72 நாட்கள் தீவிர சிகிச்சை.. பலனின்றி காலமான கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ் பாபு! இன்று இறுதிச்சடங்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 72 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி, மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Kolathur VS Babu

தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவிகளின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல் நிலையை கண்காணித்த மருத்துவர்கள், சீரான முன்னேற்றம் இருப்பதாக கூறியிருந்தனர். முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அவரை நேரில் சென்று நலம் விசாரித்து இருந்தனர்.

இப்படி இருக்கையில், நேற்று மதியம் 2.24 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வி.எஸ் பாபுவின் உடல், பெரம்பூரில் மாதவரம் நெடுஞ்சாலை மேல்பட்டி பொன்னப்பன் தெரு சந்திப்பு அருகில், திருநாவுக்கரசு தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இன்று மதியம் இரண்டு மணிக்கு மேல் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்றும், பல்லவன் சாலையில் உள்ள தாங்கல் மயானத்தில் மாலை 4 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறுவதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+