காலாவதியாகிவிட்டது.. எல்லா பதவியும் ஓவர்.. அண்ணாமலை கையில் எடுக்கும் கடைசி அஸ்திரம்.. என்ன ஆகுமோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் பதவியைத் தவிர, கட்சியின் மற்ற அனைவரின் பதவிகளும் ஆகஸ்ட் 31-ந்தேதி காலாவதியாகிறது. பாஜகவில் நியமனப் பதவிகள் 3 ஆண்டுகளுக்கும் மட்டுமே செல்லுபடியாகும்.

அதன்பிறகு, அந்த பதவிகள் புதுப்பிக்கப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும். அந்த வகையில், தமிழக பாஜகவில் தலைவர் பதவியைத் தவிர, அனைத்து நிலை பதவிகளும் காலியாகிறது. மீண்டும் அந்த பதவிகளை நியமிப்பதற்கு முன்பாக, 1 கோடி தொண்டர்களை உருப்பினராக சேர்க்க கட்சி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை உத்தரவு பிறப்பித்திருக்கிறார். தற்போது 50 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், மேலும் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் வேலையைத் துவக்குமாறு மாவட்ட நிர்வாகிகளுக்குக் கட்டளைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

annamalai

உறுப்பினர் சேர்க்கை: புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கு பிறகு புதிய நிர்வாகிகள் அனைத்து நிலைகளிலும் நியமிக்கப்படுவார்கள் என்கிறது பாஜக வட்டாரம். மேற்படிப்புக்காக அடுத்த மாதம் அண்ணாமலை வெளிநாட்டுக்கு செல்லும் நிலையில், கட்சி நிர்வாகிகளின் பதவி காலம் முடிவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு செல்ல உள்ளார். லண்டனில் அவர் சில நாட்கள் தங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலையில் அண்ணாமலை படிக்க உள்ளார். சர்வதேச அரசியல் என்ற படிப்பை படிக்க அண்ணாமலை செல்கிறார். அது சான்றிதழ் படிப்பு. சில மாதங்கள் அங்கு தங்கி படிக்க வேண்டும்.

இந்தியாவில் இருந்து 12 அரசியல் தலைவர்களை ஆக்ஸ்போர்ட் அழைப்பது வழக்கம். அப்படி அண்ணாமலைக்கு இந்த முறை தேர்வாகி உள்ளார். இதற்காக அங்கே செல்லவும் அண்ணாமலை 4-5 மாதங்கள் அங்கேயே இருக்க உள்ளார்.

தலைவர் பதவி: இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம்.. அவர் வெளிநாட்டில் இருக்கும் வரை தற்காலிக தலைவர் கொண்டு வரப்படலாம் என்று செய்திகள் வருகின்றன. அவர் தலைவர் பதவியில் இருந்தே கூட மாற்றப்படலாம் என்றும் செய்திகள் வருகின்றன. அண்ணாமலை வெளிநாட்டில் இருப்பதால் கட்சி நடத்த ஆள் தேவை.. கட்சியை வழிகாட்ட வேண்டும். 3 மாதங்கள் தலைவர் இல்லாமல் இருக்க முடியாது.. இதனால் ஒருவரை தற்காலிகமாக களமிறக்க வேண்டும். அல்லது நிரந்தரமாக களமிறக்க வேண்டும் என்று டெல்லி நினைக்கிறதாம். ஆனால் அதே சமயம் அண்ணாமலை மீதும் டெல்லிக்கு நன்மதிப்பு உள்ளது.

தலைவர் மாற்றம் உண்மையா?: பல்வேறு அரசியல் நிபுணர்கள் இது தொடர்பாக இணையத்தில் தகவல்களை வெளியிட தொடங்கி உள்ளன. நாமும் இது தொடர்பாக பாஜகவில் சிலரிடம் பேசினோம். பாஜக தலைவர் விவகாரம் தொடர்பாக சில முக்கியமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்தனர்.

தமிழ்நாடு பாஜகவில் யாருமே எதிர்பார்க்காத சம்பவங்கள் நடந்து வருகின்றன. முக்கியமாக லைம் லைட்டில் தமிழ்நாட்டில் இருந்த பாஜக சட்டென சைலண்ட் ஆகி உள்ளதும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

இப்போதைக்கு தலைவர் மாற்றம் உறுதியாகிவில்லை என்றே நம்மிடம் பேசி பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இது தொடர்பாக ஆலோசனை நடந்து உள்ளது. ஆனால் நியமிக்கப்பட போவது தற்காலிக தலைவரா .. நிரந்தர தலைவரா என்பது தெரியாது.

தமிழக பாஜக தலைவர் மாற்றம்; ஒரு மூத்த நிர்வாகியின் பெயர் தலைவர் பதவிக்கு அடிபட்டுக்கொண்டு இருக்கிறது. அவர் மீது டெல்லி பாஜகவிற்கு நல்ல அபிப்ராயம் உள்ளது. ஆனாலும் அண்ணாமலைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் டெல்லி உள்ளது. அண்ணாமலைதான் கட்சியை வளர்த்தார்.. இரண்டு இலக்கத்தில் வாக்கு வங்கியை கொண்டு சென்றது அவர்தான் என்ற பெருமை டெல்லிக்கு உள்ளது. அவர் வெளிநாடு செல்வது மட்டுமே அண்ணாமலைக்கு எதிராக உள்ளது. மற்றபடி டெல்லி அவரை நம்பாமல் எல்லாம் இல்லை. அவர் பதவியில் தொடர வேண்டும் என்பதே விருப்பம்.. ஆனால் அவர் வெளிநாடு செல்வது மட்டுமே அண்ணாமலைக்கு எதிராக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+