சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேட்டுச்சா.. பாஜக தானாமே.. வெடித்த அண்ணாமலை.. இதெல்லாம் அதிமுகவுக்கு தேவையா.. குஷியில் திமுக..!

திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்று அண்ணாமலை மீண்டும் சொல்லி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: சமீப காலமாகவே, திமுகவுக்கு மாற்று பாஜகதான் என்று மாநில தலைவர் அண்ணாமலை சொல்லி வருவது, அரசியல் களத்தில் புகைச்சலை ஏற்படுத்தி கொண்டே இருக்கிறது.

அதிமுக கூட்டணியில்தாம் இருக்கிறோம் என்ற சுவடே தெரியாமல் பல சமயங்களில் தமிழக பாஜக, அக்கட்சியை டேமேஜ் செய்துவிடும்.. அதில் அதிமுக நிறைய முறை சிக்கி கொண்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இருந்தே, அதிலும் 4 சீட் வெற்றி பெற்றதில் இருந்தே தமிழக பாஜகவின் அணுகுமுறையில் நிறைய மாற்றங்கள் தென்பட ஆரம்பித்துவிட்டது.

செம ட்விஸ்ட்டா இருக்கே.. அண்ணாமலை ஏன் அப்படி சொல்றாரு தெரியுமா.. திமுகவுக்கு இப்படி பிரச்சனை வருதா? செம ட்விஸ்ட்டா இருக்கே.. அண்ணாமலை ஏன் அப்படி சொல்றாரு தெரியுமா.. திமுகவுக்கு இப்படி பிரச்சனை வருதா?

அண்ணாமலை

அண்ணாமலை

4 மாதங்களுக்கு முன்பே திமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்று சொல்ல ஆரம்பித்தார் அண்ணாமலை.. "திமுகவின் விமர்சனங்கள் அனைத்தும் பாஜகவை எதிர்த்தே முன்வைக்கப்படுகின்றன... பேச்சு அரசியலில் அவங்களுக்கு நாங்கதான் எதிரி... எங்களுக்கு அவங்கதான் எதிரி. எங்க 2 பேருக்கும் நடுவில்தான் யுத்தம் நடக்கிறது. இது இரு முனைப் போட்டியாக சென்று கொண்டிருக்கிறது" என்றார். அண்ணாமலை இப்படி சொன்னதுமே அதிமுகவில் கொந்தளிப்பு வெடித்தது.. அதிலும் ஒருமுறை மூத்த தலைவர் வைகைசெல்வன் சரியான பதிலடியை ஒரு பேட்டியில் தந்திருந்தார்..

 முக ஸ்டாலின்

முக ஸ்டாலின்

தமிழக அரசியல் களம் என்றாலே திமுகவுக்கு போட்டி அதிமுகதான்.. 7 முறை ஆட்சியை பிடித்தவர்கள்.. 50 ஆண்டுகால பொன்விழாவை கொண்டாடுகிறோம்.. அதனால் வேறு எந்த கட்சியும் இதில் சொந்தம் கொண்டாட முடியாது. அண்ணாமலை அப்படி சொன்னாலும், அவர்களுக்கு பலம் இருக்கிறதா, இல்லையா என்பதை இன்னொரு தேர்தலில்தான் பார்க்க முடியும்... அண்ணாமலையின் பேச்சு முதிர்ச்சியற்றது" என்று வைகை செல்வன் பதிலடி தந்திருந்தார்.

சசிகலா

சசிகலா

ஆனால் ஒருசிலர் அண்ணாமலையின் பேச்சை அப்போது வரவேற்கவே செய்தார்கள்.. அண்ணாமலை பாஜக மாநில தலைவராக பொறுப்புக்கு வந்தபிறகுதான் கட்சி சூடுபிடித்துள்ளது.. நிறைய பேர் உறுப்பினர்களாகி உள்ளனர்.. வாக்கு சதவீதம் உயர்ந்து வருகிறது.. அதிமுகவில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது.. சசிகலாவை இவர்களால் சமாளிக்க முடியவில்லை.. ஊழல் விவகாரங்கள், கோர்ட், கேஸ் என பல விஷயங்களில் மாட்டி உள்ளனர்.. திமுகவின் வேகத்துக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.. இதைதான் நயினார் அன்று அதிமுகவை நேரடியாகவே தாக்கி பேசினார்.. திமுகவுக்கு பதிலடியை தந்து கொண்டிருப்பது பாஜகதான் என்கின்றனர்.

அண்ணாமலை

அண்ணாமலை

மேலும் சிலரோ, ஜெ.இறந்ததுமே பாஜகவின் கிளைகழகமாக அதிமுக மாறிவிட்டது.. அதனால்கூட அண்ணாமலை இப்படி சொல்ல ஆரம்பித்திருக்கலாம் என்கிறார்கள்.. எனினும் அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக மேலிடம் இதுவரை எந்த கருத்தையும் சொன்னதில்லை.. அதனால்தானோ என்னவோ, இன்றும் அண்ணாமலை அதே கருத்தை விழுப்புரம் பிரச்சாரத்தில் சொல்லி உள்ளார்.

அதிமுக

அதிமுக

அண்ணாமலை பேசும்போது, "திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை... நகைக்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை.. கடன் வைத்தவர்களில் 73 சதவீதம் பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்ற வாக்குறுதியை இதுவரை திமுக நிறைவேற்றவில்லை... இதை கேட்டால் இன்னும் நான்கரை ஆண்டுகள் ஆட்சி இருப்பதாக திமுக பதில் சொல்கிறது. திமுக மீது மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது.

பாஜக

பாஜக

பாஜகவால் மட்டுமே திமுக ஊழலைத் தட்டிக்கேட்க முடியும்... ஊழல்வாதிகளால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. மத்திய மோடி அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் அனைத்து குடிமக்களும் பயனடைந்துள்ளனர். கோவிட் தடுப்பூசியை 100 கோடி பேருக்கு செலுத்தியதே மோடி அரசின் மிகப்பெரிய சாதனை. மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி தனது திட்டம் போல மாநில அரசு அமல்படுத்துகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுகவுக்கு மாற்று பாஜகதான்" என்று தெரிவித்துள்ளார்.

திராவிடம்

திராவிடம்

அண்ணாமலை சொல்வது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.. தமிழ்நாட்டில் பாஜக என்பது நிராகரிக்கப்பட்ட கட்சியாக உள்ள நிலையில், அதிமுகவின் வாக்குகளை அடிப்படையாக வைத்து போட்டியிட்டதால்தான், அதிலும் சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டிருந்தால் பாஜகவின் பலம் என்னவென்பது தெரியவரும்.. அவ்வளவுகூட வேண்டாம், நடக்க போகும் ஊரக உள்ளாட்சி தேர்தலில்கூட தெரிந்துவிட வாய்ப்புள்ளது, திமுகவுக்கு மாற்று பாஜகவா? அல்லது திராவிடம் கலந்த அதிமுகவா என்று..!

English summary
Is bjp the alternative to DMK in Tamilnadu, why did Annamalai say
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X