இசக்கி சுப்பையாவுக்காக ஜெபம் செய்த மோகன் சி. லாசரஸ்.. வைரலாகும் வீடியோ: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலை சுற்றி அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. தவெக, அதிமுக, திமுக என கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்த நிலையில், ஒரு ஜெபக்கூட்டத்தில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் இப்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் இசக்கி சுப்பையா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Isakki Subbiah Prayer Mohan C Lazarus Video Tamil Nadu Politics

இதனிடையே, வரும் 14ம் தேதி அம்பாசமுத்திரம் செல்லும் முதல்வர் விஜய், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசுவதுடன், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களையும் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இசக்கி சுப்பையாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில் விஜய்யும் கட்சித் தலைமையும் தீவிரமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. .

அம்பாசமுத்திரம் வெள்ளைத்துரை

இன்னொருபுறம், அதிமுக சார்பில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி வெள்ளைத்துரையை களமிறக்க எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறாராம்.. அதேபோல திமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஏற்கனவே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இப்படி அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் களம் நாலாபக்கமும் சூடுபிடித்துள்ள நிலையில், ஜெபக்கூட்டத்தில் இசக்கி சுப்பையாவுக்கு ஆதரவாக வாக்கு கேட்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஜெபமலையில், கிறிஸ்துவ மத போதகர் மோகன் சி. லாசரஸ் தலைமையில் நேற்று ஜெபக்கூட்டம் நடைபெற்றது. இதில் தவெக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் விபின் சக்கரவர்த்தி, இசக்கி சுப்பையா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மோகன் சி. லாசரஸ்

அப்போது பேசிய மோகன் சி. லாசரஸ், தென்காசி தொகுதிக்கு இடைத்தேர்தல் வருவதாக முதலில் சொல்லி வாக்கு சேகரித்துள்ளார். பிறகு தனது தவறை திருத்திக்கொண்டு, அம்பாசமுத்திரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருவதாகவும், இடைத்தேர்தலில், தவெக வேட்பாளராக போட்டியிடும், இசக்கி சுப்பையாவுக்கு ஓட்டளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

ஆனால், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேபோல், தவெக தலைமை சார்பிலும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை. அப்படியிருக்கும்போது, ஜெபக்கூட்டத்தில் இசக்கி சுப்பையாவை தவெக வேட்பாளராக அறிமுகப்படுத்தி அவருக்கு ஆதரவாக வாக்கு கேட்டிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இசக்கி சுப்பையாவுக்காக ஜெபம் செய்வோம்

அதுமட்டுமல்ல, "சகோதரர் இசக்கி சுப்பையாவுக்காக ஜெபம் செய்வோம்" என்று மோகன் சி. லாசரஸ் கூறும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே தவெகவில், ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் சலசலப்புகள் எழுந்து வரும் நிலையில், தற்போது கிறிஸ்துவ ஜெபக்கூட்டத்தில் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு கேட்டிருப்பது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தவெகவுக்கு அரசியல் ரீதியாக எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+