அங்க குஜராத் மாடல், இங்க திராவிட மாடல்! அங்க 400; இங்க 200! பாஜக பாணியில் நடைபோடும் ஸ்டாலின்?
சென்னை: பாஜகவின் தேர்தல் வியூகங்களைக் கடுமையாக எதிர்க்கும் திமுக, அப்படியே அதைத் தனது கட்சி வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசியல் களத்தில் பாஜகவும் திமுகவும் எதிரும் புதிருமாகச் செயல்பட்டு வருகின்றன என்பது அனைவரும் அறிந்த செய்திதான்.

வெளிப்படையாக மோடி எதிர்ப்புதான் திமுகவின் பிரதான கொள்கை. அப்படி என்றால், பாஜகவை திமுக எதிர்க்கவில்லையா? என உடன்பிறப்புகள் கேள்வி கேட்கக் கூடும்.
ஆனால், சாஃப்ட் இந்துத்துவா என்ற அளவில் ஏற்கெனவே வாஜ்பாய் அரசுக்கு திமுக ஆதரவு அளித்ததுடன், அமைச்சரவையில் கூட அங்கம் வகித்ததைப் பலரும் அறிவார்கள். 'குறைந்த பட்ச செயல் திட்ட'த்தின் அடிப்படையில் திமுக வாஜ்பாய் அரசாங்கத்தை ஆதரித்தது என்பது திமுக தரப்பு வாதம்.
அதையும் மறுப்பதற்கு இல்லை. அப்படி ஒரு கொள்கை அடிப்படையில்தான் என்.டி.ஏ கூட்டணியில் முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி இடம்பெற்றார்.
அதன்பின்னர் திமுக தலைமைப் பொறுப்புக்கு வந்த ஸ்டாலின் மோடி எதிர்ப்பை மிகத் தீவிரப்படுத்தினார். அப்போது அவருக்குப் பின்புலமாகத் தேர்தல் அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் மேலான பணியை பிரசாந்த் கிஷோர் ஏற்றிருந்தார்.
ஐ பேக் பல கட்ட வெற்றி வியூகங்களைக் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்காக திமுகவுக்குப் போட்டுக் கொடுத்தது. ஒரே நபர் இரண்டு எதிர் எதிர் கொள்கைகளைக் கொண்ட கட்சிகளுக்குத் தேர்தல் வியூகங்களை அமைத்துக் கொடுத்தார்.
ஆகவே, 2014 மோடி பிரதமராக முன்வைக்கப்பட்ட போது என்ன வியூகங்கள் முன்வைக்கப்பட்டதோ அதே சாயல் ஸ்டாலின் வியூக திட்டங்களிலும் எதிரொலித்தது.
குறிப்பாக 2014இல் 'குஜராத் மாடல்' என்பதுதான் பிரதான முழக்கமாக இருந்தது. மோடி குஜராத்திற்கு முதல்வராகப் பதவியேற்ற போது அம்மாநிலம் மிகப்பெரிய பூகம்பத்தைச் சிக்கித்தவித்திருந்தது.
அதற்கு முன்னதாக சூறாவளி, கடும் வறட்சி என பல சிக்கல்கள் அம்மாநில வளர்ச்சியைப் பாதிக்கும் காரணிகளாக இருந்தன. இந்தச் சவால்களை மோடியும் அவரது குழுவும் 3 ஆண்டுகளில் சீர் செய்தது. மேலும் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையை நோக்கி இட்டுச் சென்றது.
குறிப்பாக ஊழலை ஒழிக்க, வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க , தொழில்நுட்பத்தின் பயன்பாடு முக்கிய பங்காற்றியது. இதை அந்த அரசும் ஊடகங்களும் வெளிச்சம் போட்டுக் காட்டின.
மேலும் குஜராத் ஒரு துறையை மட்டுமே திட்டமிட்டு வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லாமல் அனைத்து துறைகளையும் சம அளவில் வளர்ச்சியை நோக்கி உயர்த்தியது. விவசாயத்திற்குச் சமமாகத் தொழில்நுட்பத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டு முதல் குஜராத்தில் தொழில்துறை வளர்ச்சி புதிய உயரங்களை எட்டியது. 2003 ஆம் ஆண்டு நடந்த குஜராத் உச்சி மாநாடுகள் பல வழிகளில் முதலீட்டை ஈர்த்தது.
பள்ளியில் இடைநிற்றல் அளவைக் குறைக்க 2004 ஆம் ஆண்டு கவனம் செலுத்தப்பட்டது. அது நல்ல முடிவுகளை வழங்கியது. கரிப் கல்யாண் மேளாக்கள் மூலம் எந்த இடைத்தரகர்களும் இல்லாமல் வளர்ச்சியின் பலன்கள் பயனாளிகளைச் சென்றடைந்ததாக அரசு சொன்னது.
2008 ஆம் ஆண்டு குஜராத் அரசு பழங்குடியின சமூகங்களின் மேம்பாட்டிற்காக வன்பந்து கல்யாண் யோஜனாவை அறிமுகப்படுத்தியது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 40,000 கோடி.
குஜராத்தின் கௌசல்ய வர்தன் திட்டத்திற்காக மாநில அரசு சிறந்து விளங்கியதற்காக 2013 ஆம் ஆண்டு பிரதமரின் விருது வழங்கப்பட்டது.
இப்படிப் பல வளர்ச்சிகளைச் சுட்டிக்காட்டித்தான் 2014இல் மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த பாஜக, 'குஜராத் மாடல்' இந்தியாவை மீட்கப் போவதாகச் சொன்னது.
அதைப்போன்றே திமுக ஆட்சிக்கு வந்ததும், அவரது ஆட்சிக்கு ஸ்டாலின் 'திராவிட மாடல்' எனப் பெயர் சூட்டினார். இதற்கு முன்னதாக தமிழ்நாட்டில் கூட்டணிக்குத்தான் பெயர் வைக்கும் மரபு இருந்தது. முதன்முறையாக மோடியைத் தொடர்ந்து ஆட்சிக்கு ஒரு பெயரைச் சூட்டும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தார் ஸ்டாலின்.
அதைப்போலவே இப்போது மக்களவைத் தேர்தலில் பாஜக 400க்கு மேல் என ஒரு முழக்கத்தை முன்வைத்தது. அது சர்ச்சையை ஏற்படுத்தியது. 400 க்கு மேல் பாஜக வெற்றி பெற்றால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடுவார்கள் எனக் காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணியில் எதிர்க்கட்சிகள் மக்களிடம் எதிர்வாதத்தை முன்வைத்தனர்.
ஒரு கட்சி அதிகப் பெரும்பான்மைக்கு வருவது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் என திமுக உட்படப் பல கட்சிகள் கூறின. ஆனால், இப்போது மக்களவைத் தேர்தல் முடிவு வந்த பிறகு பாஜக 240 இடங்களைத்தான் பெற்றது. அதைச் சுட்டிக்காட்டிய முதல்வர் ஸ்டாலின், மக்கள் கூட்டணி அரசையே விரும்புகிறார்கள். அதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்பதைப் போல அறிக்கை விட்டிருந்தார்.
ஆனால், அதன்பின்னர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெல்ல வேண்டும் எனக் கட்சியினருக்குக் கட்டளைப் போட்டுள்ளார். அப்படிப் பார்த்தால், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு திமுக இலக்கு நிர்ணயித்துள்ளது.
பாஜக 400 இடங்களைப் பிடித்தார் சர்வாதிகாரம் வந்துவிடும் என்று பேசிய முதல்வர் ஸ்டாலின், இப்போது சட்டசபையில் பெரும்பான்மையை மீறிய இடங்களைப் பிடிக்க வேண்டும் என்கிறார்.

