எனக்கு அமைச்சராகணும்.. விஜய்யிடம் சொன்ன "நண்பர்".. முதலில் ராகுல்கிட்ட பேசுங்க.. பதிலடி தந்த சி.எம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய்யின் நண்பரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப்ரவீன் சக்கர வர்த்திக்கு, தவெக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அமைச்சராக வேண்டும் என்கிற ஆசை அதிகரித்துள்ளது. தனது இந்த ஆசையை விஜய்யிடம் ப்ரவீன் சக்கரவர்த்தி வெளிப்படுத்தவும், உங்கள் தலைவர் ராகுலிடம் முதலில் உங்க ஆசையை சொல்லுங்கள் என்றாராம் விஜய்.

அதற்கு ப்ரவீன் சக்கரவர்த்தி, திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் போது அதில் போட்டியிட எனக்கு வாய்ப்புத் தருவீர்களா? நீங்கள் ஓகே என சொன்னால், ராகுலிடம் பேசுகிறேன் என்று சொல்ல, எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என விஜய் உறுதி கொடுத்ததாகவும் , இது குறித்து ராகுலிடம் ப்ரவீன் விவாதித்ததாகவும் காங்கிரஸ் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

tvk rahul gandhi

மூன்று மாதங்களுக்கு முன்பு தான் தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி. யாக தவெக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ப்ரவீன் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார். தவெகவுக்கு கிடைத்த முதல் ராஜ்யசபா சீட்டை, தனது நண்பருக்காக விட்டுக்கொடுத்தார் விஜய். அந்த வகையில் ப்ரவீனுக்கு இன்னும் ஐந்தே முக்கால் ஆண்டுகள் பதவி காலம் இருக்கிறது. அதனை இழக்க ராகுல்காந்தி விரும்பவில்லையாம். அதனால், ப்ரவீனின் ஆசை காணல் நீராகிவிடும் என்கிறார்கள்.

இதற்கிடையே, ப்ரவீனுக்கு இப்படி ஒரு ஆசை வர ப.சிதம்பரம் தான் காரணம் என்று சொல்லுகிற காங்கிரஸ் மேலிடத்தில் தொடர்பிலுள்ள எம்.பி.க்கள், காங்கிரசில் ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் ப.சிதம்பரத்தின் பதவி காலம் 2028, ஜூன் மாதம் வரை இருக்கிறது. வெறும் எம்.பி.யாக இருப்பது அவருக்கு போர் அடித்துவிட்டதாம். 2029- ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலி லும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா? என்பதில் ப.சி.க்கு நம்பிக்கை இல்லை.

அதனால், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாள ராக களமிறங்கி வெற்றிப்பெற்று தமிழகத்தின் நிதி அமைச்சராக வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். இதற்காக, சோனியாவிடம் காய்நகர்த்திய அவர், ராகுலிடமும் இது குறித்து விவாதித்தாராம். இன்னும் 15 மாதம் தான் எம்.பி. பதவி இருக்கப்போகிறது ; தமிழகத்தில் நான் நிதி அமைச்சரானால் அது காங்கிரசின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

நீங்கள் இது பற்றி விஜய்யிடம் பேச வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் ப.சிதம்பரம். ஆகட்டும் பார்க்கலாம் என்கிற பாணியில், ப.சி.யிடம் சொல்லி யுள்ளார் ராகுல். ப.சி.யின் இந்த திட்டத்தை அறிந்ததும், ப.சி.க்கு செக் வைக்க விஜய்யிடம் முந்தி கொண்டு தனது ஆசையை கோரிக்கையாக வலியுறுத்தி யுள்ளார் ப்ராவீன் சக்கரவர்த்தி என்கிறார்கள் காங்கிரஸ் எம்.பி.க்கள்.

மரிய வில்சன் என்ற முக்கிய காரணி

ஒருவேளை இந்த ஆசைக்கு முதல்வர் விஜய் சம்மதித்தால், அது சென்னையில் தவெகவுக்குள் பெரிய அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும். ஏனென்றால், தற்போதைய நிதி அமைச்சராக இருப்பவர் நா. மரிய வில்சன்.

விஜய்யின் தீவிர நம்பிக்கைக்குரியவரான மரிய வில்சன் வசம் கஜானாவின் சாவி ஒப்படைக்கப்பட்டதன் முக்கிய நோக்கமே, அரசின் நிதி விவகாரங்கள் தவெகவின் முழுக் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்பதுதான். இப்போது ஆட்சியைப் பிடித்த சில மாதங்களிலேயே, முக்கியமான நிதித்துறையைத் தேசியக் கட்சியான காங்கிரஸிடம் விட்டுக் கொடுத்தால், அது ஆரம்பத்திலேயே ஆட்சிக்கு பலவீனமாகப் பார்க்கப்படும்.

மேலும், மரிய வில்சனிடமிருந்து அந்தப் பதவியைப் பறிப்பது தவெகவின் முக்கியத் தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும். மாநில சுயாட்சியைத் தனது முக்கியக் கொள்கையாகப் பேசும் கட்சிக்கு இது பின்னடைவாகவும் அமையலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நிதித்துறை என்பது வெறும் அலுவலகப் பணி அல்ல; மக்களின் நலத்திட்டங்கள், டாஸ்மாக் கொள்கைகள் மற்றும் கடன் வாங்கும் வரம்புகள் என அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகார மையம். அதை மற்றொரு கட்சிக்கு விட்டுக்கொடுப்பது ஆட்சியின் கடிவாளத்தை மற்றவர் கையில் கொடுப்பது போன்றது.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+