"பதவிக்கே ஆபத்து".. டிசம்பரிலேயே நாடாளுமன்ற தேர்தல்? மோடி மாஸ்டர் பிளான்? இவர் என்ன இப்படி சொல்றாரே!
சென்னை: பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டு இருப்பதாக தமிழ்நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற எம்பி ஒருவர் சந்தேகம் எழுப்பி உள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

அங்கு எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மஜத மொத்தம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பாஜகவின் இந்த படுதோல்வி அதிமுகவிற்கு ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. பாஜகவின் படுதோல்வி நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவிற்கு எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு பக்கம் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு இது புதிய உத்வேகத்தை கொடுத்து உள்ளது.
பாஜகவை பாஜகவின் கோட்டையிலேயே வீழ்த்த முடியும். முறையாக திட்டமிட்டு பாஜகவை வீழ்த்த முடியும் என்று காங்கிரஸ் நிரூபித்து உள்ளது. இனியும் அமித் ஷாவின் வியூகத்திற்கு பாஜக வீழ்ச்சி அடையாது. அவ்வளவு எளிதாக காங்கிரஸ் இனி தோல்வியை தழுவாது என்பதை நிரூபித்துள்ளது.
மோடி: மோடி மிக தீவிரமாக கர்நாடகாவில் மாறி மாறி பிரச்சாரம் செய்தும் கூட பாஜக அங்கே படுதோல்வி அடைந்து உள்ளது. மோடி மீதான நம்பிக்கை மக்கள் இடையே சரிந்து உள்ளதையே இந்த தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு உணர்த்துகின்றன.
இப்படிப்பட்ட நிலையில்தான் அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் தேர்தல்கள் இந்த வருடம் நடக்க உள்ளன. உதாரணமாக தெலுங்கானாவில் சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. ஆனால் அங்கே காங்கிரஸ் - தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி இடையே தான் மோதல் தீவிரமாக உள்ளது.

அங்கும் இஸ்லாமியர்கள் விவகாரத்தை கொண்டு வர பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால் கர்நாடாக தோல்வி காரணமாக பாஜக தனது வியூகத்தை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களிலும் இந்த வருடம் தேர்தல் நடக்க உள்ளது.
இங்கே எல்லாம் ஒரே சமயத்தில் தேர்தல் நடக்கும். இதில் மத்திய பிரதேசத்தில் கடந்த முறையே ஆட்சி மாற்றத்திற்காக மக்கள் வாக்களித்தனர் . இதனால் இந்த முறையும் காங்கிரசுக்கு வாய்ப்பு உள்ளது.
இன்னொரு பக்கம் ராஜஸ்தானில் காங்கிரஸ் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களிலும் தேர்தல் பணிகளை காங்கிரஸ் தொடங்கிவிட்டது. கர்நாடக சட்டசபை தேர்தல் தோல்வி காரணமாக பாஜக இந்த தேர்தல்களில் வெற்றிபெற வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறது.
இந்த நிலையில்தான், பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலை அடுத்த வருடத்திற்கு பதில் முன்கூட்டியே நடத்த திட்டமிட்டு இருப்பதாக தமிழ்நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற எம்பி விசிக ரவிக்குமார் சந்தேகம் எழுப்பி உள்ளார். 5 மாநில தேர்தலோடு சேர்த்து நாடாளுமன்ற தேர்தலை மோடி நடத்த வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

டிசம்பரிலேயே நாடாளுமன்றத் தேர்தலா? என்று அவர் கேள்வி கேட்டு போஸ்ட் செய்துள்ளார்.
அதில், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா,சத்தீஸ்கர், மிசோரம் முதலான மாநிலங்களுக்கு 2023 டிசம்பரில் தேர்தல் நடத்தப்படவேண்டும்.இவற்றில் எதிலும் பாஜக வெற்றிபெற வாய்ப்பில்லை.
மாநிலத் தேர்தல்களில் படுதோல்வியடைந்தால் 2024 பொதுத்தேர்தலிலும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு திரு மோடி அவர்களைப் பிரதமர் வேட்பாளராக்குவதிலும் சிக்கல் ஏற்படும்.எனவே, இந்த மாநிலத் தேர்தல்களோடு நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தத் திட்டமிடப்படுவதாக ஒரு ஊகம் உலவுகிறது.அது உண்மையா?, என்று கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications