10 சீனியர் அமைச்சர்களை மாற்ற முடிவு? இளைஞர்களை உள்ளே கொண்டு வரும் ஸ்டாலின்? பரபரப்பை கிளப்பிய புள்ளி
சென்னை: சீனியர் அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு அவர்கள் கட்சி வேலைக்கு அனுப்பப்படலாம்.. அதற்கான யோசனையில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் எ.வ வேலு இடங்களில் மூன்றாவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு நடந்து வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பாக அவருக்கு சொந்தமான இடங்களில் நான்காவது நாளாக ரெய்டு நடந்து வருகிறது.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, திருவண்ணாமலையில் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
எ.வ. வேலுவிற்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை நடத்துவதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் படுதோல்வியே ஐடி ரெய்டுக்கு காரணம் என்று திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார். இந்த ரெய்டு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பேட்டி: அதில், சீனியர்களாக இருக்கும் 10 அமைச்சர்களைத்தான் டெல்லி டார்கெட் செய்கிறது. அப்படித்தான் செந்தில் பாலாஜியை டார்கெட் செய்தனர். தற்போது ஏவ வேலுவை டார்கெட் செய்கின்றனர். இடையில் பொன்முடியை டார்கெட் செய்தனர். இப்படி சீனியர்களாக இருக்கும் 10 பேரைத்தான் டார்கெட் செய்து வருகின்றனர். சீனியர்களாக இருக்கும் நபர்கள்தான் டெல்லியின் பொறியில் சிக்கி உள்ளனர். இவர்களை கைது கூட செய்ய வாய்ப்புகள் உள்ளன.

சீனியர்களை கைது செய்து மொத்தமாக கட்சியை முடக்கும் திட்டங்களில் இவர்கள் ஈடுபடலாம். அதனால் ஆட்சிக்கு கெட்ட பெயர் வரும். தேர்தல் நேரத்தில் பாஜக இந்த திட்டத்தை களமிறக்க நினைக்கலாம். இப்படி செய்து ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தலாம். திமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தலாம் என்று நினைக்கலாம். அதற்கு பதிலடி தரும் விதமாக ஸ்டாலின் மனதில் இன்னொரு திட்டம் உள்ளது. ஸ்டாலின் மனதில் பெரிய திட்டம் ஒன்று இருக்கிறது.
ஸ்டாலின் திட்டம்: இந்த ரெய்டு எதிர்பார்த்த ரெய்டுதான். மூத்த அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் கண்டிப்பாக இந்த ரெய்டுகளை தொடருவார்கள். இவர்கள் எல்லாம் திமுகவின் பண வங்கி. அவர்கள் திமுகவிற்கு பேங்க் போல செயல்படும் நபர்கள். அதனால் இங்கே ரெய்டு நடத்துகிறார்கள். பாஜகவின் குறி இவர்கள்தான். இவர்கள் எக்கச்சக்கமாக பணம் சம்பாதித்துவிட்டார்கள் என்பதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மற்றப்படி ரெய்டு மூலம் எதுவும் நடக்காது.
வருமான வரித்துறை ரெய்டு காரணமாக பெரிய சிக்கல் இருக்காது. ஆனால் அமலாக்கத்துறை ரெய்டு நடந்தால் அது சிக்கல் ஆகும். இந்த ரெய்டுகள் எல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான். திமுகவிற்கு வரக்கூடிய பணத்தை கட் செய்ய வேண்டும். திமுகவிற்கு பணம் செல்ல கூடாது என்பதை மனதில் வைத்தே பாஜக இந்த ரெய்டுகளை ஏவி விட்டு உள்ளது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்க ஸ்டாலின் திட்டத்தின் படி முதலில் இருக்கும் 10 சீனியர்களை பார்ட்டி வேலைக்கு இறக்கலாம்.
தேர்தல் பணிகளை கொடுக்கலாம். மந்திரி பதவிகளை பறிக்கலாம். அவர்களை கட்சியில் முன்னுக்கு கொண்டு வரலாம். இளம் நபர்களை அமைச்சர்கள் ஆக்கலாம். சீனியர்களுக்கு கட்சியில் முன்னுரிமை. இளம் எம்எல்ஏக்களுக்கு அமைச்சர்கள் பதவிகள். இளைஞர்களை அமைச்சர் பதவிக்கு கொண்டு வந்து மாற்றம் செய்யலாம் என்று ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்த ஐடியாவில் ஸ்டாலின் இருப்பதாக எனக்கு தகவல் வந்துள்ளது.
பாஜகவிற்கு பதிலடி கொடுக்க ஸ்டாலின் இந்த திட்டத்தில் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications