Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

400.. 120.. நம்பரை அடுக்கிய "எக்ஸ்பர்ட்".. புட்டு புட்டு வைக்கிறாரே! திமுக என்ன பண்ணுமோ? இதை பாருங்க

வேளாண் சட்டத்துடன் நீட்டை ஒப்பிட முடியாது என்று அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தெரிவித்து உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தமிழ்நாட்டில் மட்டும் இல்லையென்றால் பிற மாநில மாணவர்கள் மட்டும் இங்கே நீட் எழுதி வருவார்களா? நம் மாநில மாணவர்கள் நீட் எழுதி பிற மாநில மருத்துவ கல்லூரிகளுக்கு செல்வார்களா? நீட் எழுதினால் தேசிய அளவில் பிராக்டிஸ் செய்ய முடியும், ஆனால் இப்போது எப்படி செய்வார்கள்? என்று அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் கேள்வி எழுப்பி உள்ளார்.

நீட் தேர்வு விவகாரம் தமிழ்நாட்டில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. நீட் தேர்விற்கு எதிராக சட்ட போராட்டம் செய்வதுதான் ரகசியம் என்று உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்தார். அவரின் இந்த பேச்சை தொடர்ந்து மீண்டும் நீட் தேர்வு விவகாரம் விவாதம் ஆகி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆட்சிக்கு வந்தது நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாடு அரசு மசோதா கொண்டு வந்தது. இந்த மசோதா பல நாட்களாக ஆளுநர் ஆர். என் ரவியால் டெல்லிக்கு அனுப்பப்படாமல் முடங்கி கிடந்தது.

இந்த நிலையில் நீட் தேர்வு தடை செய்யப்படுமா இல்லையா என்று அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பாஜக தடை

பாஜக தடை

அவர் தனது பேட்டியில், பாஜக நினைத்தால் நீட்டை தடை செய்யலாம். ஆனால் அதை அதன் பலன் திமுகவிற்கே சேரும். பாஜகவை.. மோடியை போராடி சரண் அடைய வைத்துவிட்டோம் என்று திமுக கூறும். அதை பாஜக செய்ய வாய்ப்பே இல்லை. நீட்டை தமிழ்நாட்டில் மட்டும் தடை செய்தாலும் பெரிய பிரச்சனை இருக்கும். ஏனென்றால் ஏற்கனவே தமிழ்நாட்டில் 15 சதவிகிதம் ஆல் இந்தியா கோட்டா உள்ளது. இந்த கோட்டா மூலம் தமிழ்நாட்டில் பிற மாநில மாணவர்கள் படிக்கிறார்கள். அதேபோல் நம் மாநில மாணவர்களும் பிற மாநிலங்களில் படிக்கிறார்கள்.

நீட்

நீட்

அப்படி இருக்கும் போது நீட் தமிழ்நாட்டில் மட்டும் இல்லையென்றால் பிற மாநில மாணவர்கள் மட்டும் இங்கே நீட் எழுதி வருவார்களா? நம் மாநில மாணவர்கள் நீட் எழுதி பிற மாநில மருத்துவ கல்லூரிகளுக்கு செல்வார்களா? நீட் எழுதினால் தேசிய அளவில் பிராக்டிஸ் செய்ய முடியும், ஆனால் இப்போது எப்படி செய்வார்கள்? நீட் இல்லை என்றால் தமிழ்நாடு மாணவர்கள் வேறு மாநிலங்களில் எப்படி பிராக்டிஸ் செய்வார்கள். இதெல்லாம் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.

தடை

தடை

இதனால் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் விலக்கு கேட்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அதுவும் கூட தீர்ப்பை பொறுத்தே. இந்த சட்டம் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானதா என்பதன் அடிப்படையில்தான் இதில் விதி விலக்கு கிடைக்கும். அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தீர்ப்பு வந்தால் எல்லா மாநிலங்களிலும் நீட் தேர்வு ரத்தாகும். அதுவே அரசியல் சாசனத்திற்கு ஏற்ற சட்டம்தான் என்று தீர்ப்பு வந்தால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியாது.

அரசு கல்லூரிகள்

அரசு கல்லூரிகள்

ஏனென்றால் தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளுக்கு மட்டும் விலக்கு பெற்றால் அதன்பின் மற்ற மாநிலங்களிலும் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால் தனியார் கல்லூரிகளுக்கு மட்டும் நீட் என்று வைக்க முடியுமா? இதில் நிறைய சிக்கல்கள் வரும். அரசு கல்லூரிகளில் உள்ள ஆல் இந்தியா கோட்டாவை என்ன செய்வார்கள். உச்ச நீதிமன்றம் இதில் வழங்கும் தீர்ப்பை பொறுத்தே இதில் முடிவு வரும். உச்ச நீதிமன்றம் இதை தடை செய்யாது என்று சொல்ல முடியாது. உச்ச நீதிமன்றம் தடை கூட விதிக்கலாம்.

உச்ச நீதிமன்ற தடை

உச்ச நீதிமன்ற தடை

இதே உச்ச நீதிமன்றம்தான் முன்பு தடை விதிக்க முடியாது என்று சொன்னது. இது மாறாது என்று சொல்ல முடியாது. ஆனால் எந்த அளவிற்கு மாற்றம் இருக்கும் என்று சொல்ல முடியாது. நீட் தேர்வு ஸ்மூத்தாக சென்றுகொண்டு இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமே இதை எதிர்க்கிறது. தமிழ்நாடு மட்டுமே இதை அரசியலாக்கி உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் இதை தேசிய அளவில் குழப்ப மாட்டார்கள். நீட் என்பது சரியான முறையான என்று சொல்ல முடியாது. ஆனால் அதே சமயம் பழைய முறை சரியானதா என்றும் சொல்ல முடியாது.

பழைய முயற்சி

பழைய முயற்சி

பழைய முறையில் நாமக்கல் போன்ற மாவட்டங்களில் கோழிப்பண்ணை போன்று அடைத்து வைத்து பயிற்சி கொடுப்பார்கள். அதுவும் தவறு தானே? நீட் தேர்விற்கு 2 வருடம் கோச்சிங் செய்வது போல இதுவும் தவறு தானே? நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் 5 பள்ளிகளில் இருக்கும் மாணவர்கள் எம்பிபிஎஸ் வாங்கினார்கள். 1000 என்ற அளவில் மாணவர்கள் எம்பிபிஎஸ் இந்த பள்ளிகளில் இருந்து சென்றார்கள். அது தவறு தானே? நீட் தேர்வால் கிராம மாணவர்கள் பாதிக்கிறார்கள் என்பது தவறு. ஏனென்றால் நீட் தேர்விற்கு முன்பே 10 ஆண்டுகளில் 120 - 250 மாணவர்கள் வரைதான் மருத்துவ சீட் பெற்றனர். அதை மாற்றியது 7.5 சதவிகித இடஒதுக்கீடு மட்டுமே.இப்போது ஒரு ஆண்டுக்கே 400 பேர் வரை அரசு பள்ளிகளில் இருந்து சீட் பெறுகிறார்கள்;. இந்த இடஒதுக்கீடு அதை சாத்தியமாக்கியது. நீட் முன்னால் இருந்த சிஸ்டம் சரி என்று சொல்வது தவறு.. நீங்களே சொல்லுங்கள் எது சமூக நீதி என்று. என்று சுமந்த சி ராமன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+