ஆமா நடைப்பயணம் என்னாச்சு? திருநெல்வேலியில் அண்ணாமலை எடுத்த திடீர் முடிவு.. ஷாக்கான பாஜக.. ஏன் இப்படி
சென்னை: பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடைபயணத்திற்கு இடையே முக்கியமான முடிவு ஒன்றை அண்ணாமலை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசியலில் கடந்த ஒரு வாரம் ரோலர் கோஸ்டர் போலத்தான் இருந்தது. முதல்வர் ஸ்டாலினின் மதுரை, ராமநாதபுரம் பயணங்கள் பெரிய அளவில் கவனம் ஈர்த்தன. அதை தொடர்ந்து அதிமுகவின் பொதுக்கூட்டம் மதுரையில் நடந்தது.

மதுரையில் அதிமுகவின் எழுச்சி மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் நடந்த மிகப்பெரிய மாநாடு ஆகும் இது.
பொதுவாக எடப்பாடி பழனிச்சாமி என்றால் கோவை, கொங்கு என்ற பிம்பம் உண்டு. அதேபோல் கவுண்டர்களுக்கான கட்சி என்ற பிம்பமும் வந்துவிட்டது. அதை உடைக்கும் வகையில் மதுரையிலும், முக்குலத்தோரை அழைத்தும் மிக பிரம்மாண்ட மாநாட்டை நடத்தி காட்டி இருக்கிறார் எடப்பாடி.
அதிமுகவினர் இடையே புதிய உற்சாகத்தை இந்த மாநாடு கொடுத்து உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு மிகப்பெரிய தொடக்கமாக இந்த மாநாடு அமைந்து உள்ளது. சுணங்கி போன தொண்டர்கள் எழுச்சி பெறுவதற்கு இந்த மாநாடு சிறப்பாக வழி ஏற்படுத்தியும் கொடுத்து உள்ளது.
இன்னொரு பக்கம் திமுகவின் நீட் எதிர்ப்பு போராட்டம் நடந்தது. தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது. சமீபத்தில் நீட் தேர்வில் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காத சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (19) என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த எதிர்ப்பை தீவிரம் ஆக்கி உள்ளது.
இதை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமை திமுக சார்பாக மாபெரும் கண்டன உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இந்த உண்ணாவிரதத்தில் தண்ணீர் கூட குடிக்காமல் நாள் முழுக்க கொடும் பட்டினி இருந்து இவர்கள் விரதம் இருந்து உள்ளனர்.
திமுகவின் உண்ணாவிரத போராட்டம், அதிமுக பொதுக்கூட்டம் காரணமாக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் நடப்பதே தெரியாமல் போய்விட்டது. மக்கள் ஆதரவு இல்லாமல், நடைப்பயணத்திலும் சுவாரசியம் இல்லாமல் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. அவரும் பெரிதாக நடக்காமல் முடிந்த வரை காரில் பயணம் செய்து வருகிறார்.
இந்த நடைபயணம் மக்கள் இடையே பெரிதாக பிரபலம் அடையாத நிலையில்தான் தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடைபயணத்திற்கு இடையே முக்கியமான முடிவு ஒன்றை அண்ணாமலை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் முதற்கட்டம் திருநெல்வேலியில் இன்றுடன் நிறைவு பெற உள்ளது.
இதனையடுத்து, தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இந்த நடைபயணத்தின் 2ம் கட்டம் செப்டம்பர் 3ம் தேதி துவங்க உள்ளது. அதாவது பயணத்திற்கு இடையில் கிட்டத்தட்ட 10 நாட்கள் ஓய்வு எடுக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முழுக்க முழுக்க நடந்து பயணம் செய்து போதும் கூட அதிகபட்சம் 2 நாட்கள் மட்டுமே ஓய்வு எடுத்தார்.
ஆனால் அண்ணாமலை பெரும்பாலும் காரில் செல்லும் போதும் கூட 10 நாட்கள் திடீரென ஓய்வு எடுப்பதாக அறிவித்து இருப்பது விவாதங்களையும், விமர்சனங்களையும் உருவாக்கி உள்ளது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications