Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அரசு? அதிமுக-பாஜக முன்வைத்த புகார்கள் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அரசு தங்களின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிப் புகழ் தேடிக்கொள்கிறது என்று பாஜகவும் அதிமுகவும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. அப்படி வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன? அவை ஏன் வைக்கப்பட்டன?

மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டி மக்களிடம் நல்ல பெயர் எடுத்து வருகிறது என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி நேற்று இருந்தார்.

Is DMK sticking a sticker on the schemes brought by the BJP government?

இந்தப் பேச்சுக்கு திமுகவினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். 'வீடு கட்டும் திட்டத்திற்கு 70% நிதியை மாநில அரசுதான் தருகிறது. 30%தான் மத்திய அரசு தருகிறது.

அந்தத் திட்டத்திற்குப் பிரதம மந்திரி இலவச வீடு வழங்கும் திட்டம் என உள்ளது. அதிக நிதியை மாநில அரசு அளிக்கும் பிரதமர் பெயரை ஏன் வைக்க வேண்டும்' என்று மறுப்புத் தெரிவித்திருந்தார்.

பாஜகவினர் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜல் ஜீவன் திட்டத்தை திமுக வீட்டுக்கு வீடு குழாய் குடிநீர் திட்டம் என மாற்றி ஸ்டிக்கர் ஒட்டி உள்ளது என்கிறார்கள்.

Is DMK sticking a sticker on the schemes brought by the BJP government?

இதற்கு திமுக தரப்பு மக்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கென்றே தனியாகக் குடிநீர் வடிகால் வாரியம் என்ற அமைப்பு 1971-72ஆம் ஆண்டு முதல்வராக மு.கருணாநிதி இருந்தபோது நிறுவப்பட்டது. அப்போது மோடி அரசியலுக்கே வரவில்லை என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அதேபோல பிரதம மந்திரி இலவச வீடு வழங்கும் இத்திட்டத்தை மோடி இப்போதுதான் கொண்டுவந்துள்ளார். ஆனால், அதற்கு முன்பே அண்ணாதுரை ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த திட்டத்தை விரிவுபடுத்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி நிறுவினார்.

Is DMK sticking a sticker on the schemes brought by the BJP government?

அதன்பின்னர் அது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. இந்தக் காலத்தில் பாஜக ஆட்சி இல்லை கட்சியே தமிழ்நாட்டிலும் இல்லை மத்தியிலும் இல்லை என்ற வாதத்தை வைத்து வருகிறார்கள்.

ஆனால், அண்ணாமலை இரண்டு ஆண்டுகள் முன்னதாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போதே இந்த திமுக ஸ்டிக்கர் ஒட்டும் சர்ச்சையை அவரது பரப்புரையின் போது தொடங்கிவைத்தார்.

Is DMK sticking a sticker on the schemes brought by the BJP government?

'ஐபிஎல் அணி துபாயில் கப்பு ஜெயித்தால் அது எங்கள் அண்ணன் உதயநிதி சென்றதால்தான் என்கிறார்கள் திமுகவினர். அதைப்போல் பிரதமர் கொண்டு வருகின்ற ஒவ்வொரு திட்டத்தின் மீதும் ஸ்டிக்கர் ஒட்டி , அதை தங்களுடைய திட்டமாக திமுக விளம்பரப்படுத்திக் கொள்கிறது' என்று பொத்தாம் பொதுவாக பேசி வந்தார்.

அதன்பின்னர் கடந்த பத்து மாதங்களுக்கு முன்னதாகவே மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திமுக மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

Is DMK sticking a sticker on the schemes brought by the BJP government?

அதாவது, சென்னை பெருநகர மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கும் திட்டத்தை 2019 ஆண்டு அன்றைய ஆளுநர் திட்டமிட்டார். இதற்காக 'அட்சய பாத்திரம்' என்ற தொண்டு நிறுவனத்திற்குச் சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் வழங்கியது.

இதற்கான செலவுக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதை அப்படியே திமுக அரசு புதியதாகப் பெயர் வைத்து அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி உள்ளது என்று விமர்சித்திருந்தார்.

Is DMK sticking a sticker on the schemes brought by the BJP government?

உண்மையில் நீதிக்கட்சி காலம் 1921இல் ஆட்சிக்கு வந்த போதே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு பள்ளியில் மட்டும் மதிய உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.

திமுகவின் தாய்க் கட்சிதான் அதைத் தொடங்கி வைத்தது. ஆகவேதான் அதன் நூற்றாண்டு விழாவின் அடையாளமாக 2021இல் காலை உணவுத் திட்டத்தை ஸ்டாலின் முதற்கட்டமாக அறிமுகம் செய்தார்.

நீதிக்கட்சி தொடங்கி, காமராஜர், கலைஞர், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என்று தமிழ்நாட்டில் பள்ளிகளில் உணவு வழங்கப்படும் திட்டமானது விரிவடைந்து வந்துள்ளது என்பதே உண்மையான வரலாறு.

Is DMK sticking a sticker on the schemes brought by the BJP government?

பள்ளிக்கூடங்களில் சோறு போடும் வழக்கத்தை இந்தியாவிலேயே முன்னோடியாகச் செய்தது நீதிக்கட்சிதான். அதைப் புரியாமல் விமர்சித்திருந்தார் எல்.முருகன்.

இப்படி சில ஆண்டுகளாக பாஜகவைச் சார்ந்தவர்கள் பலர் இந்த ஸ்டிக்கர் புகாரைப் பேசி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாகவே அண்ணாமலை மற்றும் எல். முருகன் குரலில் மோடி இப்போதே அதைக் குற்றச்சாட்டை முன்வைத்து விட்டுச் சென்றுள்ளார்.

மத்திய பாஜக அரசு 2014இல் கொண்டுவந்த சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தை அறிமுகம் செய்தது. அதன் தொடர்ச்சியாக இந்தத் திட்டம் கடந்த 2022 டிசம்பர் மாதம் இராமநாதபுரத்தில் செயல்படுத்தப்பட்டது.

Is DMK sticking a sticker on the schemes brought by the BJP government?

அப்போது வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்டீல் தள்ளு வண்டிகளில் தமிழ்நாடு அரசு முத்திரையுடன் மத்திய அரசின் லோகோவும் போடப்பட்டிருந்தது.

ஆனால், அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் படம் ஒட்டப்பட்டிருந்தது. பிரதமர் தெரு வியாபாரிகளுக்கான ஆத்மா நிர்பர்நிதி (PM SVANidhi) திட்டமானது ஜூன் 1, 2020 அன்று மத்திய அரசால் தொடங்கப்பட்டது.

இது நகர்ப்புற தெருவோர வியாபாரிகளுக்கான மைக்ரோ கிரெடிட் அளவில் நிதியளிக்கும் திட்டமாகும். இது ரூ.50,000 வரை வியாபாரிகளுக்கு மூலதனக் கடன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Is DMK sticking a sticker on the schemes brought by the BJP government?

ஆனால், மத்திய அரசு செய்த மாற்றத்தை தங்களின் சாதனையாக திமுகவினர் பேசி வருவதாகக் கூறி அண்ணாமலை அந்த அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதைப்போலவே இன்னொரு பக்கம் அதிமுக இதே குற்றச்சாட்டை திமுக மீது வைத்துவருகிறது. அதாவது 2015 மற்றும் 2016 அடுத்து 2019 -2020 இடைப்பட்ட நிதியாண்டில் ரூ.5.5 லட்சம் கோடி ஆட்டோ மொபைல் தொழிலில் அதிமுக சாதனை படைத்து வந்தது என்று அதிமுக தரப்பு திமுக மீது குற்றச்சாட்டியது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் மோட்டார் வாகனங்கள் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் இந்திய அளவில் 78% பங்களிப்பைத் தமிழ்நாடு அளித்தது. அதை மூடி மறைத்து விட்டதாக அதிமுக புகார் ஒன்று முன்வைக்கப்பட்டது.

தமிழக மக்களுக்காகத் தனி அடையாள எண் வழங்கும் திட்டம் ஒன்றுக்கு 'மக்கள் எண்' எனப் பெயர் சூட்டப்பட்டு, கடந்த 2013 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கூடவே அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதை அப்படி திமுக அரசு 'மக்கள் ஐடி' என மாற்றி ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டதாகப் புகார் எழுந்தது.

Is DMK sticking a sticker on the schemes brought by the BJP government?

அதைப்போன்று கடந்த 2022இல் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், 'கடந்த 19.12.2022 அன்று அதிமுக ஆட்சியில் கல்வித்துறையில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட சி.எஸ்.ஆர் நிறுவனங்களின் சமுக பங்களிப்புடன் கொண்டுவரப்பட்ட திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்று தங்கிலீஷில் பெயர் மாற்றம் செய்துள்ளது திமுக அரசு.
அந்தத் திட்டம் ராமநாதபுரத்திற்கு வந்தபோது பிரதமர் மோடி படம் இடம்பெற வில்லை. மாறாக மு.கருணாநிதி மற்றும் ஸ்டாலின் படம் இடம்பெற்றது. அது பற்று பாஜகவினர் கேள்வி எழுப்பி இருந்தனர். திமுக தரப்பிலிருந்து இதற்குப் பதிலளிக்கப்படவில்லை.

2022 செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் அதில், 'அடுத்தவர் சாதனைக்கு தங்களின் அட்ரசை ஒட்டுவதுதான் திராவிட மாடலா?

நரிக்குறவர் மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையைப் பிரதமர் மோடி நிறைவேற்றி வைத்துள்ளார். அதற்காக வாழ்த்துகளை அம்மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த போதும் கூட்டணியிலிருந்த போதும் நரிக்குறவர் மக்களின் கோரிக்கையைக் கிடப்பில் போட்ட திமுக, மத்திய அரசு செய்துள்ள சாதனைக்குத் திராவிட ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைச் செய்வது வேடிக்கையாக உள்ளது' என்று காட்டமாகக் கூறியிருந்தார்.

எம்பிசி பட்டியலிலிருந்த நரிக்குறவர் இன மக்களை எஸ்டி பிரிவுக்கு மாற்ற உத்தரவிட்டிருந்தார் மோடி. அதற்காக முதல்வர் ஸ்டாலினும் பிரதமருக்குக் கடிதம் எழுதி இருந்தார்.

அந்தத் திட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தொடக்க விழாவுக்கு சுமார் 3 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. அது வீண் செலவு' என்று விமர்சித் திருந்தார்.

சில மாதங்கள் முன்பு இன்றைய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை தொடர் பாக ஒரு ஸ்டிக்கர் சர்ச்சையை முன்வைத்திருந்தார்.

'மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை 1500லிருந்து 2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தவறான தகவலை அளித்துள்ளார். அது உண்மையல்ல.

கடும் ஊனம் அடைந்தவர்களுக்கான உதவித்தொகைதான் 1500 இல் இருந்து 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அப்படிப் பாதிக்கப்பட்ட பிரிவினர் வெறும் 15 ஆயிரம் பேர்தான். உதவித்தொகை பெறும் 4 லட்சம் பேருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படவில்லை.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புத் திட்டத்தைக் கொண்டு வந்ததே ஜெயலலிதாதான். திமுக அரசு அதிமுக திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுகிறது' என்று அவர் புகார் எழுப்பி இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+