Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவர் இல்லைன்னா.. அதிமுக இல்லையா? எடப்பாடியை கடுப்பாக்கிய "இமேஜ்".. இப்படி முடிவெடுத்துட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் கோவை வேலுச்சாமி, மைத்ரேயன், முல்லைவேந்தன், சின்னச்சாமி ஆகியோரை நியமித்து நேற்று உத்தரவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நியமனம், அதிமுக வட்டாரங்களில் பேசு பொருளாகியிருக்கிறது.

குறிப்பாக, கோவையில் கோலோச்சும் நிர்வாகி ஒருவருக்கு செக் வைக்கும் விதமாகவே கோவை வேலுச்சாமியை கட்சியின் மாநில பொறுப்புக்குள் கொண்டு வந்திருக்கிறார் எடப்பாடி என்கிற விவாதம் அதிமுகவில் தொடங்கியிருக்கிறது.

aiadmk general committee edappadi palaniswami

கோவையில் கோலோச்சும் நிர்வாகிக்கு எதிரானவர்கள் இந்த விவாதத்தை பேசு பொருளாக்கி வருகின்றனர். நம்மிடம் மனம் திறக்கும் அவர்கள், ''பாஜக மேலிடத்தில் தொடர்பு வைத்துக் கொண்டு எடப்பாடிக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார் அந்த கோவை புள்ளி அது மட்டுமல்லாமல், கோவையில் அவரில்லாமல் அதிமுக இல்லைங்கிற இமேஜை உருவாக்கி வைத்துள்ளார். இதை வைத்துதான் எடப்பாடிக்கு அவர் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்.

இதையெல்லாம் எடப்பாடி ரசிக்கவில்லை. அவ்வப்போது சமாதானங்கள் நடந்தாலும், உள்ளுக்குள் எடப்பாடிக்கு எதிராக கட்சிக்குள் அந்த கோவை புள்ளி செயல்படுவதாக எடப்பாடி திடமாக நினைக்கிறார். மேலும், அந்த கோவை புள்ளிக்கு எதிராக இன்னும் சில சீக்ரெட் தகவல்கள் எடப்பாடி யிடம் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், அந்த கோவை புள்ளியை மட்டுமே நம்பி சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது கோவையில் முழு வெற்றியை பெற முடியாது என நினைக்கிறார். அதனால்தான், அந்த கோவை புள்ளிக்கு இணையாக கோவையில் செல்வாக்கு வைத்திருக்கும் வேலுச்சாமிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்'' என்று சொல்கின்றனர்.

ஷாக்கில் கோவை புள்ளி:

அந்த கோவை புள்ளியின் ஆதரவாளர்களிடம் இது குறித்து விசாரித்தபோது, ''எடப்பாடிக்கும் அந்த கோவை புள்ளிக்கும் எந்த முரண் பாடுகளும் இல்லை. வேலுச்சாமியை அமைப்புச் செயலாளராக நியமிக்கும் முடிவை அந்த கோவை புள்ளியிடம் கலந்துப்பேசித்தான் எடப்பாடி எடுத்திருக்கிறார். அந்த கோவை புள்ளியின் எதிரிகள் உருவாக்கும் வதந்தி இது'' என்று விவரிக்கிறார்கள். வேலுச்சாமியை நியமிக்கும் விவகாரம் இத்தகைய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதிமுகவின் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு பேரில் மூன்று பேர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது, அதிமுகவின் மற்ற சமூகத் தலைவர்களிடம் அதிருப்தியை உருவாக்கி வருவதாகவும் அதிமுகவின் உள்வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அதிமுக பிளான்:

இன்னொரு பக்கம் அதிமுக பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளதாம். பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் பிரஷாந்த் கிஷோர் இப்போது வெளிப்படையாக பணிகளை செய்வது இல்லை. அவரின் நிறுவனம் மட்டுமே பணிகளை செய்கிறது. அந்த நிறுவனத்தின் நிறுவனர் இப்போதும் பிரஷாந்த் கிஷோர்தான்.

அவர் நேரடியாக பணிகளை செய்ய மாட்டார். ஏனென்றால் அவர் தனியாக அரசியல் கட்சி நடத்தி வருகிறார். ஆனாலும் பிரஷாந்த் கிஷோர்தான் தேர்தல் திட்டங்களை ஐபேக் நிறுவனத்திற்காக வகுத்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த நிறுவனத்துடன் எடப்பாடி பழனிசாமி ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே இதற்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

எடப்பாடி யாத்திரை: சமீபத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 234 தொகுதிகளிலும் ஜனவரி இறுதியில் சூறாவளி சுற்றுப்பயணம். அஇஅதிமுக தலைமையில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும்; உறுதியாக, அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும், என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனைகள் செய்யப்பட்டன
ஒன்றரை ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பொதுக்குழு கூடியுள்ளது. அதிமுகவில் பிரிந்த தலைவர்கள் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்று டாப் தலைவர்கள் பலர் நினைக்கிறார்களாம். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய பெரிய தலைகள் எல்லாம் இந்த கோரிக்கையை வைக்க தொடங்கி உள்ளனராம். அதிமுகவில் இது புதிய பூகம்பத்தை கிளப்பி உள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+