மீண்டும் வரும் "பழைய தலை".. நோ சொல்ல போகும் திமுக.. எடப்பாடி பக்கம் துள்ளி ஓடும் திமிங்கிலம்?
சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுக்க தயாராகி வருகிறதாம். இந்த நிலையில் முக்கியமான தேர்தல் வியூக வகுப்பாளர் ஒருவர் மீண்டும் தமிழ்நாடு அரசியலில் தலைகாட்டுவதற்கான திட்டங்களில் இறங்கி உள்ளாராம்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் தற்போது லோக்சபா தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார். மாவட்டம் வாரியாக தேர்தல் பணிகளை எடப்பாடி பழனிசாமி முடுக்கிவிட்டுள்ளார். அதிமுகவின் உட்கட்சி மோதலும் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது. இந்த தேர்தலில் அதிமுகவிற்கு பணியாற்றுவதற்காக முக்கியமான தலை ஒருவரை களமிறக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது தேர்தல் வியூக வகுப்பாளர் ஒருவரை களமிறக்க தொடங்கி உள்ளாராம். திமுகவிற்கு வேலை பார்த்த பிரஷாந்த் கிஷோர் தற்போது ஐ பேக்கில் இல்லை. அவர் நேரடியாக தேர்தல் பணிகளை இனி செய்ய போவது இல்லை. இன்னொரு பக்கம் சுனில் கனகூலு காங்கிரசில் இருக்கிறார்.
காங்கிரஸ் திமுக கூட்டணியில் உள்ளது. இதனால் சுனில் அதிமுகவிற்கு தேர்தல் பணிகளை செய்ய மாட்டார். சுனில் இப்போதும் எடப்பாடியுடன் நட்பாகவே இருக்கிறார். கடந்த தேர்தலில் எடப்பாடிக்கு இவர் தேர்தல் பணிகளை செய்தார். இவர் மீண்டும் எடப்பாடி பக்கம் வர சான்ஸ் இல்லை. இந்த நிலையில் புதிய தேர்தல் வியூக வகுப்பாளர் ஒருவரை எடப்பாடி களமிறக்க உள்ளாராம்.
சமூக வலைதள பிரச்சாரம், தேர்தல் பிரச்சார திட்டமிடல், தொகுதி ரீதியாக சர்வே எடுக்கும் பணிகள் போன்றவற்றை மேற்கொள்ளும் விதமாக எடப்பாடி பழனிசாமி ஒருவரை களமிறக்க உள்ளாராம். இதற்காக டெல்லியை சேர்ந்த சில தேர்தல் வியூக வகுப்பு நிறுவனங்களிடம் பேசி வருகிறாராம். அடுத்த சில வாரங்களில் ஒருவரை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவிற்கு பின் எல்லா தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்துவிட்டது. முக்கியமாக லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தலில் எடப்பாடிக்கு கீழ் அதிமுக தோல்வி அடைந்துவிட்டது. இந்த இமேஜை மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம். இதற்காகவே லோக்சபா தேர்தலுக்காக முக்கியமான தேர்தல் வகுப்பாளரை களமிறக்க 10 தொகுதிகளிலாவது வெற்றிபெறலாம் என்ற திட்டத்தில் இருக்கிறாராம். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்கிறார்கள்.

பிரஷாந்த் கிஷோர்: இன்னொரு பக்கம் பிரஷாந்த் கிஷோர் மீண்டும் எப்படியாவது அரசியல் வியூக பணிகளில் இறங்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறாராம். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளுடன் அவர் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. திமுகவுடன் அவர் மீண்டும் இணைந்து பணியாற்ற வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு பிரஷாந்த் கிஷோர் பணியாற்றினார். ஆனால் அப்போதே சீனியர்களுக்கும் பிரஷாந்த் கிஷோருக்கும் பெரிதாக செட்டாகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் மீண்டும் பிரஷாந்த் கிஷோர் திமுக பக்கம் வர மாட்டார் என்று கூறப்படுகிறது.
இதற்கு மாறாக பிரஷாந்த் கிஷோரை எடப்பாடி பழனிசாமி அணுக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் தற்போது லோக்சபா தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார். மாவட்டம் வாரியாக தேர்தல் பணிகளை எடப்பாடி பழனிசாமி முடுக்கிவிட்டுள்ளார். அதிமுகவின் உட்கட்சி மோதலும் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது.
லோக்சபா தேர்தலுக்கு அதிமுகவினரை தயார்படுத்தும் விதமாக மதுரையில் அதிமுக பொதுக்கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பொதுக்கூட்டத்தை அவர் மதுரையில் நடத்தவும் முக்கியமான ஒரு காரணம் உள்ளதாம். எடப்பாடி என்றால் கொங்கு மண்டல தலைவர் என்ற இமேஜ் இருக்கிறது. அதை உடைக்க எடப்பாடி நினைக்கிறாராம்.
முக்குலத்தோர் அபிமானத்தை பெறும் விதமாக மதுரையில் எடப்பாடி கூட்டத்தை நடத்த உள்ளார் என்கிறார்கள். ஓ பன்னீர்செல்வம் காரணமாக முக்குலத்தோர் அப்செட் ஆக கூடாது என்பதற்காக இந்த கூட்டத்தை அவர் நடத்த வாய்ப்பு உள்ளது. அதோடு முக்கியமாக பிரதமர் மோடியை இந்த கூட்டத்தில் மேடை ஏற்ற எடப்பாடி முடிவு செய்துள்ளாராம். அதோடு கூட்டணி கட்சி தலைவர்கள் 10 பேரை மேடைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளாராம்.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications