சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கட்சியை இணைச்சிடுங்க".. பாஜக கொடுத்த ஆபர்.. வாஷ் அவுட் ஆக போகும் "அந்த" கட்சி? ஆஹா கேம் ஓவரா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் மாநில கட்சி ஒன்றையும் தங்களுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்காக கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக இன்றுதான் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களை செய்தது. வருகின்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் லோக்சபா தேர்தல் பற்றியும், அதற்காக பூத் வாரியாக கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு பக்கம் அதிமுகவும் மெகா கூட்டணிக்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கி உள்ளது. அதிமுக தலைமையில் இந்த லோக்சபா தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

துண்டு 35.. வேற வழியேயில்லை.. பிரதமர் மோடியே இங்கு மீண்டும் தேவை.. பாஜக லிஸ்ட்டில் சேர்ந்த துண்டு 35.. வேற வழியேயில்லை.. பிரதமர் மோடியே இங்கு மீண்டும் தேவை.. பாஜக லிஸ்ட்டில் சேர்ந்த

 மெகா கூட்டணி

மெகா கூட்டணி

அதிமுகவின் இந்த மெகா கூட்டணியில் இணைய தயார் என்று பாஜக அண்ணாமலை வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். இந்த நிலையில்தான் பாஜக தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியமான கட்சி ஒன்றை தங்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி நூல் விட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. பல்வேறு சிறிய கட்சிகளை பாஜக தங்களுடன் இணைத்து உள்ளது. தேசிய அளவில் தனியாக செயல்பட்ட சிறிய கட்சிகள் பல பாஜகவுடன் இணைந்து உள்ளது. இணைவது என்றால் கூட்டணி பற்றியது அல்ல.. மொத்தமாக கட்சியை கலைத்துவிட்டு பாஜகவுடன் இணைத்துக்கொள்வது.

பாஜக

பாஜக

உதாரணமாக ஜனதா கட்சியை சுப்பிரமணியன் சாமி பாஜக கட்சியுடன் இணைத்தார். அதன்பின் பாஜகவில் முக்கிய உறுப்பினராக சுப்பிரமணியன் சாமி இருக்கிறார். இவர் பிரதமர் மோடிக்கு எதிராக அடிக்கடி பேசி வருகிறார். நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஆனாலும் இவருக்கு எதிராக கட்சி எந்த விதமான ஒழுங்கு நடவடிக்கைகளையும் எடுத்தது இல்லை. இவருக்கு கட்சியில் இப்போதும் தனி மரியாதை, அந்தஸ்து இருக்கிறது.

சுப்பிரமணியன் சாமி

சுப்பிரமணியன் சாமி

இதேபோல்தான் தமிழ்நாட்டில் இருக்கும் மாநில கட்சி ஒன்றை பாஜகவுடன் இணைத்துக்கொள்ள பாஜக ஆபர் கொடுத்து இருக்கிறதாம். அந்த கட்சி டாப் நிர்வாகியிடம் இது தொடர்பாக ஏற்கனவே பாஜக நிர்வாகிகள் பேசி இருக்கிறார்களாம். அவர் சமீபத்தில் பாஜகவின் டாப் தலைகள் சிலரை நேரில் சந்தித்தார். அப்போது இந்த ஆபர் பற்றி பேசப்பட்டதாக கூறப்படுகிறது. உங்கள் கட்சிக்கு வாக்கு வங்கி இருக்கிறது. ஆனால் எதிர்காலம் இல்லை. நீங்கள் தனித்து செயல்பட்டால் உங்கள் வாக்கு வங்கி போய்விடும்.

தமிழ்நாடு கட்சி

தமிழ்நாடு கட்சி

உங்களுக்கு வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் இருந்து வாக்கு வங்கி சரியும் வாய்ப்புகள் உள்ளன. அதனால் நீங்கள் எங்களுடன் இணைந்துவிடுங்கள். கொள்கை ரீதியாக நாம் ஒத்துப்போவோம். நமது கட்சிகளுக்கு இடையில் பெரிய வேறுபாடு இல்லை. நாம் ஏற்கனவே கூட்டணியில் இணைந்து இருக்கிறோம். அதனால் எங்கள் கட்சியுடன் உங்கள் கட்சியை இணைத்து விடுங்கள். உங்களுக்கும் அதுதான் நல்லது என்று பாஜக சார்பாக அந்த தமிழ்நாட்டை சேர்ந்த மாநில கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறதாம்.

பாஜக பிளான்

பாஜக பிளான்

அந்த கட்சியும் தங்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைய தயார்தான் என்கிறார்கள். ஆனால் அந்த கட்சி முக்கியமான இரண்டு கோரிக்கைகளை வைத்து உள்ளதாம். பாஜகவில் இணைந்தால் கட்சியை சேர்ந்த மூத்த தலைவருக்கு கட்சியில் பெரிய போஸ்டிங் வேண்டும். இன்னொரு தலைவருக்கு ராஜ்ய சபா சீட் வழியாக அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறதாம். நாங்கள் கட்சியையே கொடுக்க ரெடியாகி இருக்கிறோம்.

மனம் இல்லை

மனம் இல்லை

எங்களுக்கு கட்சியை இழக்க மனம் இல்லை. ஆனால் பாஜக என்பதால் இணைந்து கொள்கிறோம். ஆனால் நீங்கள் எங்களுக்கு இந்த இரண்டு பதவிகளையும் கொடுக்க வேண்டும். மூத்த தலைவருக்கு கட்சியில் பெரிய போஸ்டிங் வேண்டும். இன்னொரு தலைவருக்கு ராஜ்ய சபா சீட் வழியாக அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் கண்டிப்பாக நாங்கள் பாஜகவில் எங்கள் கட்சியை இணைத்துக்கொள்வோம் என்று கூறி இருக்கிறார்களாம். இதில் கட்சியில் பெரிய போஸ்டிங் கொடுக்க பாஜக தயார் என்கிறார்கள். அதேபோல் ராஜ்ய சபா எம்பி சீட் கொடுக்கவும் பாஜக தயாராம். ஆனால் அமைச்சர் பதவி மட்டும் கொடுக்க முடியாது. அதற்கு வாய்ப்பில்லை ராஜா என்று பாஜக தேசிய தலைவர்கள் சொல்லி இருக்கிறார்களாம். அந்த கட்சியை இணைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறதாம்.

English summary
Is BJP asking a Tamil Nadu local party to merge with it? What is the plan?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X