வந்தே பாரத்தில் அசைவ உணவு ரத்து செய்யப்படவில்லை.. தெற்கு ரயில்வே தந்த முக்கிய விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலில் திடீரென்று காலை உணவு பட்டியலில் இருந்து அசைவ உணவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அசைவ பிரியர்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில் தெற்கு ரயில்வே முக்கிய விளக்கம் அளித்துள்ளது. அதன்படி வந்தே பாரத் ரயிலில் தொடர்ந்து காலையில் அசைவ உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தமிழ்நாட்டில் நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள பெங்களூர், மைசூர் உள்ளிட்ட இடங்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

vande bharat chennai non vegetarien

வழக்கமான ரயில்களை விட வந்தே பாரத்தில் கட்டணம் அதிகமாக இருந்தாலும் கூட மக்கள் அதில் விரும்பி பயணித்து வருகின்றனர். இதனால் வந்தே பாரத் ரயிலுக்கு நாளுக்கு நாள் மவுசு எகிறி கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தான் சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கான காலை உணவு பட்டியலில் இருந்து திடீரென்று அசைவ உணவு நீக்கப்பட்டுள்ளது. அதாவது ஐஆர்சிடிசி இணையதளத்தின் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே மேலே Popup முறையில் ‛‛அசைவ உணவு மதியம் மற்றும் இரவு உணவுக்கு மட்டுமே கிடைக்கும்'' என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பொதுவாக வந்தே பாரத் ரயிலில் காலை, மதியம், இரவு என 3 வேளை உணவு பட்டியலிலும் அசைவ உணவு இருந்தது. இப்போது காலையில் அசைவ உணவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவலால் அசைவ பிரியர்கள் அதிருப்தியை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி உணவு சாப்பிடுவது என்பது தனிப்பட்ட நபர்களின் உரிமை. அதனை ரயில்வே நிர்வாகம் தீர்மானிக்க முடியாது என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். இது சர்ச்சையை கிளப்பியது.

இதற்கிடையே தான் வந்தே பாரத்தில் காலை உணவில் அசைவ உணவு இல்லை என்ற தகவலை தெற்கு ரயில்வே முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛வந்தே பாரத்தில் காலையில் அசைவ உணவு வழங்கப்படவில்லை என்பது முற்றிலும் தவறானது. காலையிலும் அசைவ உணவு வழங்கப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வேயில் இன்று (அதாவது நேற்று மே 31ம் தேதி) 1,302 அசைவ காலை உணவுகள் வழங்கப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தொழில்நுட்ப கோளாறு காரணமாக அசைவ உணவு குறித்த அறிவிப்பு டிக்கெட் முன்பதிவின்போது ஏற்பட்டு இருக்கலாம். இதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் வழக்கம்போல் தங்களுக்கு பிடித்த சைவ அல்லது அசைவ உணவை வந்தே பாரத் ரயிலில் தொடர்ந்து சாப்பிடலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+