ஆக, வலுவான எதிர்க்கட்சியே இல்லாமல் போகாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் சட்டப்பேரவையில் ஜனநாயகம் பாதிக்கப்படாதா? என்றும் சில கேள்வி எழுப்புகிறார்கள்.
குறிப்பாக பாஜகவினர் தங்களின் 400இடங்களை நிர்ணயம் செய்து பிரச்சாரத்தைக் கையில் எடுத்து என்றும் இப்போது அதே பாஜக பாணியைப் பின்பற்றி ஸ்டாலின் 200 இடங்கள் என்கிறார் என்று கூறுகின்றனர்.
அப்படிப் பார்த்தால், குஜராத் மாடல் தொங்கி இப்போது 200 தொகுதி இலக்கு வரை பாஜக முன்வைக்கும் தேர்தல் யுக்தியை அப்படியே தமிழக அரசியல் களத்திற்கு அப்ளை செய்து பார்க்கிறதோ என்ற கேள்வும் சந்தேகமும் இயல்பாக எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!
-
மார்ச் 23.. 6 சீட்டுக்கு 1 குறைஞ்சா கூட மீண்டும் அழைக்காதீங்க.. திமுகவுக்கு கெடு விதித்த சிபிஎம்! -
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள் -
10 தொகுதிக்கு குறையக்கூடாது.. 3 காரணங்களுடன் மோத தயாரான விசிக.. திமுகவுக்கு அடுத்த நெருக்கடி -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
புதிய கட்சிகள் வரவால் திமுகவுக்கு நெருக்கடி.. 165-க்கும் குறைவான தொகுதியில்தான் இந்த முறை போட்டியா? -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி!












Click it and Unblock the Notifications