மண்டையை பிளக்கும் வெயில்... வீடுகளில் தனிமையில் இருக்கும்.. கொரோனா நோயாளிகள் ஏசி பயன்படுத்தலாமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை வெயில் உச்சத்தில் உள்ள நிலையில், கொரோனாவால் வீடுகளில் தனிமையில் உள்ள நோயாளிகள், ஏசி அறைகளில் இருக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.

Recommended Video

    அந்த ஒரு ஏசி தான் கொரோனாவை பரப்பும்.. தப்புவது எப்படி? டிப்ஸ்

    இந்தியாவில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. 2ஆம் அலையில் அதிகபட்சமாகத் தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சம் வரை சென்றது.

    அதேபோல தமிழகத்திலும் தினசரி வைரஸ் பாதிப்பு 35 ஆயிரம் வரை சென்றது. தற்போதுதான் மாநிலத்தில் வைரஸ் பரவல் வேகம் மெல்லக் குறைந்து வருகிறது.

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    இருப்பினும், மாநிலத்தில் தற்போது வரை வைரஸ் பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. தமிழகத்தில் தற்போது 3.10 லட்சம் பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் தீவிர கொரோனா பாதிப்பு உடையவர்கள் மருத்துவமனைகளிலும், கொரோனா சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் லேசான கொரோனா பாதிப்பு உடையவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

    ஏசி பயன்படுத்தலாமா

    ஏசி பயன்படுத்தலாமா

    கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. மாநிலத்திலுள்ள பல்வேறு இடங்களிலும் வெயில் சதமடித்துள்ளது. அதிலும் கொரோனா பாதிப்பால் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள், இந்த வெப்பத்தால் பெரும் துயரத்தை எதிர்கொண்டுள்ளனர். இப்படி வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள், வெயிலின் தாக்கத்தைத் தணிக்க ஏசிக்களை பயன்படுத்தலாமா என்பது பரவலாக அனைவருக்கும் சந்தேகமாக உள்ளது.

    வூஹான் ஆய்வு

    வூஹான் ஆய்வு

    இதற்கான விடையைப் பார்க்கும் முன்னர், இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வு பற்றிப் பார்க்கலாம். சீனாவின் வூஹான் நகரில் உள்ள உணவகத்தில் ஏசி அருகில் அமர்ந்திருந்த 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆராய்ச்சியாளர் ஆய்வு செய்தனர். அப்போது, உணவகத்தில் இருந்த ஒருவருக்கு அறிகுறி அற்ற கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. அவர் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா பரவியது தெரியவந்ததது. கொரோனா வைரசைக் கொண்ட காற்று, ஏசி மூலம் பரவியது தெரியவந்ததது.

    பொது இடங்களில் ஏசி

    பொது இடங்களில் ஏசி

    இது பொது இடங்களில் உள்ள ஏசிக்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏனென்றால் பொது இடங்களில் அதிக நபர்கள் வந்து போவார்கள். அவர்களில் யாரேனும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும், அது மற்றவர்களுக்குப் பரவிவிடும். எனவே, அலுவலகங்கள், ஹோட்டல்களில் ஆகியவற்றில் சென்ட்ரலைஸ்டு ஏசி முறை இருந்தால், அதைப் பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்தது.

    என்ன செய்யலாம்

    என்ன செய்யலாம்

    பொதுவாகவே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த காற்றோட்டம் உடைய அறைகள் முக்கியம். எனவே, முடிந்தவரை ஜன்னல்களைத் திறந்து வைப்பதன் மூலம் அறைகளில் நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல பசுமையான காட்சிகள் மன ரீதியாகவும் கொரோனா நோயாளிகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

    வீடுகளில் ஏசி

    வீடுகளில் ஏசி

    அதேநேரம் வீடுகளில் இருப்பவர்கள் விண்டோ ஏசிக்களை பயன்படுத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வீடுகளில் இருப்பார்கள் என்பதால், அவர்களின் சுவாசக் காற்றே ஏசிக்கள் மூலம் சுற்றி வரும். இதனால் வீடுகளில் கொரோனா நோயாளி மட்டும் இருந்தால், ஏசிக்களை பயன்படுத்துவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+