6 வருடத்திற்கு முன்பே பதிவுத்திருமணம் செய்த நயன்தாரா - விக்னேஷ்? வாடகைத்தாய் விசாரணையில் பரபர தகவல்?
சென்னை: வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டது தொடர்பான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோர் 6 வருடங்களுக்கு முன்பே பதிவுத்திருமணம் செய்து கொண்டதாக விசாரணையில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு வாடகை தாய் முறையின் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் திருமணம் நடந்து 6 மாதம் கூட முழுமையாக ஆகவில்லை. இந்த நிலையில்தான் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இது சட்டப்படி விதிமீறல் என்று புகார்கள் வைக்கப்பட்டன.
இவர்கள் எந்த முறைப்படி குழந்தை பெற்றுக்கொண்டனர் என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமா, விசாரணை நடத்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், நயன்தாரா - விக்னேஷ் சிவனிடம் விசாரிப்பது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவெடுப்பார்கள். சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து என்ன செய்ய வேண்டும் முடிவெடுப்பார்கள், என்று விளக்கம் அளித்தார்.
இந்தியாவில் வாடகைத்தாய் தடை சட்டம் உள்ளது. ஆனால் இதில் சில விதி விலக்குகள் உள்ளன.
மொத்தம் இரண்டு வகையான வாடகை தாய் முறைகள் உள்ளன. முதல் முறை Surrogacy in the traditional sense அதாவது பாரம்பரிய வகை. இந்த வகை மூலம் தம்பதியில் ஆணின் விந்தணு எடுக்கப்பட்டு வாடகை தாய் செயற்கையான முறையில் கருவூட்டப்படுகிறார்.

இதற்கு இந்தியாவில் தடை உள்ளது. இரண்டாவது முறை Gestational surrogacy எனப்படும் கர்ப்பகால வாடகைத் தாய். இந்த முறையில் ஆணின் விந்தணு, அவரின் மனைவியின் கரு முட்டை சேர்ந்து கருவாக உருவாக்கப்படும். பின்னர் அந்த கரு வாடகை தாயின் வயிற்றில் சேர்க்கப்படும். இதற்கு இந்தியாவில் முழுமையாக தடை இல்லை. இப்படித்தான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனாலும் இவர்கள் விதிப்படிதான் குழந்தைகளை பெற்றுக்கொண்டனரா என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது. 3 பேர் கொண்ட குழு இதற்காக நயன்தாரா - விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முக்கியமான சில ஆவணங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் சமர்பித்ததாக கூறப்படுகிறது.
அதன்படி வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டது தொடர்பான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோர் 6 வருடங்களுக்கு முன்பே பதிவுத்திருமணம் செய்து கொண்டதாக விசாரணையில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஆவணங்களை அவர்கள் விசாரணையில் சமர்ப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.
6 வருடங்களுக்கு முன்பே நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். அதற்கான சான்றுகள் உள்ளன. இதனால் புதிய வாடகை தாய் சட்டம் பொருந்தாது. அப்படியே பழைய வாடகைத் தாய் சட்டமாக இருந்தாலும் 6 வருடங்களுக்கு முன் திருமணம் செய்ததால் நாங்கள் விதிகளை மீறவில்லை என்று நயன்தாரா - விக்னேஷ் சிவன் தரப்பு ஆவணங்களை சமர்ப்பணம் செய்ததாக கூறப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications