எக்ஸ்பிரஸ் ரயிலுக்கே பாதுகாப்பில்லாத டிராக்குகள்? வந்தே பாரத் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் புல்லட் ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் தான் இன்று ஒடிசாவில் நடந்த பயங்கரமாக 3 ரயில்கள் விபத்தில் சிக்கியுள்ளன. இதில் தற்போது வரை 50 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்தியாவில் புல்லட் ரயில் சேவை தொடங்குவது பாதுகாப்பானதா? அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம் அருகே இன்று இரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் பயணிகள் பலரும் சிக்கியுள்ளனர்.

Is Indian rail infrastructure capable of running high and semi high speed bullet trains?

இதற்கிடையே அந்த பெங்களூரில் இருந்து ஹவுரா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலும் தடம்புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதியது. அதேபோல் சரக்கு ரயில் ஒன்றும் மோதியது. இதில் தற்போது வரை 50 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 200க்கும் அதிகமானவர்கள் காயம்டைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்பட உயரதிகாரிகள் விரைந்துள்ளனர். இது மிகப்பெரிய துயர சம்பவமாக நடந்துள்ளது. இந்தியாவில் ரயில்வே துறை நவீனமயமாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் அதிவிரைவு ரயில், புல்லட் ரயில் உள்ளிட்டவை இயக்குவது தொடர்பாகவும், தற்போது இயங்கும் ரயில்களில் வேகத்தை அதிகரிக்கவும் திட்டமிட்டு வரும் நிலையில் இந்த விபத்து என்பது ஒரு எச்சரிக்கை மணியை அடிக்கிறது.

அதாவது இந்தியாவில் புல்லட் ரயில் இயக்குவது சாத்தியமா? அந்த ரயில் இயக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன. மேலும் தற்போது இந்தியாவில் தயாரித்து இயக்கப்பட்டு வரும் வந்தே ரயில் சேவையின் ஸ்பீடை அதிகரிப்பதும் பாதுகாப்பானதா? என்ற கேள்வியை எழும்புகிறது. இந்தியாவில் 2019 முதல் இந்தியாவில் 17 மாநிலங்களை இணைக்கும் வகையில் செமி ஸ்பீட் ரயில்கள் 10 இயங்கி வருகின்றன. அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இதுபோன்று 75 ரயில்களையும், அடுத்த மூன்றாண்டில் 400 ரயில்களையும் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் புல்லட் ரயில் திட்டம் 1.1 லட்சம் கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் புல்லட் ரயில் சேவையை குஜராத் மாநிலம் அகமதாபாத்-மும்பை இடையே இயக்க திட்டமிடப்பட்டது. 2017 ல் பணிகள் துவங்கியது. 2022ல் இத்திட்டத்தை தொடங்க முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சனையால் தாமாதாகி வருகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் புல்லட் ரயில் அகமதாபாத்-மும்பை இடையே 350 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும். இதன்மூலம் 508 கிலோமீட்டர் தொலைவை வெறும் 2 மணிநேரம் 50 நிமிடங்களில் கடக்க முடியும். தற்போது 8 மணிநேரமாக பயண நேரம் இருக்கும் நிலையில் 5 மணிநேரம் குறையும்.

இந்தியாவில் மொத்தம் 7 வழித்தடங்களில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன்படி டெல்லி - வாரணாசி, டெல்லி - அகமதாபாத், மும்பை - நாக்பூர், மும்பை- ஐதராபாத், டெல்லி - அமிர்தசரஸ், வாரணாசி - ஹவுரா, சென்னை - மைசூரு இடையில் புல்லட் ரயில் திட்டங்களை செயல்படுத்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. சென்னை - மைசூரு இடையில் 435 கி.மீ நீளத்திற்கு இந்த ரயில் திட்டம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஜப்பானுடன் இணைந்து இந்தியா செயல்படுத்த உள்ளது.

இதற்கிடையே தான் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்துவது இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் என்றாலும் அதற்கான கட்டமைப்புகளை மத்திய அரசு சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மேலும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் புல்லட் ரயில் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தியாவில் புல்லட் ரயில் 350 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் விபத்துகள் நடந்தால் அது மிகப்பெரிய உயிர் சேதத்தை ஏற்படுத்தும். இதனால் தற்போது இந்திய ரயில்வே துறையை நவீனமயமாகி வரும் நிலையில் புல்லட் ரயில் திட்டத்தை இன்னும் சிறப்பாக திட்டமிடலுடன் மத்திய செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+