக நீதிக் கொள்கைகளை அனைவருமே நெஞ்சில் ஏந்த வேண்டும்" என்ற வலிய கருத்தைதான், மறுபடியும் நாம் சொல்ல வேண்டி இருக்கிறது.
-
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications