"கலங்கிய காயத்ரி".. கோடநாட்டையா இழுக்குறீங்க.. ஓ பி ரவீந்திரநாத் "மேட்டரை" கையில் எடுக்கும் எடப்பாடி
சென்னை: ஓ பன்னீர்செல்வம் மகன் ஓ பி ரவீந்திரநாத் மீது காயத்ரி தேவி என்று பெண் வைத்து இருக்கும் புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி கையில் எடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ பன்னீர்செல்வம் நெருக்கடி கொடுக்க தொடங்கி உள்ளார். நேற்று முதல்நாள் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக தேனியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக டிடிவி தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டு வைத்தனர். இந்த நிகழ்வில் பேசிய டிடிவி தினகரன், கோடநாடு வழக்கு தொடர்பான சாட்சிகள் கடந்த அதிமுக ஆட்சியில் அழிக்கப்பட்டது.

விரைவில் உண்மையான குற்றவாளிகளை மக்கள் முன் நிறுத்த வேண்டும். சட்டம் முன் நிறுத்த வேண்டும். அவர்களை தண்டிக்க வேண்டும். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும், என்று அழுத்தம் கொடுத்தனர். இதனால் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு வரும் நாட்களில் நெருக்கடி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.
எடப்பாடி பிளான்: இந்த நிலையில்தான் எடப்பாடி தற்போது ஓ பி ரவீந்திரநாத் விவகாரத்தை விரைவில் கையில் எடுப்பார் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நீங்க கோடநாட்டை கையில் எடுத்தால்.. நாங்கள் ஓபிஆர் மேட்டரை கையில் எடுப்போம் என்று ஓபிஎஸ்ஸுக்கு சொல்லாமல் சொல்ல எடப்பாடி தரப்பு முடிவு செய்துள்ளதாம்.
எம்.பி., ஓ.பி.ரவீந்திரநாத் மீது காயத்ரி தேவி என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அந்த பெண் புகார் கொடுத்துள்ளார். காடூர் பகுதியை சேர்ந்த காயத்ரி தேவி, ஓபி ரவீந்திரநாத் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இப்போது கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்துள்ளார்.
தொடக்கத்தில் நட்பாக பழகியவர், அதன்பின் பாலியல் ரீதியாக அணுக தொடங்கினார், என்னிடம் கேவலமாக பேசினார், என்னை மோசமாக வர்ணிக்க தொடங்கினார், வீடியோ கால் செய்து தொந்தரவு செய்தார், உடலுறவு கொள்ள வேண்டும் என்று என்னை அடிக்கடி அழைத்து தொல்லை கொடுத்தார், நான் இதற்கு நோ சொன்னதால் என்னையும், குடும்பத்தையும் கொலை செய்துவிடுவேன் என்று கூறினார், என்று அந்த பெண் புகார் வைத்துள்ளார்.
கையில் எடுக்கும் எடப்பாடி: இந்த விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி கையில் எடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக இன்று பேட்டி அளித்த மாஜி அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.ரவீந்திரநாத் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓபிஎஸ் மகன்னு பார்க்காதீங்க.. ரவீந்திரநாத் மீதான பாலியல் புகாரில் ஆக்ஷன் எடுக்கணும்.
இதில் பாரபட்சம் பார்க்காமல் ஓ பி ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று ஜெயக்குமார் கூறி உள்ளார். இதற்கு காரணம் கோடநாடு விவகாரம் என்று கூறப்படுகிறது. கோடநாடு விவகாரத்தை ஓபிஎஸ்ன் கையில் எடுக்கும் போதெல்லாம் இந்த பெண் விவகாரத்தை ஓபிஎஸ்ஸுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு கையில் எடுக்கும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரம் தரப்பில் கூறப்படுகிறது.
முக்கியமாக ஓ பி ரவீந்திரநாத் விவகாரத்தில் காயத்ரி தேவிக்கு சட்ட ரீதியான உதவிகளை வழங்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிடுவதாக அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications